Torn Open

இன்று காலை வேதம் தியானிக்க ஒரு சோம்பலாக இருக்கவே, English Bible எடுத்து, மாற்கு 1ஆம் அதிகாரம் வாசிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் மாற்கு தான் short and sweet ஆக எழுதி இருப்பார் என்பது ஒரு காரணம்.
10ஆம் வசனம் வாசிக்கும்போது, அங்கேயே நின்று விட்டேன். வானம் திறக்கப்பட்டது என்று மிக சாதாரணமாக நான் வாசித்த விஷயம், இன்று வானம் கிழிக்கப்பட்டது என்று தோன்றியது.
- opened → திறக்கப்பட்டது
- torn open / torn apart → கிழிக்கப்பட்டு திறக்கப்பட்டது / பிளந்து திறக்கப்பட்டது
இங்கே மாற்கு பயன்படுத்தும் Greek வார்த்தை σχίζω (schizō). இதன் அடிப்படை அர்த்தம் “கிழித்தல், பிளத்தல், கிழிந்து திறத்தல்”.
அதனால் Mark 1:10-ன் காட்சியை literal-ஆ எடுத்தால்: “வானம் கிழிந்து திறக்கப்பட்டதை அவர் கண்டார்” என்பது தான் English-ல் வரும் “torn open” என்ற வார்த்தையை strong ஆக காட்டும்.
அமைதியாக இருக்கும் தருணத்தில் யோசித்து பாருங்கள். வானம் திடீரென கிழிந்து,உள்ளிருந்து ஒரு புறா பறந்து பூமிக்கு வருவதைப் பாருங்கள். நம் மூளைக்கு அப்பாற்பட்ட காரியம்தான். ஆனாலும் யோசித்து கொண்டு வாருங்கள், அதுதான் அன்றையத்தினம் நடந்தது.
சுவாரசியமான இன்னொரு விசயம் தெரியுமா? மாற்கு இதே “schizō” என்ற வார்த்தையை புத்தகத்தின்(சுவிசேஷத்தின்) முடிவிலும் பயன்படுத்துகிறார்.
Mark 1:10 – heavens torn open
Mark 15:38 – temple curtain torn in two (ஆலயத்தின் திரை மேலிருந்து கீழாக “கிழிந்தது.”)
அதாவது Mark-ன் Gospel-ல் ஆரம்பத்திலும் முடிவிலும் “கிழித்தல் / பிளத்தல்” என்ற ஒரே வார்த்தை வருகிறது.
1. Mark 1:10 — Heaven is TORN OPEN
இயேசு ஞானஸ்நானம் பெறுகிறார். இங்கே கவனிக்க வேண்டியது:
- Heaven → Earth
- வானம் கிழிந்து திறக்கப்படுகிறது → பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறார்.
அதாவது, Jesus-ன் ministry ஆரம்பிக்கும் தருணத்தில், தேவனுடைய பிரசன்னம் மனிதர்களிடம் வருவது போல ஒரு picture கொடுக்கப்படுகிறது.
இது ஒரு சாதாரண “sky opened” scene அல்ல. Heaven was torn open.
2. Mark 15:38 — Temple Curtain is TORN
Jesus சிலுவையில் மரித்தவுடன்:
“The curtain of the temple was torn in two from top to bottom.” — Mark 15:38
- Top → Bottom
- அது மனிதன் கிழித்தது அல்ல.
மேலிருந்து கீழாக கிழிந்தது.
Temple curtain (திரைச்சீலை) எதை represent செய்தது?
அது மகா பரிசுத்த ஸ்தலத்தை (Most Holy Place-ஐ) மற்ற பகுதிகளிலிருந்து பிரித்தது. பிரதான ஆசாரியர் கூட வருடத்தில் ஒருநாள் மட்டுமே உள்நுழைய முடியும்.
அதனால் இது வெறும் துணி கிழிந்த சம்பவம் இல்லை. A barrier was removed. தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த பிரிவினை நீங்கியது இயேசுவின் இரத்தத்தால்.
| மாற்கு 1:10 | மாற்கு 15: 38 |
| வானம் கிழிக்கப்பட்டது | தேவாலய திரைச்சீலை கிழிக்கப்பட்டது |
| இயேசுவின் ஊழியம் ஆரம்பம் | இயேசுவின் பூமிக்குரிய வேலையின் முடிவு |
| ஆவியானவர் இயேசுவின் மேலே இறங்கினார் | தேவ பிரசன்னம் எல்லாருக்கும் கிடைத்தது |
| வானத்திலிருந்து பூமிக்கு | பிரிவினையிலிருந்து பிரசன்னத்துக்கு |
| மனிதனிடத்துக்கு இயேசு வந்தார் | இயேசு மூலம், தேவனோடு உறவாடும் பாக்கியம். |
இன்றைக்கு நாம் எவ்வளவு சோர்ந்து போயிருந்தாலும் பரவாயில்லை. தேவனை விட்டு தூரம் போய் விட்டோம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. கிழிந்த இரு சம்பவங்களுமே நம்மை தேவனிடம் இணைக்கிறது என்பதை மறக்கக் கூடாது.
நீங்கள் தனியாக இல்லை. திரைச்சீலை கிழிந்ததால், தேவன் நமது அருகில் தான் இருக்கிறார். இயேசு நம்முடன் தான் இருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும்போது வாழ்வு மாறும்.
