இந்த தொடர் கட்டுரையில், இஸ்ரேலைப் பற்றி பல காரியங்களைப் பார்த்து வந்தோம். கிமு 722ல் அசீரியர்களால் பத்து கோத்திரமான வட தேசம் சிறைபிடிக்கப்பட்டது. சிறைப்பட்டு போன ஜனங்கள், மற்ற தேசங்களில் கலக்கப் பட்டார்கள். அவர்கள் திரும்ப வரவே இல்லை. The lost 10 tribes என்று இன்றும் அழைக்கப் படுகிறார்கள். மற்ற 2 கோத்திரங்கள், யூதா மற்றும் பென்யமீன் யூதேயா நாட்டில் வாழ்ந்தவர்கள். கிமு 586ல் பாபிலோனியரால் சிறைப்பட்டு போன மக்கள், பின்னர், 70 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தங்கள் தேசம் வந்தனர். அதன் பின்னர் மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம் கடந்து, ரோம ஆட்சி வந்தது. மக்கள் கொடுமை படுத்தப்பட்ட அந்த காலத்தில் தான் இயேசு இஸ்ரேலில் பிறந்தார் என்று பார்த்தோம். இயேசுவுக்கு பிறகு கிபி 70ல் எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. யூதேயா மக்களும் சிதறடிக்கப்பட்டனர். இஸ்ரேல் என்ற பெயரே உலக வரைபடத்தில் இல்லாமல் போனது.

நாம் இங்கு யூதர்கள் என்று பேசுவது, முழு இஸ்ரவேலரையும் தான். யூதேயா நாட்டில் இருந்தவர்கள் யூதர்கள். ஆனால் அது இப்பொழுது முழு இஸ்ரவேலரையும் யூதர்கள் என்றுதான் அழைக்கிறோம்.

Brief Timeline

கிபி 70ல் எருசலேம் முற்றிலும் துரத்தியடிக்கப்பட்டது. பாபிலோனியர், கிரேக்கரை விட ரோமர் காலத்தில் தான், இஸ்ரேல் சிதறடிக்கப்பட்டது. அந்நேரத்தில் தான், இந்தியாவிலுள்ள கேரளா, மட்டாஞ்சேரி, அப்போதைய மெட்ராஸ் பகுதிகளில் பரதேசி யூதர்கள் தங்கினார்கள்.

  • அந்த நாட்களில், 12 கோத்திரத்தாருக்கும், வம்ச வரலாறுகளடங்கிய பதிவேடுகள், எருசலேமில், பதிவேடுகளின் இடம் என்றழைக்கப்பட்ட கட்டிடத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது. கிபி 70ல் இந்தக் கட்டிடமும் அதில் வைக்கப்பட்டிருந்த எல்லா பதிவேடுகளும் அழிக்கப்பட்டன். அதற்கு முன்பதாகவே மத்தேயு, லூக்கா சுவிசேஷம் எழுதப்பட்டதால், இயேசுவின் வம்ச வரலாறு நம் கைகளில் இருக்கிறது.
  • சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் சுவர்கள் தங்கத்தால் பூசப்பட்டது. அதை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் சுட்டெரித்து தங்கத்தை உருக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் கிபி70ல் ரோமர்கள், இரண்டாம் தேவாலயத்தை அழிக்கும்போது, ஒருவேளை தங்கம் இருக்குமா என்று பார்ப்பதற்காக, எல்லாக் கல்லையும் இடித்து அக்கினியில் எரித்து பார்த்தார்கள். மத்தேய 24-2ல் இயேசு கூறியபடி, ஒரு கல்லின் மேல் மறு கல் இராதபடிக்குத் தேவாலயம் இடிக்கப்பட்டது.
  • கிபி 132 முதல் 134 வரை எருசலேமில் இருந்த யூதர்கள் முற்றிலுமாக கொல்லப்பட்டனர்.
  • Jerusalem – Cappadocia

Judea – Palestine என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

  • கிபி 300 களில், ரோமர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினர். கான்ஸ்டன்டைன் மன்னன் ஆட்சி பற்றி, ரோம சாம்ராஜ்யத்தில் பார்த்தோம். ரோமப் பேரரசின் கீழ் உள்ள எல்லா நாடுகளும், கிறிஸ்தவத்தை தேசிய மதமாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். யூதர்கள் ஒடுக்கப்பட இது ஒரு முக்கிய காரணம்.
  • கிபி 399ல் கிறிஸ்தவர்கள் எவரும் யூதரை திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றினார்கள்
  • கிபி 439ல் ரோம சாம்ராஜ்யத்தில் எந்த ஒரு அரசாங்க பணியிலும் யூதர்கள் இருக்கக்கூடாது என்று சட்டம்.
  • கிபி 531ல் கிறிஸ்தவருக்கு எதிராக யூதர்கள் சாட்சி சொல்ல முடியாது என்று உத்தரவு
  • யூதருக்கு தலையில் கொம்பு, பின்புறம்‌வால் வைத்து படங்கள் வரைந்து, “கிறிஸ்தவ குழந்தைகளைப் பிடித்து சமைத்து சாப்பிடுவார்கள் யூதர்கள்” என்ற வதந்தியைப் பரப்பினார்கள். எனவே யூதர்கள் கிறிஸ்தவர்களுக்குப் பயந்து, ஊரை விட்டு வெளியேறி, ஒதுக்குப்புறத்தில் மறைந்து வாழ்ந்தனர்.
  • யூதர்கள் கிறிஸ்தவ நாடுகளில் சொந்த நிலம் வாங்கக்கூடாது என்று கட்டளையை கத்தோலிக்க திருச்சபை பிறப்பித்தது.
  • முஸ்லிம் நாடுகளான அரபு நாடுகள் தான் யூதருக்கு அடைக்கலம் கொடுத்தனர். அரபு நாடுகளில், கிறிஸ்தவருக்கு நிகரான அந்தஸ்து கொடுத்து, யூதர்களை வாழ வைத்தனர் முஸ்லிம் கலீஃபாக்கள். யூதர்கள் சுயதொழில் செய்யவும், தன் மத பள்ளிக்கூடங்களைத் தடையின்றி நடத்தவும், கடல்வழி வாணிபம் செய்யவும் அனுமதி அளித்தனர் அரேபியர்கள். ஆனால் 12ம் நூற்றாண்டில், இரண்டாம் உமர் ஆட்சியாளர் ஆனபோது தான், முஸ்லிம் அல்லாதோரை அடக்கும் முறை வந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் முழுவதும் இம்முறை வந்தது.யூதரை தனியாக‌ அடையாளமிட்டு, அரசின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப் படுத்தினர். ஆனால், “யூதர்கள் முஸ்லிம்கள் விட பெரிய வீடு கட்டக்கூடாது. பெரிய கடைகள் வைக்கக்கூடாது. முஸ்லிம்கள் விட அதிகமாக வரி ‌செலுத்த வேண்டும்” என்று சட்டம் இயற்றப்பட்டது. எவ்வளவு தான் முஸ்லிம்கள் நெருக்கினாலும், அந்தக் காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் கொடுத்த நெருக்கடியை விட பல மடங்கு குறைவு தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
  • கிபி 600ல் இஸ்லாம் உருவானது. கேலிஃப் உமர் தலைமையில், எருசலேம், பாலஸ்தீன இஸ்லாமியர் கீழ் வந்தது. கிட்டத்தட்ட 500 வருடங்கள், உள்ளே வரமுடியாமல் தவித்த யூதரை, ‌கேலிஃப் உமர் உள்ளே வருவதற்கு அனுமதி கொடுத்தார்.
  • கிறிஸ்தவர்களால் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட யூதர்களுக்கு, இஸ்லாமியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். பல இஸ்லாமிய ஆட்சியாளரின் கீழே பல மாற்றங்கள் வந்தாலும், யூதர்கள் நன்றாக இருந்தனர்.
  • Le Califat Fatimide அதிகாரத்தின் கீழ் வரும்போது, 1099ல் குருசேட் போர் நடக்க ஆரம்பித்தது.
  • குருசேட் என்றால் ரோமானிய கிறிஸ்தவ விசுவாசி. ரோமர்களுக்கு கிறிஸ்தவம் அரசாங்க மதமாக இருந்ததாலும், சலுகைகளுக்காக கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் என்று அவர்களுடைய சந்ததிகள் கிறிஸ்தவர்களாக பிறந்ததாலும், எருசலேம் முக்கிய பட்டணமாக கருதப்பட்டது.
  • எருசலைமை பிடிக்க மூன்று குருசேட் போர் நடைபெற்றது. குருசேட் யுத்தங்களில், யூதர்களும் முஸ்லீம்களும் இணைந்து போர் செய்தனர்.
  • முதல் குருசேட்டில் ரோமானியர்கள் எருசலேமைப் பிடித்து ஆட்சி செய்துள்ளனர்.
  • இரண்டாம் குருசேட்டில், The Mamluks, துருக்கியர் இஸ்லாமிய வம்சம் எருசலேமில் ஆட்சி அமைத்தது.
  • 1513ல் ஓட்டோமான் பேரரசு ஆட்சிக்கு போனது இஸ்ரேல்.
  • வரலாற்று சான்றுகள் கூறுவது என்னவென்றால், சின்ன சின்ன பிரச்சினைகள் தவிர, யூதரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், யூதர்கள் பாலஸ்தீன பகுதிக்கு இடம்பெயர்ந்தார்கள்.
  • யூதர்கள் Homeland இல்லாத communityஆக அறியப்பட்டார்கள். யூதர்கள் முக்கியத்தொழிலே, Banking, Trading.
  • கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் வட்டிக்கு பணம் கொடுப்பது தவறு என்று போதிக்கப்பட்டதால், யூதர்கள் வட்டிக்கு விட்டு சம்பாதித்தனர்.
  • எல்லா நாடுகளிலும் யூதர்கள் இருந்ததால், அவர்களுக்கு வியாபாரம் செய்வது international அளவில் இருந்தது. யூதனும் யூதனும் இணைந்து வியாபாரம் செய்தார்கள்.
  • தனி நாடு இல்லாமல் இருந்தாலும், பாலஸ்தீனத்தில் இருந்த பாலஸ்தீனியர்களுக்கு கடன் கொடுக்குமளவு யூதர்கள் பணக்காரர்களாகவே இருந்தார்கள்.
  • கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் யூதர்கள் மீது பகை வந்தது. அதற்கு முக்கிய காரணம், யூதர்கள் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தார்கள்.
  • பகை வர இன்னொரு காரணம், யூதர்கள் கிறிஸ்தவர்களைக் கொன்று இரத்தம் குடிப்பவர்கள் என்றும், மக்களைக் கொல்ல நோயைப் பரப்புவர்கள் என்றும் பரவிய வதந்தி தான்.
  • மிக முக்கிய காரணம், மக்களை கவர அரசியல் தலைவர்கள், Antisemitism ஆரம்பித்தார்கள். Semitic மொழி பேசுபவர்களை எதிர்க்கிற சங்கமாகத் தொடங்கி, யூதர்களை மட்டுமே எதிர்த்த சங்கம் Antisemitism.
  • மனித வரலாற்றில் பதிக்கப்பட்ட முக்கியமான யுத்தம், சிலுவைப்போர். Crusade war. கிறிஸ்தவர்களின் புனித பிரதேசமான எருசலேமை, முஸ்லிம்கள் கையிலிருந்து வாங்குவதே யுத்தத்தின் நோக்கம். 1099ம்‌ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர், சுமார் 300 ஆண்டுகள் வரை நடந்தது. இந்த யுத்தம் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்றாலும், ஐரோப்பிய சிலுவை வீரர்கள் முதலில் வேட்டையாடிக் கொன்றது யூதர்களைத் தான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த யூதர்களைக் கொன்று, அவர்கள் சொத்துக்களை வேட்டையாடினர் சிலுவை வீரர்கள்.
  • கிபி 1200ல் இங்கிலாந்தில் வாழ்ந்த யூதர்களை, அங்கிருந்து வெளியேற இங்கிலாந்து அரசு பிரிட்டன் கட்டளையிட்டது.
  • கிபி 1306ல் பிரான்ஸ் அரசு, யூதர்களை நாடுகடத்தியது.
  • கிபி 1355ல் ஸ்பெயின் நாட்டில் 12,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் ஹங்கேரியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • 13ம் நூற்றாண்டில், பிளேக் தொற்றுநோய் ஐரோப்பா முழுவதும் பரவியது. 1347 முதல் 1353 வரை சுமார் ஆறு ஆண்டுகள் இந்நோய் பரவியது. கிட்டத்தட்ட சுமார் 200மில்லியன் மக்கள் இறந்தனர். ஐரோப்பாவில் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறந்தனர். ஆனால் ஐரோப்பிய கிறிஸ்தவர் கஷ்டப்பட்ட அளவுக்கு ஐரோப்பிய யூதர்கள் கஷ்டப்படவில்லை.
  • ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக யூதர்கள் வாழ்ந்து வந்தது, யூதர்களுக்கு பிளேக் பரவாததன் முக்கிய காரணம். யூதர்கள் மத வழக்கத்தின்படி அடிக்கடி தங்களைச் சுத்திகரித்து கொண்டது(கை கால்களை கழுவியது), நோய் பரவாததன் இரண்டாம் காரணம். யூத கலாச்சாரத்தின்படி, இறந்தவரின் உடலை உடனே கழுவி சுத்தப்படுத்தி, உடனே புதைத்து விடும் பழக்கம், யூதர்களுக்கு நோய் பரவாததன் மூன்றாம் காரணம். (பாரம்பரிய யூதனுக்கு கைகளை கழுவுவது மிக முக்கியமானது. இயேசுவின் சீஷர்களையே கேள்வி கேட்டவர்கள் யூதர்கள்)
  • வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒருவரையாவது பறிகொடுத்த கிறிஸ்தவர்களுக்கு, யூதர்கள் யாரையும் இழக்காதது, அதிர்ச்சியைக் கொடுத்தது. கிறிஸ்தவர்களுக்கு யூதர்கள் மீது, கொஞ்சம் பொறாமையும், நிறைய சந்தேகமும் வந்தது. விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில், யூதர்கள் தான் பிளேக் நோயைப் பரப்பினார்கள் என்ற வதந்தியை, கத்தோலிக்க மதகுருமார் பரப்பியதன் விளைவு, நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் உயிருடன் எரிக்கப்பட்டனர் யூதர்கள்.
  • கிபி 1390ல் ஸ்பெயினில் யூதர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மதம் மாற மறுத்த 1,80,000 யூதர்கள், நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
  • கிபி 1495ல் லித்துவேனியா வில் இருந்து அனைத்து யூதரும் வெளியேற்றப்பட்டனர்.
  • கிபி 1502ல் லித்துவேனியா மீந்திருந்த யூதர்கள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் அல்லது அடிமையாக விற்கப்பட்டனர், அல்லது படுகொலை செய்யப்பட்டனர்.
  • கிபி 1541ல் நிபிள்ஸ் யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  • கிபி 1543 Protestant மதப்பிரிவை உருவாக்கிய மார்ட்டின் லூதர் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார்.
  • மார்ட்டின் லூதர் எழுதின “யூதர்களும் அவர்கள் பொய்களும்” என்ற பிரசங்கத்தில், ‘யூதர்கள் மோசமானவர்கள். வஞ்சிப்பவர்கள். யூதரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள கூடாது. யூதர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். யூதர்களின் மத பள்ளிக்கூடங்கள் அடித்து நொறுக்கப்பட வேண்டும். யூதர்களின் ரபீக்கள் பிரசங்கிக்க அனுமதிக்கக் கூடாது. யூதர்களின் புத்தகங்களை ஒழிக்க வேண்டும்’ என்று எழுதியிருந்தார். இந்தக் கருத்துக்கள் protestant பிரிவினரால் யூதரை வெறுக்க வைத்தது.
  • கிபி 1680ல் உக்ரைனில் இன அழிப்பு நடத்தப்பட்டது.
  • கிபி 1873ல் Hilliehim hare என்பவர், யூதர்கள் ஜெர்மனி அரசை பிடிக்க ரகசிய திட்டம் போடுகிறார்கள். அவர்களுக்கு ஜெர்மனி குடியுரிமை வழங்கக்கூடாது என்ற கருத்தை வெளியிட்டார்.
  • கிபி 1894ல் பிரெஞ்சு ராணுவ அதிகாரியான யூதர் ஒருவர், ராணுவ ரகசியங்களை ஜெர்மனிக்குக் கொடுத்ததாகச் சொல்லித் தண்டிக்கப்பட்டார்.
  • கிபி 1901ல் ரஷ்யாவின் உளவுப்பிரிவு ஒரு ஆவணம் வெளியிட்டது. அதில் யூதர்கள் உலகத்தை கையில் எடுப்பதற்கான திட்டத்தை ரபீக்கள் போட்டுக் கொண்டிருப்பதாக வெளியிடப்பட்டது. அது ரஷ்யாவில் யூத இன அழிப்பு நடைபெற காரணம் ஆகியது. அந்நேரத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த அத்தனை யூதரும் கொல்லப்பட்டனர்.
  • கிபி 1917ல் சோவியத் புரட்சி காலத்தில், உக்ரைனில் வாழ்ந்த 50,000 யூதர்கள் அழிக்கப்பட்டனர்.
  • கிபி 1941 முதல் 1945க்குள் ஹிட்லர் மூலம் 60,00,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
  • இப்படி பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் அடித்து விரட்டப்பட்ட போது, தங்கள் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் யூதர்களுக்கு வந்தது.
  • Zionist organizationஎன்ற அமைப்பு 1897ல் உருவாகிறது. என்னதான் அனைத்து நாடுகளும், யூதரை நெருக்கினாலும், உலகம் முழுவதும் இருந்த யூதர்கள் பெரும் பணக்காரர்களாகவும், சர்வதேச அளவில் மற்ற யூதருடன் தொடர்புடையவர்களாகவும் இருந்தனர். முதல் சீயோனிஸ்ட் கான்கிரெஸ் ஆகஸ்ட்1897ல் Basel, Switzerlandல் நடைபெற்றது.
  • சீயோனிஸம் என்பது, உலகெங்கும் உள்ள யூதருக்கு, பாலஸ்தீனத்தில்(அதாவது பெயர் மாற்றப்பட்டிருந்த இஸ்ரேலில்) சொந்த நாடு அமைத்துக் கொடுப்பது. எல்லா நாடுகளிலும் இருந்த யூதர்களுக்கு, ஒரு நம்பிக்கையைக் கொடுக்கவும், பாலஸ்தீனத்தில் அவர்களுக்கு விவசாய நிலம் வாங்கவும், வியாபாரம் பாலஸ்தீனத்தில் செய்யவும், அரசாங்கம் மூலம் இஸ்ரேலை திரும்பப் பெறுவது பற்றியும் கலந்துரையாடுவதே சீயோனிஸத்தின் முக்கிய கொள்கைகள்.
  • மேற்கண்ட தேசிய கீதம் ஏற்கனவே முதல் பதிவுகளில் பார்த்தோம். இதை Naftali Herz Imber என்ற கவிஞர், 1878ம் ஆண்டு கவிதையாக எழுதினார். சீயோனிஸ்ட் ஆர்கனைசேஷன் உருவாகியதே 1897ல் தான். அதற்கு முன்பதாகவே இந்தக் கவிதை எழுதப்பட்டது. 18வது சீயோனிஸ்ட் கான்கிரெஸ் ல் தான், அதாவது 1933ல் தான், இந்தக் கவிதை தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்‌பட்டது.
  • இஸ்ரேல் தேசம் பிறந்தது மே 14,1948. ஆனால் officialஆக, இந்தக் கீதம் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்‌பட்டது நவம்பர் 2004ல் தான்.
  • முதல் உலக யுத்தம் முடிவில், எல்லா நாடுகளும் ஜெர்மனிக்கு எதிராக இருந்தார்கள். ஜெர்மனியில் பொருளாதார இழப்பீடு, ஆயுதப் பற்றாக்குறை, நிலங்களை இழத்தல் என்று பெரிய நஷ்டம் காணப்பட்டது. முதல் உலக யுத்தத்தின் முடிவு, Versailles ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் ஜெர்மனி, 10 சதவீத நிலத்தையும், 12.5 சதவீத மக்களையும், 16 சதவீத நிலக்கரியையும், 48 சதவீத இரும்பு தொழிற்சாலையையும் இழந்தது.
  • ஹிட்லர் ஒரு சாதாரண பெயின்ட்டர். படங்கள் சிறப்பாக வரைபவர். முதல் உலக யுத்தத்தில் பங்கு பெற்ற இராணுவ வீரர் ஹிட்லர். இந்த வெர்சைல்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஹிட்லருக்கு கோபத்தை வருவித்தது. மக்களிடம் மேடை போட்டு பேச‌ ஆரம்பித்தார். அவரது பேச்சுத்திறன் அநேகரை அவர் பக்கம் இழுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரமும் ஹிட்லருக்கு வந்தது.
  • பின்னர் மக்களை வேறுபிரிக்கத் தொடங்கினார் ஹிட்லர். Pure Germanians தனியாக பிரித்தார். தாத்தா பாட்டி யாராவது ஒருவர் யூதராக இருந்தாலும், அவர்களை யூத கணக்கில் மட்டுமே வைத்தார். யூதரில் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் இருந்தாலும், அவர்கள் நாட்டை வைத்து, அவர்களையும் யூதனாகவே பிரித்தார் ஹிட்லர். ஹோலோகாஸ்ட் எந்திரம் கண்டுபிடித்து, யூதரின் கையில் ஐந்து இலக்க எண்ணை அடையாளமாக பொறித்தார்.
  • சரித்திரக் குறிப்பின்படி, 1,00,000 யூதர்கள் ஜெர்மனி சார்பாக முதல் உலக யுத்தத்தில் கலந்து கொண்டு, அவர்களில் 12,000பேர் இறந்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால் யூதரில் ஒருவர் கூட யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்தார் ஹிட்லர்.
  • ஜெர்மன் தேசமே முழுவதுமாக நலிந்து போகும்போது, யூதர்கள் மட்டும் பணக்காரர்களாகவே இருந்தது ஹிட்லருக்கு ஆத்திரத்தை அளித்தது. நம் தேசத்தில் வாழ வந்தவர்கள், நம்மை விட நன்றாக வாழ்கிறார்கள் என்று பொறாமையும் சேர்ந்தது. ஜெர்மனி இனம்தான் உலகில் சிறந்தது என்று மார்தட்டி பிரச்சாரம் செய்த ஹிட்லருக்கு, யூதர்கள் ஜெர்மானியர்களை விட புத்திசாலிகளாக இருப்பதை ஏற்க முடியவில்லை.
  • யூதன் எந்த ஒரு அரசாங்க பணியிலும் இருக்கக்கூடாது, பிஸினஸ் செய்யக்கூடாது, யூதனின் கடையில் ஜெர்மன் மக்கள் எந்த பொருளும் வாங்கக்கூடாது, யூதன் எந்த ஒரு யுனிவர்சிட்டி அல்லது பள்ளியில் படிக்கக்கூடாது என்று சட்டங்கள் இயற்றி ஒடுக்கினார் ஹிட்லர்.
  • ஆன்டி செமிடிக் கொள்கை பரப்பிய‌ ஹிட்லரின் நாஜி படையில், மார்ட்டின் லூதர் எழுதின “On the Jews and their Lies” யூதனும் அவன் பொய்களும் என்ற புத்தகம் அதிகமாக காணப்பட்டது. அந்த புத்தகத்தில் அவர் ‌எழுதி இருந்த கருத்துகளும், யூதர் மீது ஹிட்லருக்கு கோபத்தை வரவழைத்தது எனலாம்.
  • மார்ட்டின் லூதர், முதலாவது யூதர்களின் மனந்திரும்புதலுக்காக 1537 வரை உழைத்தார். பின் நாட்களில், 1543ல் அவர் எழுதிய Anti Judaic & Anti Semitic கட்டுரையான, யூதனும் அவன் பொய்களும், யூதரை அழிப்பதற்கு தூண்டியது.
  • ஹிட்லர் 60,00,000 யூதர்களை கொலை செய்தார் இரண்டாம் உலக யுத்தத்தில். பெண்கள், கர்ப்பிணிகள், பிள்ளைகளை விஷவாயு நிரம்பிய அறையில் தள்ளி, சீக்கிரமாக கொலை செய்தார். ஆண்களுக்கு, ஓய்வு கொடுக்காமல், கடுமையான வேலை கொடுத்து, அதை செய்ய முடியாமல் போகும்போது கொலை செய்தார். கிட்டத்தட்ட 2,00,000 மாற்றுத்திறனாளிகளை கொலை செய்தார் ஹிட்லர். யூதர்களை ஹிட்லர் கொலை செய்யக் காரணம் நாட்டுப்பற்று ஓங்கிய மனப்பான்மை, மனிதநேயத்தை மறந்தது.
  • 1917ல் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஹெல்போர்ட், யூதர்களுக்கு தனிநாடு ஏற்படுத்தி தரப்படும் என்று பிரகடனம் செய்தார்.
  • 1948ல் ஐநாவின் அங்கீகாரத்துடன், அரபு முஸ்லிம்கள் எதிர்ப்பையும்‌மீறி பாலஸ்தீனமாக இருந்த அவர்கள் தேசத்தில், மறுபடியும் இஸ்ரேல் என்ற நாடு உருவானது. பல்வேறு நாடுகளில் இருந்தும் யூதர்கள் இஸ்ரேலுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இஸ்ரேல் உருவானபோது, யாருக்கும் சரளமாக எபிரேய மொழி தெரியவில்லை, எனவே வந்த அனைவருக்கும் எபிரேய மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. என்னதான் யூதர்கள் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், பாலஸ்தீனர்களே கடன் வாங்குமளவு பெரும் பணக்காரர்களும் யூதர்களுக்குள் இருந்தனர். நிலச்சுவான்தாரரிடம் இருந்து, நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.
  • இஸ்ரேல் தேசம் உருவான அடுத்தநாளே, சுற்றிலுமிருந்த அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு வந்தது. ஆனால் ஒருநாள் குழந்தையான இஸ்ரேல் அந்தப் போரில் வெற்றி பெற்றது கடவுள் கிருபையே.
  • 1967ல் ஜூன் மாதத்தில், இஸ்ரேலின் எல்லைகளில் வந்த அரேபிய கூட்டுப்படைகள், இஸ்ரேலின் பெயரை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க தயாராக வந்தன. எகிப்து சிரியா ஜோர்தான் ஈராக் நாடுகளில் இருந்து 1,40,000 வீரர்கள் ஆயுதமேந்தி தயாராக இருந்தனர். 950 விமானங்கள் தயாராக இருந்தன. ஆனால் இஸ்ரேல், அனைத்தையும் எதிர்கொண்டு, அவர்களை திணறடித்தது.
  • 1967ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பங்குபெறச் சென்ற வீரர்களில் சுமார் 11 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இஸ்ரேல், 18 ஆண்டுகள் சல்லடை போட்டுத் தேடி, கொலைக்கு காரணமான அனைவரையும் பல்வேறு நாடுகளில் வைத்து கொலை செய்தது. இஸ்ரேலைப் பொறுத்தவரை இன்றும் பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம்.
  • 1976ல் இஸ்ரேலிலிருந்து பாரீஸ் சென்ற விமானம் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. உகாண்டாவில் தஞ்சமடைந்த இந்த தீவிரவாதக் குழுவை, உகாண்டாவின் கண்களில் மண்ணைத் தூவி, மீட்டு வந்து, உகாண்டாவில் சர்வாதிகாரியாக இருந்த இடியமீனை நிலைகுலைய வைத்தது இஸ்ரேல்.
  • தற்போது இஸ்ரேலின் பலம் என்றால், அது அவர்களின் உளவுப்படை, Mossad தான். மும்பை தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலை எல்லாம், ஏற்கனவே மொசாட் அறிவித்து எச்சரித்தது. அவ்வளவு பலம் வாய்ந்த உளவுப்பிரிவு இஸ்ரேலின் கூடுதல் பலம். இவர்களுடைய இந்த சாதனைகளை வரும் பகுதிகளில் அறிந்து கொள்ளலாம். ஆனாலும் இந்த 2023ல் நடந்த யுத்தம் பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்காத இடத்தில் மொசாட் தோற்றது என்னவோ உண்மைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *