bible reading plan

  • |

    Day 255 (12-09-2025)

    Scripture Portion: Ezekiel 46-48 எசேக்கியேல் 46 1கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது. 2அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக. 3தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்….

  • |

    Day 254 (11-09-2025)

    Scripture Portion: Ezekiel 44-45 எசேக்கியேல் 44 1பின்பு அவர் என்னை கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார். 4பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய்…

  • |

    Day 253 (10-09-2025)

    Scripture Portion: Ezekiel 42-43 எசேக்கியேல் 42 1பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார். 2நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம். 3உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது. 4உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான…

  • |

    Day 252 (09-09-2025)

    Scripture Portion: Ezekiel 40-41 எசேக்கியேல் 40 1நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று. 2தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது. 3அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம்…

  • |

    Day 251 (08-09-2025)

    Scripture Portion: Ezekiel 38-39 எசேக்கியேல் 38 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகுதேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். 4நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரை வீரர்களையும்,…

  • |

    Day 250 (07-09-2025)

    Scripture Portion: Ezekiel 35-37 எசேக்கியேல் 35 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன். 4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு…

  • |

    Day 249 (06-09-2025)

    Scripture Portion: Ezekiel 32-34 எசேக்கியேல் 32 1பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய். 3ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்….

  • |

    Day 248 (05-09-2025)

    Scripture Portion: Ezekiel 28-31 எசேக்கியேல் 28 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: 2மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. 3இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. 4நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும்…

  • |

    Day 247 (04-09-2025)

    Scripture Portion: Ezekiel 24-27 எசேக்கியேல் 24 1ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான். 3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு. 4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து…

  • |

    Day 246 (03-09-2025)

    Scripture Portion: Ezekiel 22-23 எசேக்கியேல் 22 1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி, 3அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, 4நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன்…