இஸ்ரேலின் சாகச பாதைகள் (1948 யுத்தம்)

1947ல் UN ஐக்கிய நாடுகள், resolution181 மூலம், பிரித்தல் திட்டத்தை (Partition Plan) கொண்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்தை அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் பிரித்து கொடுக்கும் திட்டம் அது. பிரிட்டிஷ் இந்த விவகாரத்தை UNஇடம் கொடுத்து, கை கழுவிக் கொண்டது. ஏனெனில், யூதர்களைப் போலவே அரபியர்களும், compromise பண்ணுவதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆனாலும் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமாக பிரித்து, 1948 மே15ல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாகவும், இஸ்ரேல் என்ற குட்டி தேசம் உருவாகிறதாகவும் UN அறிவிக்கவும், சுற்றிலுமிருந்த அரபு நாடுகள், மே15ம் தேதிக்கு யுத்தம் செய்ய தயாராகின. எனவே அவசர அவசரமாக மே 14ம் தேதியே இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுத்து மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொண்டன.

1948, மே 14 ம் தேதி, இஸ்ரேல் விடுதலை அடைந்த போது, சுற்றி இருந்த ஏழு அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக யுத்தம் அறிவித்தது. ஒரு நாள் குழந்தையான இஸ்ரேலைத் தாக்க அரபு நாடுகள் தயாராகி நின்றது. அப்போது இருந்த இஸ்ரேல் பிரதமர், ‘ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிக்கையிலும், ரேடியோவிலும் அறிவிப்பு கொடுத்தார், “இஸ்ரேலில் இருக்கிற இஸ்ரவேலரும் அரபியரும் இணைந்து அரபு நாடுகளுககு எதிரான யுத்தத்தை சந்திக்கலாம்” என்று. ஆனால் அரபு நாடுகள் ஒரு அறிவிப்பு கொடுத்தார்கள். “நாங்கள் எந்த அரபியரையும் கொல்ல விரும்பவில்லை. ஒரு மணி நேரத்திற்குள் எல்லா அரபியரும் வெளியே வந்து விட்டால், இஸ்ரேலரை முழுமையாக அழித்து விடுவோம்”

“அரபு பெரிய நாடுகளா? ஒரே ஒரு நாள் குழந்தையான இஸ்ரேலா?” என்ற யோசனை செய்த பாலஸ்தீனியர்கள், “UKன் 700 ராணுவ தளவாடங்களை யோர்தான் வைத்திருந்ததால், நிச்சயமாக அரபு நாடுகள் தான் ஜெயிக்கும்” என்று நினைத்து, அந்நாட்டை விட்டு வெளியேறினர். (ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யத்தில் UK இஸ்ரேலுக்கு செய்த இந்த துரோகம் பற்றி படித்தோம் அல்லவா?) அரபு நாடுகள் பெரும்படையாய் வந்தவர்கள், 1000 வழியாக ஓடிப்போனார்கள். நிச்சயமாக நம் தேவனின் கரம் இஸ்ரவேலர்களுடன் இருந்தது. இதுதான் இஸ்ரேல்- பாலஸ்தீனியர் போர் இன்றும் நடக்க காரணமாக இருந்த தொடக்கபுள்ளி.

யுத்தம் ஆரம்பிக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போர் நடக்கவில்லை.  Egypt, Iraq, Jordan, Lebanon, and Syria என சுற்றிலுமிருந்த எல்லா நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக, ஒவ்வொரு பக்கத்திலிருந்து தாக்கியது. ஆரம்பத்தில் இஸ்ரேல் செய்வதறியாமல் திகைத்து நின்றது. ஆனால் அதன்பின் பதிலுக்கு போர் செய்து, அரபியர்களை துரத்தி அடித்தது இஸ்ரேல்.

இந்தப் போரில் பங்கேற்ற ஒரு எகிப்திய ராணுவ வீரன், பிற்காலத்தில் தான் எழுதிய புத்தகத்தில் இவ்வாறு எழுதி இருந்தானாம். “ நாங்கள் சீனாய் தீபகற்பம் வழியாக இஸ்ரேலுக்குள் நுழையப் போகும்போது, எங்கிருந்தோ திடீரென லட்சக்கணக்கான குளவிகள் எங்களை நோக்கி வந்தது, குளவிகள் எங்களை விரட்டிக்கொண்டு போய், எகிப்தின் எல்லையில் விட்டு விட்டு திரும்பி விட்டது. வந்த குளவிகள் எங்களை எதுவும் செய்யவில்லை. எங்களை எங்கள் எல்லைக்கு திரும்ப அனுப்பியது. இது நிச்சயமாக இஸ்ரேலின் தேவனுடைய கரமே”

இதேபோல இன்னொரு அருமையான சாட்சி. இஸ்ரேலர் தொடர்ந்து யுத்தம் பண்ணி போய்க்கொண்டு இருக்கும் போது, திடீரென பாலைவன புயல் அடித்ததாம். எல்லா வீரர்களும் தரையில் படுத்து விட்டார்களாம். ராணுவ தளபதி கெஞ்சி ஜெபித்தாராம், “ ஆண்டவரே நீரே எங்களுக்கு எதிராக நின்றால், வேறு யார்தான் எங்களுக்கு உதவ முடியும்” என்று. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எந்த பதிலும் இல்லை. நமக்கு கடலில் எப்படி அலையின் சீற்றம் புயல் நேரங்களில் காணப்படுமோ, அப்படியே பாலைவன புயலில் மண் சுழன்று சுழன்று அடிக்கும். ஒரு மணி நேரம் கழித்து புயல் முடிந்ததும், சோர்ந்து படுத்திருந்த வீரர்கள் எழுந்து பார்த்து, ஆச்சரியப்பட்டு போனர். மணலில் ஏற்பட்ட புயலில், சில காலடிகளுக்கு முன், எதிரிகள் மணலில் புதைத்த கண்ணி வெடிகள் வெளியே தெரிந்தது. அந்த புயல் வராதிருந்தால், நிச்சயமாக அந்த கண்ணி வெடியில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பர். ஆனால் இப்போது, புயலின் மூலம், கர்த்தர் எல்லாக் கண்ணி வெடிகளையும் அவர்களுக்கு காண்பித்துக் கொடுத்தார். எவ்வளவு நல்ல தேவன் அல்லவா நம் தேவன்.

அந்த யுத்தம் நிச்சயமாக நம் கர்த்தருடையது. அதனால்தான் அவர்கள் வெற்றி அடைந்தனர். அந்த யுத்தம் முடிந்ததும் அதிபர் செய்த முதல் வேலை, “எல்லா எல்லைகளையும் அடைத்து விடுங்கள். யுத்தத்தில் நமக்கு உதவாத எந்த ஒரு அரபியனும் இனி உள்ளே வரக்கூடாது” என்று. அப்படி வெளியேறி இன்று வரை அகதிகளாக இருப்பவர்கள் தான் பாலஸ்தீன அரேபியர்கள். கிட்டத்தட்ட 7,50,000 பாலஸ்தீனியர்கள் அந்த யுத்தத்தில் மற்ற அரபு நாடுகளை நம்பி வெளியேறினர். ஆனால் இன்றும் அவர்கள் அகதிகளாக இருப்பது இஸ்ரேலின் எல்லைக்குள் மட்டுமே. அவர்களை வெளியேறச் சொன்ன எந்த அரபு நாடுகளும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த பாலஸ்தீன அகதிகளின் வேலை வாய்ப்பு கூட இன்றும் இஸ்ரேலில் தான் இருக்கிறது.

அந்த யுத்தம் அன்று நடைபெறவில்லை என்றால், இஸ்ரேல் என்பது மிகவும் சிறிய நாடாக இருந்திருக்கும். ஆனால் ஒரு நாள் குழந்தையான இஸ்ரேல், தொடர்ந்து சண்டை போட்டு, (15 மே 1948 – 10 மார்ச் 1949) அரபியர்களுக்கு UN பிரித்துக் கொடுத்த 50% இடத்தையும் பிடித்துக் கொண்டது. இஸ்ரேலின் முக்கிய இடங்களாக இருக்கும் west bank (மேற்கு கரை)யை யோர்தானிடமிருந்தும், Gazaவை எகிப்திடமிருந்தும் கைப்பற்றியது இஸ்ரேல். இந்த யுத்தத்தில் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனியர்கள். கிட்டத்தட்ட 7,00,000 பேர் தங்கள் வீட்டை இழந்து அகதிகளாக மாறினார்கள். இந்த யுத்தத்துக்கு முக்கிய காரணம், United Nation’s Partition Plan தான். இஸ்ரேலுக்கு எதிராக Egypt, Jordan, Syria, Iraq, Lebanon பங்கேற்றாலும், வெற்றி பெற்றது இஸ்ரேல்தான். இதுதான் இஸ்ரேலின் முதல் யுத்தம். தொடர்ந்து இஸ்ரேல் பெற்ற வெற்றிகளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *