ஆறு நாள் யுத்தம் (Operation Focus) 1967

இப்பதிவை வாசிப்பதை விட, இந்த காணொலியில் இஸ்ரேல் ஜெயித்த வரலாறை கேட்பது மிகவும் நன்றாக இருக்கும். நேரம் இருந்தால் இஸ்ரேலின் இந்த வெற்றியை தமிழில் கேட்டு இரசிக்கலாமே!

https://www.youtube.com/watch?v=zzCsCs8TxBc&t=62s

இஸ்ரேலின் வீரதீர சாகசங்களில் ஒன்று, ஆறுநாள் யுத்தம். அது என்ன ஆறு நாள் யுத்தம்? இஸ்ரேலில் எதிரி நாடுகளான அரபு நாடுகள், மீண்டும் ஒரு யுத்தத்தை அறிவித்தது. எகிப்து, ஈராக், ஜோர்தான் சிரியா ராணுவம் இணைந்து ஒரு யுத்தத்தை அறிவித்தது. இஸ்ரேலை முற்றிலுமாக அழிப்பது அவர்களின் நோக்கம். சுமார் 1,40,000 படை வீரர்கள் இஸ்ரேலை சூழ நின்றனர். 2500 யுத்ததாங்கிகள் இஸ்ரேலை எந்த நேரத்திலும் தாக்க தயாராக எல்லையில் நின்றது. 959 யுத்த விமானங்கள், 1100 கவச வாகனங்கள், 1000 ஆட்லரிகள், எகிப்து மற்றும் ஜோர்டானின் சக்தி வாய்ந்த குண்டுகள், எல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக தயாராக இருந்தது. ஒரே நேரத்தில் எல்லாம் தாக்கினால், இஸ்ரேலின் சாம்பல் கூட மிஞ்சாது. உலக வரைபடத்தில் இனி இஸ்ரேல் என்ற பெயர் இருக்காது என்று அரபு நாடுகள் ஆர்ப்பரிக்க, மற்ற உலகநாடுகள் இஸ்ரேலையே நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் அரபு நாடுகள் அறியாத உண்மை, இஸ்ரேலுக்கு துணையாக இருப்பது Mossad. ஒரு யுத்தம் இஸ்ரேல் ஆரம்பிக்கிறது என்றால், அதற்கு முன்பாக மொசாட் எவ்வளவு வேலை செய்யும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

1967 ஜீன் 5 காலை 7.45மணிக்கு, அவர்கள் திட்டப்படி, மிகக் குறைந்த அளவில் இருந்த இஸ்ரேலிய விமானங்கள், மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.

• முதல் தொகுதி, பிற நாட்டு எல்லைக்குள் சென்று, அங்கிருக்கும் போர் விமானத்தை அழிக்க வேண்டும்.

• இரண்டாம் தொகுதி இஸ்ரேலர்களின் தாக்குதலுக்கு தப்பி, எகிப்து சீரியா விமானங்கள் வானில் பறக்க வரும்போது, வானில் வைத்து அவர்களை அழிக்க வேண்டும்.

• மூன்றாம் தொகுதி, எதிரி நாடுகளின் விமான தளங்கள், விமான ஓடுதளத்தை சேதப்படுத்த வேண்டும்.

ஒருவேளை எதிரி நாட்டு விமானம் பறக்க் கூடிய சூழல் இருந்தால், இஸ்ரேலுக்கு அது ஆபத்து என்பதால், இப்படி திட்டம் போட்டு அதை செயல்படுத்தினர்.

அதே நேரத்தில் கீழே நிலப்பரப்பில், இஸ்ரேல் படையை விட 3 மடங்கு பெரிய அரபு படைகள், எதிர் திசையில் சீனாய் வனாந்தரத்தில், எந்த நேரத்திலும் பாய்வதற்கு தயாராக இருந்தது. அரபு நாடுகள் தாக்க ஆரம்பித்தால், இஸ்ரேலின் படை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இஸ்ரேல் முதல் தாக்குதலை நிகழ்த்தி, அரபு நாடுகளை குழப்பி விடுவது தான் இஸ்ரேலின் திட்டம்.

திடீரென இஸ்ரேல் படைகள் முன்னேறி வரவும், என்ன நடக்கிறது என்று எதிரி படைகள் யோசிப்பதற்கு முன்பாகவே, எகிப்திய படைகளின் மீது தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல். முன்னேறி வருவது மட்டுமல்லாமல், சுற்றி வளைத்து தாக்கியடிப்பது தான் இஸ்ரேலின் திட்டம்.

சீனாய் பாலைவனத்தில் திடீர் திடீரென நுழைந்த இஸ்ரேலிய விமானங்கள், எகிப்திய ஆயுதக் களஞ்சியம் மற்றும் போருக்கான கட்டளை மையத்தை குறிபார்த்து தாக்குதல் நடத்தியது. காசாவில் நிலைகொண்டிருந்த எகிப்திய கமோண்டாக்கள் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர். இஸ்ரேல் படை, முன்னால் இருந்து தாக்குகிறதா? பக்கவாட்டில் இருந்து தாக்குகிறதா? அல்லது பின்னால் இருந்து தாக்குகிறதா? என்று திணறினர் எதிரி படைவீரர்கள். கமண்டாக்கள் பிடிக்கப்பட்டதால், கட்டளையும் எதுவும் வரவில்லை எதிரி படைவீரர்களுக்கு. ஒரு கட்டத்தில் சாரையாக பின்வாங்கிய எகிப்திய படைவீரர்கள் மீது, இஸ்ரேலிய விமானம் சக்தி வாய்ந்த குண்டுகளைப் போட்டது. தோல்வியை ஒத்துக்கொண்டதாக ஒப்பந்த கையெழுத்து இட்டார் எகிப்திய தளபதி மேஜர் ஜெனரல் அப்துல் முனா. காசா இஸ்ரேல் வசம் வந்தது.

திடுதிப்பென்று எருசலேமுக்குள் நுழைந்தது இஸ்ரேல் படை. அதுவரை எருசலேம் இஸ்ரேலுக்கு சொந்தமாகவில்லை. இந்த புதிய தாக்குதல் யுக்தியால் ஜோர்டான் படை திணறியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த எருசலேம், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல ஜோர்டான் படைவீரரை கைது செய்து கொண்டு சென்றது இஸ்ரேல். அதில் பல ஜோர்டான் இராணுவ வீரர்கள், ராணுவ உடையில் இல்லாமல் இருந்தது, இஸ்ரவேலர் அந்தப் பட்டணத்துக்குள் நுழைந்த வேகத்தைக் காட்டுகிறது. மேற்கு கரை நோக்கி பீரங்கியைத் திருப்பிய இஸ்ரேல் கடுமையாக ஜோர்டானிடம் சண்டை இட்டது. சரித்திர பிரதேசமான பெத்லகேம் எரிகோ பட்டணங்களும் இஸ்ரேல் வசம் வந்தது. ஜோர்டான் படைக்குத் தலைமை தாங்கிய மன்னன் ஹூசைன், குரல் தளுதளுக்க, ஊடகம் முன்னிலையில் தோல்வியை ஏற்றுக் கொண்டது, அரபு உலகத்தை அதிரச் செய்தது. இந்த யுத்தத்தின் மூலமாக எருசலேம் இஸ்ரேலுக்கு கிடைத்து விட்டது. அருமையான தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன். அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள். எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

சகரியா 12:6

இஸ்ரேல் சுதந்திர நாடாக உருவாகும்போது, 1948ல் அதன் தலைநகர் டெல்அவிவ். 2018ம் ஆண்டு வரை இஸ்ரேலின் தலைநகர் Tel Aviv.

இப்பதிவில் இஸ்ரேல் பெற்ற வெற்றி பகிரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னே மொசாட் செய்த சூழ்ச்சிகள், எதனால் இஸ்ரேல் வெற்றி பெற்றது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *