|

பண்டிகைகள்-8 (பெந்தெகோஸ்தே)

பெந்தெகோஸ்தே (வாரங்களின் பண்டிகை)

(Pentecost/ Feast of Weeks/ Shavuot)

மொத்தம் 7 பண்டிகைகள் இஸ்ரவேலர் கொண்டாடும்படி தேவன் வேதத்தில் கொடுத்திருக்கிறார் என்று பார்த்த நாம், அவை ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

  1. பஸ்கா பண்டிகை                         நிசான் 14
  2. புளிப்பில்லா அப்ப பண்டிகை   நிசான் 15
  3. முதற்கனி பண்டிகை                   நிசான் 16
  4. பெந்தெகோஸ்தே                          சீவான் 6
  5. எக்காள பண்டிகை                       திஷ்ரி 1
  6. பாவ நிவிர்த்தி நாள்                      திஷ்ரி 10     
  7. கூடாரப் பண்டிகை                       திஷ்ரி 15-22

இந்த 7 பண்டிகைகளில், 3 பண்டிகைகளுக்கு, யூத ஆண்கள் எங்கிருந்தாலும், எருசலேமுக்கு கூடி வர வேண்டும் என்று தேவன் கூறியிருப்பார்.

 அந்த 3 பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, கூடாரப்பண்டிகை என்று வேதத்தில் பார்க்கிறோம். இதில், பஸ்கா என்பது, நாம் பாவ வாழ்விலிருந்து, இயேசுவின் இரத்தத்தின் மூலம் மீட்கப்பட்ட அனுபவத்தைக் குறிக்கிறது. பெந்தெகோஸ்தே என்பது, நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற அனுபவத்தைக் குறிக்கிறது. கூடாரப்பண்டிகை என்பது மூன்றாவது அபிஷேகத்தைக் குறிக்கிறது. இந்த மூன்றாவது அபிஷேகம் என்பது, கடைசி காலங்களில் வாழும் நமக்கான அபிஷேகம். அதைப் பற்றி வேறே தலைப்பில் படிக்கலாம். இந்த மூன்றாவது அனுபவத்தை, Third anointing, Joy anointing, Third Pentecost, Sukkot Experience என்று பல பெயர்களில் கூறுகிறார்கள். தமிழில் பார்த்தால், Pastor.Alwin Thomas மூன்றாம் பெந்தெகோஸ்தே என்று இந்த அனுபவத்தைக் கூறுகிறார்.

ஏழு பண்டிகைகளில், முதல் 4 பண்டிகைகள் Spring seasonல் வருவதாகவும், மீதமுள்ள 3 பண்டிகைகள் fall seasonல் வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில், முதல் 3 பண்டிகைகள் Spring seasonலும், நான்காவது பண்டிகை springன் முடிவிலும், fallன் ஆரம்பத்திலும் இருக்கிறது. எனவே பெந்தெகோஸ்தே பண்டிகை என்பது, இரண்டு சீசனையும் connect பண்ணும் ஒன்றாக உள்ளது. பஸ்காவையும் சுக்கோத்தையும் இணைப்பது பெந்தெகோஸ்தே.

பஸ்காவின் காலத்தில், பார்லி அறுவடை நடக்கும். பெந்தெகோஸ்தே காலத்தில் கோதுமை அறுவடை நடக்கும். சுக்கோத் காலத்தில், ஒலிவ மற்றும் திராட்சைப் பழங்களின் அறுவடை நடக்கும். இந்த பெந்தெகோஸ்தே காலத்தில், தேவன் கோதுமையில் 2 புளித்த அப்பத்தை செய்து போஜனபலியாக கொண்டு வரச் சொல்கிறார். இதுவரையில், புளிப்பில்லா அப்பம் சாப்பிட வேண்டும் என்று தான் பார்த்தோம், ஆனால் இப்பொழுது புளித்த அப்பங்கள். அதனோடு 7 one year lamb(ஓரு வயது ஆட்டுக்குட்டி), 1 young bull(இளங்காளை), 2 rams (ஆட்டுக்கடா) பலியிட வேண்டும். (லேவி 23 : 15-22).  Wave Offering (அசைவாட்டும் காணிக்கையாக), அப்பம், 2 ஆட்டுக்குட்டி கொண்டு வர வேண்டும் என்று தேவன் கூறுகிறார்.

இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன என்றால், 2 புளித்த அப்பம் என்பது, மேசியா(கிறிஸ்து) வந்து, யூதர் மற்றும் புறஜாதிகளை, அவருக்குள் ஒன்றாக்கி விடுவார் என்பதைக் குறிக்கிறது. 2 அப்பங்களில், ஒன்று நம்மைத் தான் குறிக்கிறது. வேதத்தில் புளிப்பு என்பது பாவத்தைக் குறிக்கும். எனவே இங்கு புளித்த அப்பம் நமக்கு சொல்வது, மேசியாவின் இரண்டாம் வருகை வரையில் பூமியில் பாவம் இருக்கும்.

நாம் ஏற்கனவே எகிப்து முதல் சீனாய் வனாந்திரம் வரை என்கிற பதிவில், எகிப்தில் புறப்பட்டது முதல், சீனாய் மலையில் தேவன் இறங்கி பேசியது வரை உள்ள காலம் சரியாக 50 நாட்கள் எனவும், அதே நாளைத் தான் தேவன் வாரங்களின் பண்டிகையாக கொண்டாடச்சொன்னார் எனவும், பார்த்தோம். எபிரேயத்தில் ஐம்பது என்பது Shavuot. அதம் கிரேக்க பதம், Pentecost.  எனவே பெந்தெகோஸ்தே என்பது 50 என்கிற அர்த்தம் குறிக்கிறது. ஆண்டவர் கொண்டாடச் சொல்லிய அந்த நாளை கொண்டாடும்போது தான், அப்-2ல் பெந்தேகொஸ்தே அனுபவம் உருவானது.

 யாத்19ம் அதிகாரத்தில் தேவன் சீனாய் மலையில், மோசேயோடு பேசிய அனுபவம் இருக்கிறது.

மோசே மலைக்கு ஏறிப் போகும்போது, தேவன் கற்பனைகளையும், கட்டளைகளையும் கொடுப்பார். வேதத்தில் 10 கற்பனையும், 613 கட்டளைகளும் உள்ளது. இதைத் தான் நியாயப்பிரமாணம் என்று கூறுவர். இந்த பெந்தேகோஸ்தே அனுபவமாகிய சீனாய் மலையில், மோசேயிடம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.

இயேசு உயிர்தெழுந்த பின்னர் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார்.  அப்போஸ்தலர் 2ல் இந்த அனுபவம் உள்ளது.

அப்போஸ்தலர் காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இந்த பெந்தெகோஸ்தே அனுபவம், எருசலேமில் (சீயோன் மலையில்) நடந்தது. எனவே சீனாய் மலையில் நியாயப்பிரமாணமும், சீயோன் மலையில் ஆவியானவரும் கொடுக்கப்பட்டார்கள். இந்த இரண்டு அனுபவங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

  1. இரண்டு அனுபவங்களும் மலையில் (Mountain)ல் நடைபெற்றது. ஒன்று சீனாய் மலையில், மற்றொன்று சீயோன் மலையில்.
  2. புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் இந்த அனுபவத்தை பெற்றனர். எகிப்திலிருந்து மீட்கப்பட்டவர்கள், சீனாய் மலையிலும், கிறிஸ்துவின் மூலம் மீட்கப்பட்டவர்கள் சீயோன் மலையிலும் பெற்றார்கள். சீனாய் மலையில் இஸ்ரவேலர் என்கிற ஜனம் உருவானார்கள், சீயோன் மலையில், கிறிஸ்தவர்கள் உருவானார்கள்.
  3. இரண்டு அனுபவத்திலும் தேவனுடைய ஜனங்கள் ஒரு பரிசை(Gift) பெற்றுக்கொண்டனர். சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் (Torah), சீயோன் மலையில் ஆவி (Spirit).
  4. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின், 40 நாட்கள் மோசே மலைக்கு ஏறிப்போய், தேவனிடம் கற்பனைகள் எழுதிய பலகை வாங்கி வருகிறார். ஆனால் ஜனங்கள் பொன் கன்றுக்குட்டியை செய்ததால், 3000 பேர் கொல்லப்பட்டனர். சீயோன் மலையிலோ, பேதுரு எழுந்து நாங்கள் குடித்து வெறிக்கவில்லை என்று பேசும்போது, ஏறக்குறைய 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர்.
  5. எகிப்திலிருந்து வந்த 50ஆவது நாள், சீனாயில் மோசே மூலமாக தேவன் சில காரியங்களைக் கூறும்போது, மக்கள் அதை ஏற்றுக்கொண்டு, நீர் சொன்னபடியே செய்வோம் என்று உடன்படிக்கை செய்தார்கள். சீயோனிலோ, புதிய உடன்படிக்கை அருளப்பட்டது.
  6. சீனாய் மலையில், Law (கற்பனைகள்) 2 கற்பலகைகளில் கொடுக்கப்பட்டது. சீயோனிலோ Law நம் இருதயத்தில் எழுதப்பட்டது.
  7. சீனாய் மலையில் நெருப்பு எல்லாருடைய கண்களுக்கு முன்பாக மலையில் இறங்கியது. சீயோனிலோ நெருப்பு, ஒவ்வொருவர் தலையிலும் வந்து அமர்ந்தது. சீனாயில் நெருப்பை விட்டு ஜனங்கள் தள்ளி நின்றனர். சீயோனிலோ நெருப்பு ஜனங்களிடம் வந்தது.
  8.  சீனாய் மலையில், தேவ பிரசன்னம், மேகம் மற்றும் நெருப்பு மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, தேவன் ஆலயமாகிய ஆசரிப்பு கூடாரத்துக்குள் சென்றார். சீயோன் மலையில், தேவன் அவர் இருப்பிடமாகிய ஆலயத்திலிருந்து, புதிய இருப்பிடமாகிய நமக்குள் வந்து வாசம் பண்ண ஆரம்பித்தார்.
  9. சீனாய் மலையில் தோரா (Torah) கொடுக்கப்பட்டது. சீயோன் மலையில், தோரா எழுத உதவிய பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார்.

இப்படி பல ஒற்றுமைகள் சீனாய்க்கும், சீயோனுக்கும் உள்ளது. முக்கியமானது, அனேகம் பேர் பேசி கேட்டிருப்போம், நியாயப்பிரமாணம்- ஆவி. அல்லது நியாயப்பிரமாணம் – கிருபை என்று கேட்டு இருப்போம். நியாயப்பிரமாணத்தினால் மரணம் வந்தது என்று கேட்டிருப்போம். ஆனால் அவை எல்லாம், சரியாகப் புரிந்து இருக்கிறோமா என்றால், கேள்விக்குறி தான்.

ஏன் நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்டது?

வேதத்தின் அடிப்படை வசனம் என்ன என்று நமக்குத் தெரியும்.

இவ்வசனம் தான் வேதத்தின் ஆதார வசனம். இதை நோக்கி தான் வேதம் பயணப்பட்டிருக்கும். ஆதாமுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் சேத் குடும்ப வரலாறு தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதாமிலிருந்து இயேசு வரை உள்ள ஒரு குடும்பத்தின் வரலாறு தான் வேதபுத்தகம். நாமும் இன்று, இயேசுவின் மூலமாக தேவனுடைய பிள்ளைகள் ஆனதால், நாமும் அந்த குடும்பத்துக்குள் வந்து விட்டோம். ஆதாமை முதலாவது தேவன் ஏன் உருவாக்கினார்?

அவர் ஆதாமை படைத்ததன் நோக்கம், தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படியாக. ஆனால் பாவத்தினால் மனிதன் விழுந்து போனான். ஆதாம் செய்த பாவம் என்ன?

ஆதாம் செய்த தவறு, தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. தேவன் ஆதாமை மட்டும் தண்டித்து விட்டு, அவனை கொன்று போட்டு, வேறே மனிதர்களை உருவாக்கி, தேவனுக்கு கீழ்ப்படிகிறார்களா என்று சோதிக்கவில்லை. ஆதாம் மூலமாக, எல்லா மனிதனுக்கும் நியாயத்தீர்ப்பு வந்து விட்டது. ஆதாம் பாவம் செய்ததால் மரணம் வந்தது என்பது தெரியும். உடனே ஆதாம் செத்துப் போனாரா? இல்லையே! அப்படியானால் என்ன மரணம் வந்தது? ஆதாம் ஆவியில் மரித்தார், நித்திய ஜீவனை இழந்து போனார்.

இப்பொழுது தேவன் மனிதனை மீட்க கொடுத்த ஒன்று தான், நியாயப்பிரமாணம். நியாயப்பிரமாணம் மூலமாக, மனிதன் இழந்த ஜீவனை ஆண்டவர் மீண்டும் கொடுக்க நினைத்தார். பாவம் கீழ்ப்படியாததால் வந்தது. நியாயப்பிரமாணத்துக்கு (Law) கீழ்ப்படிந்தால் ஜீவன் வரும் என்று தேவன் நியாயப்பிரமாணம் கொடுத்தார்.  அதாவது ஆதாம் இழந்து போன ஜீவனை, நியாயப்பிரமாணம் மூலமாக திரும்ப கொடுக்க நினைத்தார். ஒரு பொய் சொன்னாலே அது நியாயப்பிரமாணத்தை மீறுவது தான். அப்படியானால் எந்த மனிதனால் வெற்றி பெற முடியும்? எல்லாருமே சீக்கிரமாக பாவத்தில் விழுந்து விட்டனர்.

அப்படியும் தேவன் மனிதர்களைக் கைவிடவில்லை. மீண்டுமாக வாய்ப்பு கொடுத்தார். வருடத்துக்கு ஒரு முறை (பாவ நிவாரண நாள் என்று படித்தோம் அல்லவா!) பாவ நிவாரண பலி செலுத்தலாம். அப்படியானால், அந்த வருடத்தில் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அதற்கு பின்னர் மனிதன் பாவம் செய்யக்கூடாது. ஆனால் இதிலும் மனிதன் தோற்றுப் போனான். ஒவ்வொரு வருடமும் அவன் பாவ நிவாரண பலி செலுத்தவேண்டி இருந்து. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனால் நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியாமற் போயிற்று.

ஒரு மனிதன் எவ்வளவு துன்மார்க்கனாக இருந்தாலும், ஒருவேளை அவன் பாவ நிவாரண பலியிட்டு, பின்னர் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து நடந்தால், அவனுக்கு ஜீவன் உண்டு. அப்படியானால் அவன் ஆதாம் இழந்த ஜீவனை பெற்றுக் கொள்வான் என்று வேதம் கூறுகிறது.

மனிதனால், பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியவில்லை. எனவே இயேசு, மனிதனாய் உலகத்துக்கு வந்து, முழுவதும் மனித தன்மையோடு வாழ்ந்து, பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து, மரணத்தை ஜெயித்தார். ஜீவனை பெற்றுக் கொண்டார். இயேசு தேவகுமாரன் என்பதால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மை தான். ஆனால் மற்றொரு காரியம், அவர் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து, மரணத்தை ஜெயித்ததால் உயிர்த்தெழுந்தார்.

நம்மில் அனேகர், நியாயப்பிரமாணம் வேண்டாம் என்று, அதை அழிப்பதற்காக இயேசு வந்தார் என்று நினைக்கிறோம். ஆனால், இயேசுவோ, ஒரு கட்டளையும் விடாமல், எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். நியாயப்பிரமாணம் என்றாலே கீழ்ப்படிதல் தான். அதை இயேசு நிறைவேற்றினார்.

ஆக, இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். மேலும் அவர் மீட்கும் பொருளாக வந்தார்.

மீட்கும் பொருள் என்பது, ஒரு பொருளை கொடுத்து, மற்றொரு பொருளை வாங்குவது. அதாவது, என்னிடம் உள்ள ஒரு காரைக் கொடுத்து, அதற்கு ஏற்ற காசை வாங்கினேன் என்றால், அந்த காசு என்னிடம் வருவதற்கு மீட்கும் பொருள், அந்த கார் தான். பழைய ஏற்பாட்டில், தேவன் கண்ணுக்கு கண், ஜீவனுக்கு ஜீவன் என்று பிரமாணத்தில் கூறியிருப்பார். உண்மையில் நம் தேவன் அப்படி சொல்பவரா? இல்லையே! இவ்வசனங்கள் இயேசுவுக்கு நிழலாக எழுதப்பட்டது. நம்முடைய ஜீவனுக்கான மீட்கும் பொருள், அவருடைய ஜீவன்.

Similar Posts

  • |

    Day 84 (25-03-2025)

    Scripture Portion: Joshua 9-11 யோசுவா 9 1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, 2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள். 3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, 4ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல்…

  • |

    Day 138 (18-05-2025)

    Scripture Portion: Psalm 26,40,58,61-62, 64 சங்கீதம் 26 (தாவீதின் சங்கீதம்) 1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2கர்த்தாவே, என்னைப் பட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். 6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம்…

  • |

    Day 341 (07-12-2025)

    Scripture Portion: Acts 20:1-3, Romans 1-3 அப்போஸ்தலர் 20:1-3 1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். 2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். ரோமர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி…

  • |

    Day 276 (03-10-2025)

    Scripture Portion: Matthew 2, Luke 2: 39-52 மத்தேயு 2 1ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். 3ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 4அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். 5அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள…

  • |

    Day 205 (24-07-2025)

    Scripture Portion: Isaiah 35-36 ஏசாயா 35 1வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். 2அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்;…

  • |

    Day 79 (20-03-2025)

    Scripture Portion: Deuteronomy 28-29 உபாகமம் 28 1இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். 3நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன்…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *