விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)
இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது. இயேசு கிறிஸ்து என்னும் விலையேறப்பெற்ற நாமம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயரைச் சொல்லி, நம் நாவால் அறிக்கையிட்டு, வெற்றியைப் பெற்றுக் கொள்வோம்.
- இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கின் மீது வெற்றியைப் பேசுகிறேன்.
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14-14
- எனக்கு விரோதமாய் வழக்காட இருப்பவர்களோடு நீர் வழக்காடி, என்னை இரட்சிக்கிறீர்.
உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்; ஏசாயா 49-25
- என் மீது யாரும் குற்றம் சுமத்த முடியாது. தேவனே என்னை நீதிமான் ஆக்கியிருக்கிறீர்.
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ரோமர் 8-33
- கர்த்தர் என்னை நீதிமான் ஆக்குகிறவர். அவர் என் பக்கத்தில் இருக்கிறார். யாராலும் என்மீது குற்றம் சுமத்த இயலாது.
என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏசாயா 50-8
- கர்த்தர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டீர்.
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; சங்கீதம் 138-8
- எனக்கு விரோதமாக பிசாசானவன் என்ன திட்டம் போட்டாலும், இயேசுவின் நாமத்தில் அதை ரத்து செய்கிறேன். விசுவாச வார்த்தையைப் பேசுகிறேன்.
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். எபேசியர் 6-16
- நாவுகளின் சண்டையிலிருந்து கர்த்தர் என்னைக் காப்பாற்றி, அவருடைய கூடார மறைவில் ஒளித்து வைத்திருக்கிறார்.
மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறீர். சங்கீதம் 31-20
- எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். எனக்கு விரோதமாக இப்போது பேசும் எல்லா நாவையும், நியாயத்தீர்ப்பின் நாளில், நான் அவைகளைக் குற்றப்படுத்துவேன்.
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; ஏசாயா 54-17
- நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் தேவனாகிய கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்.
அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்று சொன்னேன். உபாகமம் 3-22
- தேவன் எனக்கு கொடுத்த வார்த்தையை சீக்கிரமாக நிறைவேற்றப் போகிறார்.
என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் எரேமியா 1-22
- எனக்கு விரோதமான ஒவ்வொரு அநீதியான குற்றச்சாட்டுகளையும், இயேசுவின் நாமத்தில் கேன்சல் செய்கிறேன்.
- எனக்கு விரோதமாக அநீதியாக எழும்பி இருக்கிற, என் எதிரணியின் மீது குழப்பத்தை பேசுகிறேன். இயேசுவின் நாமத்தில் தெய்வீக குழப்பம் அவர்களுக்குள் உண்டாவதாக.
- எனக்கு விரோதமாக அவர்களோ, அவர்கள் வழக்கறிஞர்களோ, பேச ஆரம்பிக்கும்போது, அகித்தோப்பேல் கட்டளைப்படி முட்டாள்தனமான வார்த்தைகளை பேசுவார்களாக என்று இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுக்கிறேன்.
- இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கில் நான் விரைவாக வெற்றி பெறுவேன் என உறுதியளிக்கிறேன்.
- இயேசுவின் நாமத்தில், இந்த வழக்கில், எனக்கு எதிராக வந்த ஒவ்வொருவரின் மீதும் வெற்றியைக் கோருகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், வெற்றி எனக்கு வருவதாக.
- என்னை இழிவுபடுத்த அவர்கள் எடுத்த ஒவ்வொரு காரியத்திலும், இழிவு அவர்களுக்கே சென்று சேருவதாக. இயேசுவின் நாமத்தில் அவைகளை முடக்குகிறேன்.
- எனக்கு விரோதமாக எந்த தீய சக்திக்கும் வல்லமை இல்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில், எனக்கு விரோதமாக செயல்படுகிற எல்லா பிசாசின் வல்லமையின் மீது வெற்றியைப் பேசுகிறேன்.
- இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிராக பேசும் பொய் சாட்சிகளைத் தடுத்து, அவர்களே அவர்கள் வலையில் சிக்கும்படி செய்யும்.
- இந்த வழக்கின் மீதான எனது வெற்றி, உங்கள் மகனாக அது எனக்கு சொந்தமானது. எந்த பயங்கரமும் என்னை நெருங்காது. நான் பயப்பட மாட்டேன். கவலை அடைய மாட்டேன்.
- கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27-1
- கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஏசாயா 50-7
- கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். எரேமியா 20-11
- இயேசு எனக்காக விட்டுச் சென்ற சமாதானம் இருக்கிறது. நான் பயப்படவும் கலங்கவும் மாட்டேன். அவர் என்னை விட்டு விலகவும் மாட்டார். என்னைக் கைவிடவும் மாட்டார்.
- கர்த்தருக்கு காத்திருக்கிற நான், இயேசுவின் நாமத்தில் புதுபெலனைப் பெற்றுக்கொள்கிறேன். நான் ஓடினாலும் இளைப்படைய மாட்டேன். நடந்தாலும் சோர்ந்து போக மாட்டேன்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40-31
- நீதிபதியின் முன் நான் நிற்கும்போது, உம்முடைய இரக்கமும், தயவும், கிருபையும் இருக்கட்டும். சரியாக பேச ஞானத்தை தாரும்.
- இயேசுவின் இரத்தத்தால், என் வழக்கறிஞரின் ஆவி, ஆத்துமா, சரீரத்தை நான் பெலப்படுத்துகிறேன்.
- எனக்கும், என் வழக்கறிஞருக்கும், எல்லா எதிர்ப்புகளையும் அடக்க, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானம் வழங்கும். (Supernatural Wisdom)
- எந்த கேள்விக்கு நான் பதில் சொன்னாலும், நான் சொல்லப்போகும் பதில் ஆவியானவர் தருவதாக இருக்கட்டும்.
- இயேசுவின் நாமத்தில், நீதிபதியின் பார்வையில் எனக்கு தயவு, இரக்கம் கிடைப்பதாக.
- என்னை ஆதரிக்கும் ஒவ்வொருவருக்கும் தெய்வீக ஞானம் கிடைப்பதாக.
- இயேசுவின் நாமத்தில், என்னை சூந்திருக்கும் அக்கிரமங்களின் மீது நான் வெற்றியைப் பேசுகிறேன்.
- எனக்கு தீங்கு செய்ய நினைக்கிற எல்லா மனிதர்களுக்கும், இயேசுவின் நாமத்தில் குழப்பதைக் கூறுகிறேன்.
- வெற்றி இயேசுவின் பிள்ளையாகிய என்னுடையது. என் அப்பா பெயரில் வெற்றியை பேசுகிறேன். சீக்கிரமாக இந்த வழக்கு முடித்து சந்தோஷமான சாட்சியாக என் தேவன் என்னை உயர்த்தியதற்காக நன்றி சொல்கிறேன். ஆமென்
Leave a Reply