நீதிமான்
நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான்.
- மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)
- நியாயப்பிரமாணத்தின் கிரியையால், மனுஷன் நீதிமான் ஆக்கப்படுவதில்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே, நீதிமானாக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவின் மேல், நான் விசுவாசி ஆனேன். (கலா 2-15)
- நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் அல்ல. விசுவாசத்தினாலேயே, நான் நீதிமான் ஆக்கப்பட்டேன். (ரோமர் 3-28)
- கிரியைகள் இல்லாமல், தேவனாலே, நீதிமான் என்று எண்ணப்படுகிற பாக்கியம், எனக்குக் கிடைத்தது. (ரோமர் 4-6)
- அவர் என் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நான் நீதிமான் ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். (ரோமர் 4-26)
- நான் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான் ஆக்கப்பட்டிருக்கிறேன். (ரோமர் 5-9)
- இலவசமாய் அவருடைய கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு, நீதிமான் ஆக்கப்பட்டேன். (ரோமர் 3-24)
- தேவனே என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். (ரோமர் 8-33)
- அவருடைய கிருபையினாலே, நான் நீதிமான் ஆக்கப்பட்டு, நித்திய ஜீவன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். (நீத்து 3-6)
- கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும், கழுவப்பட்டேன், பரிசுத்தமாக்கப்பட்டேன், நீதிமான் ஆக்கப்பட்டேன்.
நான் நீதிமான்
-
நான் நீதிமான். என் வழியை கர்த்தர் அறிந்திருக்கிறார். (சங் 1-6)
-
நான் நீதிமான். கர்த்தர் என்னை ஆசிர்வதித்து, காருண்யம் எனும் கேடகத்தினால் என்னை சூழ்ந்து கொள்கிறார். (சங் 5-12)
-
நான் நீதிமான் கர்த்தர் என்னை ஸ்திரப்படுத்துகிறார். (சங் 7-9)
-
நான் நீதிமான். நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுவேன். (சங் 32-11)
-
நான் நீதிமான். கர்த்தருடைய கண்கள் என் மேல் நோக்கமாய் இருக்கிறது. (சங் 34-15)
-
நான் நீதிமான். நான் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, என்னை, என்னுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார். (சங் 34-17)
-
நான் நீதிமான். நான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வேன். (சங்37-29)
-
நான் நீதிமான். எனக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங் 97-11)
-
நான் நீதிமான். கர்த்தர் என்னை சிநேகிக்கிறார். (சங்146-8)
-
நான் நீதிமான். என்னுடைய பாதை, நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போலிருக்கும். (நீதி 4-18)
-
நான் நீதிமான். கர்த்தர் என்னை பசியினால் வருந்த விடார். (நீதி 10-3)
-
நான் நீதிமான். என்னுடைய சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும். (நீதி 10-6)
-
நான் நீதிமான். என்னுடைய பெயர் புகழ் பெற்று விளங்கும். (நீதி 10-7)
-
நான் நீதிமான். என்னுடைய வாய் ஜீவ ஊற்று. (நீதி 10-11)
-
நான் நீதிமான். என் பிரயாசம் ஜீவன். (நீதி 10-16)
-
நான் நீதிமான். என்னுடைய நாவு சுத்த வெள்ளி. (நீதி 10-20)
-
நான் நீதிமான். என்னுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும். (நீதி 10-21)
-
நான் நீதிமான். நான் விரும்புகிற காரியம் எனக்குக் கொடுக்கப்படும். (நீதி 10-24)
-
நான் நீதிமான். நான் நித்திய அஸ்திபாரமுள்ளவன். (நீதி 10-25)
-
நான் நீதிமான். என்னுடைய நம்பிக்கை மகிழ்ச்சி. (நீதி 10-28)
-
நான் நீதிமான். நான் என்றும் அசைக்கப்படுவதில்லை. (நீதி 10-30)
-
நான் நீதிமான். என்னுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும். (நீதி10-31)
-
நான் நீதிமான். என் உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும். (நீதி 10-32)
-
நான் நீதிமான். நான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவேன். (நீதி 11-8)
-
நான் நீதிமான். நான் அறிவினால் தப்புவேன். (நீதி 11-9)
-
நான் நீதிமான். நான் நன்றாக இருந்தால் பட்டணம் களிகூறும். (நீதி 11-10)
-
நான் நீதிமான். என் சந்ததி விடுவிக்கப்படும். (நீதி 11-21)
-
நான் நீதிமான். என் ஆசை நன்மையே. (நீதி 11-23)
-
நான் நீதிமான். நான் துளிரைப் போல் தழைப்பேன். (நீதி 11-26)
-
நான் நீதிமான். என் பலன் ஜீவ விருட்சம். (நீதி 11-30)
-
நான் நீதிமான். என் வேர் அசையாது. (நீதி 12-3)
-
நான் நீதிமான். என் நினைவுகள் நியாயமானவைகள். (நீதி 12-5)
-
நான் நீதிமான். என்னுடைய வீடு நிலை நிற்கும். (நீதி 12-7)
-
நான் நீதிமான். என் வேர் கனி கொடுக்கும். (நீதி 12-12)
-
நான் நீதிமான். நான் நெருக்கத்தினின்று நீங்குவேன். (நீதி 12-13)
-
நான் நீதிமான். என் அயலானைப் பார்க்கிலும் நான் மேன்மையுள்ளவன் (நீதி 12-26)
-
நான் நீதிமான். என் வெளிச்சம் சந்தோஷம் கொடுக்கும். (நீதி 13-9)
-
நான் நீதிமான். எனக்கு நன்மை பலனாக வரும். (நீதி 13-21)
-
நான் நீதிமான். நான் எனக்கு திருப்தியாக புசிக்கிறேன். (நீதி 13-25)
-
நான் நீதிமான். என் மரணத்திலே எனக்கு நம்பிக்கை உண்டு. (நீதி 14-32)
-
நான் நீதிமான். என் வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு. (நீதி 15-6)
-
நான் நீதிமான். என் வழி ராஜபாதை. (நீதி 15-19)
-
நான் நீதிமான். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறார். (நீதி 15-29)
-
நான் நீதிமான். என் பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள். (நீதி 20-7)
-
நான் நீதிமான். நான் பிசினித்தனம் இல்லாமல் கொடுப்பேன். (நீதி 21-26)
-
நான் நீதிமான். என் தகப்பன் மிகவும் களிகூறுவான். (நீதி 23-24)
-
நான் நீதிமான். நான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பேன். (நீதி 24-16)
-
நான் நீதிமான். நான் சிங்கத்தைப் போல தைரியமாக இருப்பேன். (நீதி 28-1)
-
நான் நீதிமான். நான் பாடி மகிழுவேன். (நீதி 29-6)
-
நான் நீதிமான். நான் ஏழைகளின் நியாயத்தை கவனித்து அறிவேன். (நீதி 29-7)
-
நான் நீதிமான். எனக்கு நன்மை உண்டாகும். (ஏச 3-10)
-
நான் நீதிமான். தீங்கு வராததற்கு முன்னே நான் எடுத்துக் கொள்ளப்படுவேன். . (ஏச 57-1)
-
நான் நீதிமான். நான் பிதாவின் ராஜ்ஜியத்திலே சூரியனைப் போல பிரகாசிப்பேன். ( மத்தேயு 13-43)
-
நான் நீதிமான். நான் செய்யும் ஊக்கமான வேண்டுதலுக்கு மிகுந்த பலன் உண்டு. (யாக் 5-16)
Leave a Reply