சாலொமோன்
தாவீதுக்குப் பிறகு சாலமோன் இஸ்ரவேல் தேசத்தை அரசாளுகிறார். சாலமோன் ராஜாவாகும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாகத்தான் இருந்தார். தேவன் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, ஞானத்தைக் கேட்டவர் சாலமோன். நன்கு வேதத்தை படித்தவர்களிடம், “தேவனைப் பற்றி உங்களது கற்பனை வாழ்வு எது?” என்று கேட்டால், தாவீதைப்போல் ஆண்டவரிடம் உறவு கொள்வது எங்கள் கற்பனை வாழ்வு என்று கூறுவார்கள். அந்த தாவீதின் மகன்தான் சாலமோன். நமக்கு ஒரு தரிசனம் கிடைப்பதே அரிது. ஆனால் சாலமோனிடம் தேவனே நேரில் வந்து பேசுகிறார். அந்த அளவுக்கு கிருபை பெற்றவர் சாலொமோன்.
சாலொமோன் என்ற பெயர், பழைய ஏற்பாட்டில் 300 முறையும், புதிய ஏற்பாட்டில் 12 முறையும் இருப்பதாக வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். நாம் ஏற்கனவே பார்த்தபடி, தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகன் சாலமோன். தாவீது அரசனான பிறகு தான், பத்சேபாளுடன் அவர் வாழ்க்கை தொடங்கியது. எனவே தாவீது அரசனான பிறகு பிறந்த மகன் சாலமோன். சாலமோனுடைய குழந்தை பருவம், வாலிபம் பற்றியெல்லாம் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை.
தாவீது ராஜாவுடைய குமாரன் அப்சலோம், அதோனியா என்பவர்கள் ராஜா ஆகும்படி செய்த வேலைகள் வேதத்தில் பார்க்கலாம். இந்த அப்சலோம், அதோனியா என்பவர்கள் பிறக்கும்போது, தாவீது அரசனாக இருக்கவில்லை. அதன் பின்னர் தான் ராஜாவானார். வேத அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், “அப்சலோம், அதோனியாவைப் போல எந்த திறமையும் இல்லாதவர்தான் சாலமோன். ஆனால், தேவன் அருளிய ஞானம் அவரை இவ்வளவு பெரிய ராஜாவாக்கியது”
29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
30 சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
1 இராஜாக்கள் 4:30
மேற்கண்ட வசனத்தில், கிழக்கத்தி புத்திரர் என்றால், India, Srilanka, Japan, China, Mangolia. இஸ்ரவேலருக்கு கிழக்கில் இருப்பவர்கள் நாம். எகிப்தியரின் ஞானம் என்றால், முதன் முதல் மருத்துவம் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள். பிறவியிலேயே எகிப்தியர்கள் ஞானவான்கள். இவர்கள் எல்லாரையும் விட சாலமோனின் ஞானம் பெரிதாய் இருந்தது என்று வேதம் கூறுகிறது.
32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
33 லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
1 இராஜாக்கள் 4:33
சாலொமோன் ஞானி மட்டும் அல்ல. பாட்டு எழுதிய கவிஞன், தாவரவியலாளர், விலங்கியலாளர், கடல்சார்வியல் அறிஞர்(marinology) நீர்நிலை அறிஞர்(aqualogy) விஞ்ஞானி, கட்டிடக்கலைஞன், வீரன், மனோதிடகாத்திர ஞானி.
சாலமோன் ஆலயம் கட்டும்போது ஷெக்கினா மகிமை அதாவது உச்சகட்ட மகிமை இறங்கியது. தேவனின் மகிமையை அப்படியே பூலோகத்துக்கு கொண்டு வந்தவர் சாலமோன். இடைப்பட்ட வயதில் அவர் எழுதியது தான் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு. ஆனால் அவருக்கு முதிர் வயதானபோது ஸ்திரீகளின் நிமித்தம் அந்நிய தெய்வத்தை வணங்கி தன் வாழ்வை தொலைத்துப் போட்டவர் சாலொமோன்.
அநேக வாய்மொழி கதைகள் (Oral Stories) எபிரேய மொழியில் இருக்கும். பல காரியங்களை இஸ்ரவேலர்கள் எழுத அனுமதிக்க மாட்டார்கள். சில காரியங்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டுமென நினைப்பார்கள். அப்படி ஒரு கதை தான், king Salomon’s Ring. நிறைய இடங்களில், சாலமோனால் விலங்குகள் பேசுவதை கேட்க முடியும் என கேட்டு இருக்கிறேன். அது எந்த அளவு உண்மை என்பது தேவனுக்கே தெரியும். இந்த கதை உண்மையில் நம்பக் கூடியதாக இல்லாமலிருந்தாலும், தெரிந்து கொள்வதற்காக பதிவிட்டு இருக்கிறேன் என்பதே உண்மை.
தேவன் ஆதாமை ஏதேனில் வைத்திருக்கும்போது, ஆதாமுக்கு ஒரு Ring கொடுத்தாராம். அதை வைத்து ஆதாம் சகல ஜீவன்களிடமும் பேசலாம், உலகை ஆளலாம். ஆனால் ஆதாமுக்கு அடுத்து அந்த Ring தேவனிடமே போய்விட்டது. அதன்பிறகு ஆயிரக்கணக்கான வருடங்கள் கழித்து, தேவன் காபிரியேல் தூதனை அழைத்து, “இந்த Ring தாவீதிடம் கொடுத்து, அவன் மகனுக்கு கொடுக்கச் சொல்லு” என்று அனுப்பி விட்டாராம். எந்த மகனுக்கு என்று தாவீது கேட்கும்போது, “நான் கேட்கும் கேள்விகளைக் கேளு. சரியான பதில் சொல்லும் மகனுக்கு கொடு” என்று காபிரியேல் சொன்னாராம். அதேபோல, ஒவ்வொரு மகனிடமும் காபிரியேல் கொடுத்த கேள்விகளைக் கேட்கும்போது, சாலமோன் மட்டும் அனைத்துக்கும் சரியான பதில் சொன்னாராம். அதுவும் பதில் சொல்லிவிட்டு, தாவீதின் முகத்தை பார்த்து சிரிக்காமல், வேறெங்கோ பார்த்து சிரித்தாராம். ஏன் என தாவீது கேட்டபொழுது, “நீங்கள் கேட்ட எல்லா கேள்விக்கும், இந்த எறும்பு எனக்கு பதில் சொல்லிக் கொடுத்தது” என்று சாலமோன் சொன்னாராம். அப்படியே அந்த Ring சாலமோனுக்கும் கிடைத்தது. சாலமோன், கழிவறைக்கு செல்லும்போது, அந்த Ring தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்று, திரும்பி வந்ததும் அதைப் போட்டுக் கொள்வது வழக்கம். ஒரு நாள், சாலமோன் போன போது, ஒரு ஜின் சாலமோன் போல உருமாறி வந்து, அவன் Ring வாங்கி கொண்டது. பின்னர் அந்த ஜின் சாலமோன் உருவில் ஆட்சி செய்தது, அந்த Ringயும் கடலுக்குள் எறிந்தது. சாலமோன், ஒரு மீனவனாக இருக்கும்போது, மீண்டும் ஒரு மீனின் வாயிலிருந்து அந்த Ring பெற்றுக்கொண்டு, அரசனாகி விட்டான் என்று கதை சொல்லுவார்கள். நிச்சயமாக எந்த அளவு உண்மை என நமக்கு தெரியாது. இது யூதர்களின் பாரம்பரிய கதை.
வேத அறிஞர்களின் கருத்துபடி, சாலொமோனுடைய முதிர் வயதில், மந்திரவாதிகள் பிசாசை கண்ட்ரோல் செய்வது போல, சாலமோனும் பெரிய பிசாசாகிய ஜின் என்ற பிசாசை கண்ட்ரோல் செய்து, பிசாசிடமிருந்து ரகசியங்களை வாங்கி, பிசாசை வைத்தே ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகம் Solomon’s Black Book. தன் கைப்பட சாத்தானை பற்றி எழுதிய புத்தகம் அது. இன்றைய மந்திரவாதம், செய்வினை, பில்லிசூனியங்களுக்கு தாய்புத்தகம் சாலொமோனின் கருப்பு புத்தகமே. பிசாசை மகிமைப்படுத்தி, சாத்தானின் அந்தரங்களை எழுதி, குட்டி பிசாசுகளை ட்ரெயின் செய்வது எப்படி, பயன்படுத்துவது எப்படி என்று எழுதினார். தன் வாழ்வை கடைசியில் பிசாசுக்கு அடிமையாக தொலைத்துப் போட்டவர் சாலொமோன். இப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து தான் Satanic Bible வந்தது என்பது கசப்பான உண்மை.
சாலமோனுடைய ringல் Star of David எனப்படும் ஸ்டாரும், தேவனுடைய அறியப்படாத நாமமும் மறைந்திருந்தது என்பர். சாலமோனுடைய முத்திரையில் Star of David இருக்கும். இந்த முத்திரை துருக்கியில் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் வெளியிட்டனர். இந்த முத்திரையின் மூலம், விலங்குகளோடு பேசலாம் எனவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தலாம் எனவும் நம்புகிறார்கள். சாலமோனுடைய பிளாக்மேஜிக் புத்தகத்தின் மேலும் அந்த முத்திரை இருப்பதாக கூறுகிறார்கள்.
எது எப்படியோ? ஆனால் சாலமோன் தான் அந்த கருப்பு புத்தகத்தை எழுதியதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். சுரேஷ் ராமச்சந்திரன் என்னும் ஆய்வாளர், இலங்கை தமிழர். அனேக வேத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். பன்மொழி தெரிந்தவர். பழங்கால மொழிபெயர்ப்பு செய்ய இஸ்ரவேலுக்கு செல்பவர். கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக எபிரேய மொழிக்கு வெளிப்படுத்தின விசேஷம் மொழிபெயர்த்து, Ph.d பட்டம் வாங்கியவர். அவர் அனேக காரியங்கள் வரலாறு மற்றும் வேதத்தை இணைத்து கூறுவார். அவர் சொன்னது, “நான் சாலமோனுடைய கருப்பு புத்தகம் படித்து ஆய்வில் ஈடுபட்டேன். எபிரேய எழுத்து நடை ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆனால் சாலமோன் எழுதிய எழுத்து நடை கருப்பு புத்தகத்துடன் அப்படியே ஒத்துபோகிறது.” அவர்தான் எழுதினார் என்பது ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை.
இஸ்ரேல் – யூதேயா
சாலமோனின் செயல்களால் ஆண்டவருக்கு கோபம் வந்தது. ஆனாலும் தாவீது நிமித்தம் சாலமனுடைய நாட்களில் தேசத்தை உடைக்காமல், அவன் குமாரனாகிய ரெகோபெயாமின் நாட்களில் தேசத்தை உடைத்துப் போட்டார். சாலமோனுக்கு முன்னர் இஸ்ரேல் என்றால் முழு இஸ்ரேல் தேசம். சாலமனுக்கு பிறகு இஸ்ரேல் என்றால் வடதேசம் மட்டும்தான், பத்து கோத்திரங்கள் உள்ளது வடதேசம். அதன் தலைநகர் சமாரியா. தெற்கு ராஜ்யம் என்றால் அது யூதேயா தேசம். யூதாவும் பென்யமின் கோத்திரமும் மட்டும் உள்ள தேசம். அதன் தலைநகர் எருசலேம். யூதேயாவை ஆண்ட அரசர்களின் வம்சத்தில் தான் அதாவது யூத கோத்திரத்தில் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும் பிறந்தார்.
உலக அளவில் பெரிய சாம்ராஜ்யங்கள் என்று கருதப்படுவது நான்கு சாம்ராஜ்யங்கள்.
1. அசீரிய சாம்ராஜ்யம்
2. பாபிலோனிய சாம்ராஜ்யம்
3. கிரேக்க சாம்ராஜ்யம்
4. ரோம சாம்ராஜ்யம்
அதாவது இஸ்ரவேலர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்று வரலாறை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Leave a Reply