இயேசு என்ற நாமத்தில்…..
நான் இதுவரையில் எத்தனையோ ஆய்வு கட்டுரைகள் பதிவிட்டிருக்கிறேன். அவற்றிலெல்லாம், ஓரளவு படித்து, புரிந்த காரியங்களைத்தான் நான் பதிவு செய்து இருக்கிறேன். இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமாக, ஆவியானவரின் ஏவுதலின்படி, சில காரியங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். “இயேசு என்ற நாமம்” இதுதான் அந்த தலைப்பு. கொஞ்சம் நமக்குத் தெரிந்த காரியங்களையே, மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். உண்மையில் இப்பதிவை பதிவிட எனக்கு சற்றேனும் எண்ணமில்லை. ஆயினும், ஆவியில் ஏற்பட்ட உந்துதலில், இப்பதிவை பதிவிடுகிறேன்.
இயேசு நாமம்
ஒருமுறை என் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “எத்தனையோ பேர் நான் பாத்துக்குவேன்னு சொல்லுவாங்க… என் பெயரைச் சொல்லு… அங்க வேலை நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் அதையெல்லாம் உண்மையிலே சொல்ல தகுதியானவர் இயேசு மட்டும்தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
என்னுடன் பேசிக்கொண்டு இருந்தவள், சட்டென அமைதியாகி விட்டாள். “ஆமாடி… இதுவரை இப்படி நான் யோசிக்கவே இல்லை. இயேசு நாமம்னு சின்ன வயசுலயே சொல்லிக் கொடுத்ததால, ஒரு நாமம் இருக்குது, அதை சொல்லி பிரேயர் பண்ணனும்னு தெரியும். ஆனா, அந்த நாமம்னா, அது அவர் பெயருனு இவ்வளவு டீப்பா நான் யோசிக்கவே இல்லை” என்று சொன்னாள்.
அவளை நான் குறை சொல்லவில்லை. தமிழில் ‘நாமம் என்றால் என்ன?’ என்று, உண்மையில் பல கிறிஸ்தவர்கள் யோசிக்கவே மாட்டோம். ஏதோ மந்திரம் உச்சரிப்பது போல, கிறிஸ்தவர்களுக்கு நாமம் என்று நாமே நினைத்திருப்போம். இந்த “நாமம்” என்பதைப்பற்றி சில காரியங்களை இன்று பார்க்க இருக்கிறோம்.
லூக்கா எழுதின சுவிசேஷத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.
லூக்கா 9:1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
இந்த பகுதியை வாசிக்கும்போது, இயேசு தம்முடைய 12 சீஷர்களை அனுப்பி, healing and deliverance செய்து வரச் சொல்கிறார்.
லூக்கா 10:1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
அடுத்த அதிகாரத்தில் 70 பேரை அனுப்புகிறார். அவர்களையும் ministry செய்ய அனுப்புகிறார்.
லூக்கா 10:17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
அந்த 70 பேரும் திரும்பி வந்து அவரிடம் சொல்கிற காரியம் தான் மேலே உள்ள வசனம்.
இந்த வசனத்தை வாசிக்கும்போது, சட்டென என் மனதில் “நாமம்” வந்து மறைந்தது. யோசிக்க ஆரம்பித்தேன். சிறு குழந்தையிலிருந்தே பெற்றோர் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள், “இயேசுவின் நாமத்தில் என்ன கேட்டாலும் கிடைக்கும்” என்று. “இயேசுவின் நாமத்துக்கு சகல அதிகாரமும் இருக்கிறது” என்பது தெரியும். “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி அவர் நாமம், அதன் வல்லமை எல்லாம் நாம் அறிந்ததே!
எப்போது முதல் இயேசுவின் நாமத்துக்கு அவ்வளவு power?
என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? எப்போது இருந்து இயேசுவின் பெயருக்கு அவ்வளவு வல்லமை என்று? நான் நினைத்திருந்தது என்னவென்றால், “இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்தால் தான் அவர் நாமத்துக்கு அவ்வளவு power. அதனால்தான் பேய்கள் எல்லாம் இயேசுவின் பெயரைக் கேட்டால் நடுங்கும்” இதுதான் என் நினைவு.
இப்போது மேலே உள்ள வசனத்தின்படி, 70பேரும் போய் ஊழியம் செய்து திரும்பி வந்து, “உம் நாமத்தினாலே, பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகிறதே” என்று சொல்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி, பிசாசை துரத்தி இருக்கிறார்கள் என்பதை வசனம் சொல்கிறது. ஆனால் அப்போது இயேசு மரிக்கவேயில்லையே! அவர் முழு மனிதனாக மட்டுமே இருந்தார். பின்னே எப்படி இது சாத்தியம்? யோசிக்க ஆரம்பித்தேன்.
அப்படியானால், அவர் உலகத்துக்கு வரும்போது, முழு மனித தன்மையுடன் வரவில்லையா? கடவுளாகத்தான் இருந்தாரா? இல்லையே… அவர் அடிமையின் ரூபமெடுத்து என்று வேதம் சொல்கிறதே… பின் எப்படி அவரது பெயருக்கு, அவர் மரிக்கும் முன்பே அவ்வளவு power?
பின்னர் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் “பரிசுத்த வித்து” ஆதாமிலிருந்து எப்படியெல்லாம் travel செய்து, இயேசு வரை வந்து என்பதை “இஸ்ரேல்” பதிவில், மத்தேயு 1ஆம் அதிகாரம், லூக்கா 3ஆம் அதிகாரம் வைத்து பார்த்தோம்.
இயேசு கன்னியின் வயிற்றில், ஆண் துணையின்றி பிறந்தார். அதனால் அவருடைய DNA மனிதனுடைய (விழுந்து போன ஆதாமின்) DNA அல்ல. பாவம் அவரது ஜீனில் இல்லை. அவரும் பாவம் செய்யவில்லை. நியாயப்பிரமாணம் முழுதையும் நிறைவேற்றினார். அதனால், அவரது நாமத்துக்கு அவ்வளவு வல்லமை என்று நானே முடிவு எடுத்துக் கொண்டேன். (இதெல்லாம் என் எண்ண ஓட்டங்கள். அப்படியே உண்மை அல்ல)இதன்மூலம், “அவர் மரிப்பதற்கு முன்பே அவ்வளவு வல்லமை அவரது பெயருக்கு இருந்திருக்கிறது” என்பதை அறிந்து கொள்ளலாம்.
முதலாவதாக, அவர் உயிரோடு இருக்கும்போதே, அவர் பெயருக்கு அவ்வளவு வல்லமை இருந்தது என்பதை அறிந்து கொண்டேன். லூக்கா 9ஆம் அதிகாரத்தில், 12 பேரை அனுப்புகிறார்… லூக்கா 10ஆம் அதிகாரத்தில் 70 பேரை அனுப்புகிறார். இதில் முக்கியமான விஷயம், அவர் பெயரை அவர்கள் use பண்ணும்படி, அவர் அனுப்புகிறார். அதனால்தான் அங்கு அற்புதங்கள் நடந்தன என்று நினைத்தேன். எனவே இரண்டாவதாக, “இயேசு, ‘என் பெயரைச் சொல்லி இதை செய்யுங்கள்’ என்று, யாரையெல்லாம் சொல்கிறாரோ, அவர்களால் மட்டும், இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்ய முடியும்” என்று புரிந்து கொண்டேன். இப்படி ஒரு முடிவுக்கு வரும்போது, அடுத்த சந்தேகம் வந்தது…
யாரெல்லாம் அவரது நாமத்தை பயன்படுத்தலாம்?
அடுத்து எனக்குள் தோன்றிய கேள்வி இதுதான். “யார் அவருடைய நாமத்தை use பண்ணலாம்?” இதைப் படிக்கும்போது, என் சந்தேகம் உங்களுக்கு முட்டள்தனமாக கூட இருக்கலாம். ஆனால் எனக்குள் தோன்றிய கேள்விக்கான காரணம், கீழே உள்ள இந்த வசனங்கள் தான்.
லூக்கா 9:49 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
மாற்கு 9:38 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக்கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால் அவனைத் தடுத்தோம் என்றான்.
39.அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
என் இரண்டாவது புரிதலை இந்த வசனம் சுக்கு நூறாக நொறுக்கியது எனலாம். இயேசு யாருக்கு எல்லம் அவர் பெயரை use பண்ணும்படி permission கொடுக்கிறாரோ, அவர்களால் அற்புதங்கள் செய்ய முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் இங்கோ, இயேசுவுக்கு அறிமுகம் இல்லாதவன் கூட, இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்துகிறான். யோசித்து யோசித்து பார்த்தவள் முடிவாக, என் மூன்றாவது புரிதலுக்கு வந்தேன். மூன்றாவதாக, “இயேசுவின் பெயரை, இயேசு அனுப்பினால் மட்டுமல்ல, யார் use செய்தாலும் அங்கே விடுதலை உண்டு என்று புரிந்து கொண்டேன்.”
எல்லாராலும் இயேசு நாமத்தை பயன்படுத்த முடியுமா?
இப்பொழுது, இயேசுவின் பெயரை யார் use பண்ணினாலும், அங்கே அற்புதம் நடக்கும் என்ற புரிதலில் இருக்கும்போது, அடுத்ததாக ஒரு பகுதி, என் எண்ணத்தை மாற்றியது.
அப்போஸ்தலர் 19: 13-16
- அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
- பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
- பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
- பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
யார் வேண்டுமானாலும், இயேசுவின் பெயரை use செய்யலாம் என்று பார்த்தால், இல்லை. இந்த இடத்தில், அந்த மந்திரவாதிகள் இயேசுவின் பெயரை உபயோகிக்க அனுமதி இல்லை. இயேசு உயிரோடு இருக்கும்போதே, அவர் பெயரை சொல்லி, பிசாசுகளைத் துரத்தினார்கள். இப்பொழுது இயேசு மரித்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் பெயரில் எவ்வளவு வல்லமை இருக்கும்! ஆனால், ஏன் இந்த இடத்தில் அந்த மந்திரவாதிகள் இயேசுவின் பெயரை use பண்ணும்போது, சாத்தான் பயப்படவில்லை? நான்காவதாக, “இயேசுவின் பெயரை எல்லாராலும் use பண்ண முடியாது. அவர் பெயரை உபயோகிக்க உடன் ஏதோ ஒன்று தேவையாக இருக்கலாம்” என்று புரிந்து கொண்டேன்.
என்னவாக இருக்கும்? ஒருவேளை அவர்கள் மந்திரவாதி என்பதால், அவர்களால் பிசாசுகளை துரத்த முடியவில்லையா? ஒருவேளை விசுவாசம் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்குமா?
யார்தான் அவர் பெயரை use பண்ண முடியும்? அவ்வளவு special ஆன nameஆ?
இயேசு என்று பேரிடுவாயாக:
அவ்வளவு special ஆன பெயரா அது என்று நான் சிந்திக்கும்போது, எனக்குள் தோன்றிய விஷயம் இதுதான். இயேசு என்று எப்படி பெயர் வைத்தார்கள்? தேவதூதன், மரியாளுக்கு காட்சியளித்து, “உனக்கு பிறக்கும் பிள்ளைக்கு, “இயேசு” என்ற இந்த பெயரை வை” என்று சொன்னார். அப்படியானால், அது எவ்வளவு special ஆன பெயர். பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்ட பெயர். நிச்சயம் அது unique ஆன பெயராக இருக்கும் என்று எண்ணி, அந்த பெயர் நினைத்து சந்தோஷப்பட்டேன்.
அதைப்பற்றிய என் தேடலில், அடுத்து நான் கண்டுபிடித்தது, ஐந்தாவதாக, இயேசு என்ற பெயர் வேத காலத்தில் (அவர் வாழ்ந்த காலத்தில்), unique name அல்ல. தெருவுக்கு மூன்று இயேசுக்கள் இருப்பார்கள்.
Angel வைக்க சொன்ன பெயர் “Yeshua”. Yeshua என்ற பெயரின் அர்த்தம், “Yahweh is my Salvation or Yahweh Saves”.
Yeshua என்ற எபிரேய பெயருக்கு, ஆங்கிலத்தில் Joshua என்று எழுதுவார்கள். பின்னர் எப்படி, Joshua, Jesus ஆக மாறியது?
நமக்கு தெரியும், பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும்(Hebrew), புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும்(Greek) எழுதப்பட்டது. The Koine Greek equivalent of the Hebrew name “Yeshua” (יֵשׁוּעַ) is Ἰησοῦς (Iēsous), from which the English name “Jesus” is derived.
- Hebrew: The original Hebrew name is Yeshua (יֵשׁוּעַ).
- Greek: The Septuagint (the ancient Greek translation of the Hebrew Bible) transliterated the Hebrew name as Ἰησοῦς (Iēsous).
- Latin: This Greek name was then adopted into Latin as Iesus.
- English: The Latin name “Iesus” eventually became the English name “Jesus”.
இப்படித்தான் இயேசுவின் நாமம், “யோசுவா” என்று translate செய்யப்படாமல், “இயேசு” என்று translate செய்யப்பட்டது. ஆக, இயேசு வாழ்ந்த நாட்களில், இயேசு(யோசுவா) என்ற பெயருடன் தெருவுக்கு மூன்று இயேசுக்கள் இருந்திருக்கிறார்கள். எனவேதான் “எந்த இயேசு?” என்பதை தெளிவாகச் சொல்ல, நசரேயனாகிய இயேசு(நாசரேத் ஊர் இயேசு – Jesus of Nazareth) என்று கூறியிருக்கிறார்கள்.
வரலாற்றில் முக்கியமான ஒருத்தருக்கு, நம் பாவத்தை சுமந்து தீர்க்கிற தெய்வ ஆட்டுக்குட்டிக்கு, தேவகுமாரனுக்கு, இவ்வளவு common name வைத்தது, அதுவும் ஒரு தேவதூதன் சொல்லி இந்த பெயரை வைத்தது, ஆச்சரியமான விஷயம் தான்.
எதுதான் அவரது சரியான பெயர்?
நமக்குள் குழப்பமே வந்திருக்கும். நான் எந்த பெயரை use பண்ண வேண்டும்? யெஷுவா என்று சொல்ல வேண்டுமா? யோசுவா என்று சொல்ல வேண்டுமா? இயேசு என்று சொல்ல வேண்டுமா? ஜீசஸ் என்று சொல்ல வேண்டுமா? எதுதான் அவர் பெயர்?
ஆறாவதாக, “இயேசு என்ற பெயர் ஏன் முக்கியமானது என்றால், அந்த பெயரின் அர்த்தத்தால் அது முக்கியமானது. அந்த பெயர் யாரைக் குறிக்கிறது என்பதால் அது முக்கியமானது. யாரைக்குறிக்கும் என்பதைப் பொறுத்து, அந்த பெயரில் வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது” என்பதை அறிந்து கொண்டேன்.
நான் யாரை நினைத்து இயேசு என்று கூப்பிடுகிறேனோ, அதுதான் முக்கியமானது. அந்த பெயரில் வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது.
இயேசு என்ற மேலான நாமம்
இயேசு என்பது எல்லா நாமத்துக்கும் மேலான நாமம். வேதம் சொல்கிறது,
பிலிப்பியர் 2: 10,11
- இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
- பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோர்- That at the name of Jesus, every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth.
ஏழாவதாக, பூமியில், பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, நம் அறிவுக்கு உட்பட்ட இடங்கள், அறிவுக்கு உட்படாத இடங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் உயிர்கள், அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு அவரை வணங்கும் அளவுக்கு, அவர் மேலானவர், அவருடைய பெயரும் மேலானது என்று நமக்கு தெரியும்.
நான் அவர் பெயரை use பண்ணலாமா?
லூக்கா 9ஆம் அதிகாரத்தில், இயேசுவின் நாமத்தில் ஒருவன் பிசாசுகளை துரத்தினான். ஆனால் இயேசு அவனை தடுக்கவில்லை. அப்போஸ்தலர் 19ஆம் அதிகாரத்தில், ஸ்கேவாவின் மகன்கள், இயேசுவின் நாமத்தில் பிசாசுகளை துரத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் துரத்த முடியவில்லை. ஏன்?
லூக்கா 9ல், இயேசுவின் கூட்டத்தில் இல்லாதவனாக இருந்தாலும், இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, பிசாசை துரத்தினான். அவன் பெயரை பெரிதாக சொல்லாமல், இயேசுவின் பெயரை உயர்த்தினான். அதனால் அவனால் அற்புதம் செய்ய முடிந்தது.
அப்போஸ்தலர் 19ல், ஸ்கேவாவின் மகன்கள், தங்களை பெரிய மந்திரவாதிகளாக காட்டிக்கொள்ள, இயேசுவின் பெயரை பயன்படுத்தினார்கள். அவர்களால் கூடாமற் போயிற்று.
நாம் இன்று இயேசுவை விசுவாசிக்கிறோம். அவர் எனக்காக இந்த உலகத்துக்கு வந்து, என் பாவம் அனைத்தையும் சுமந்து என்னை நீதிமான் ஆக்கிவிட்டார் என்று நம்புகிறோம். நாம் அவரை ஏற்றுக்கொண்டதால் நமக்கு என்ன கிடைத்தது என்று கீழே வசனத்தில் பார்க்கலாம்.
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
ஆம், நம் விசுவாசத்தால், நாம் தேவனுடைய பிள்ளையாகி விட்டோம். உண்மை தானா? நான் தேவனுடைய பிள்ளை என்பதற்கு யார் சாட்சி?
ரோமர் 8:16 நாம் தேவனுடைய
பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
Official ஆக நான் தேவனுடைய பிள்ளை. அவருடைய மகளாக இருந்து கொண்டு, அவர் பெயரை use பண்ண எனக்கு உரிமையில்லையா? நிச்சயமாக இருக்கிறது. எட்டாவதாக, நான் உரிமையாக அவர் பெயரை உபயோகித்து, பிசாசை துரத்தலாம், சுகம் பெறலாம். ஆனால் அதில் என் பெயர் அல்ல, அவர் பெயரை மகிமைப்படுத்த வேண்டும்.
அவர் நாமத்தால் என்ன கிடைக்கும்?
அவர் பெயரைச் சொல்வதால், அவர் பெயர் சொல்லி கூப்பிடுவதால், அவர் பெயர் சொல்லி கேட்பதால், அதாவது அவர் பெயருக்கு நம் வாழ்வில் என்ன இருக்கிறது?
மத்தேயு 18:20 ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
ஒரு சிறு கூட்டமாக நாம் கூடி, அவர் பெயரைச் சொல்லி அழைத்தால், அவர் நம் நடுவில் வந்து இருப்பாராம். இயேசு நம் அருகே வருவதற்கு அவர் பெயரைச் சொல்லி அழைத்தாலே போதுமாம்.
யோவான் 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
யோவான் 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.யோவான் 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
அடுத்ததாக, நாம் அவர் பெயரைச் சொல்லி, பிதாவிடம் கேட்கும்போது, நிச்சயம் அதை நாம் பெற்றுக்கொள்வோம். அவர் பெயருக்கு அவ்வளவு அதிகாரம்.
மாற்கு 16:17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
அடுத்ததாக, அவர் பெயரைச் சொல்லி என்னால் பிசாசை துரத்த முடியும். யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அந்த இடத்தில், அவர் பெயரைச் சொல்லி, என்னால் பிசாசை துரத்த முடியும்.
யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
அடுத்ததாக, யாரேனும் வியாதியோடிருந்தால், அவர் பெயரைச் சொல்லி என்னால் சுகப்படுத்த முடியும்.
அவர் நாமத்தால் என்ன எல்லாம் கிடைக்கும்? ஒன்பதாவதாக, அவர் பெயர் சொல்லி அவரை அழைத்தால், இயேசு எங்கள் நடுவில் இருப்பார். அவர் பெயர் சொல்லி, என் சந்தோஷம் நிறைவாயிருக்க, நான் என்ன கேட்டாலும் அவர் கொடுப்பார். அவர் பெயர் சொல்லி, பிசாசை துரத்த முடியும். அவர் பெயர் சொல்லி வியாதியை சுகப்படுத்த முடியும்.
இயேசுவின் நாமமும், பரிசுத்த ஆவியும்:
ஆதி திருச்சபையில் இருந்தவர்கள், அல்லது இயேசுவின் மரணத்துக்கு பிறகு ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள், வெறும் ஞானஸ்நானம் மட்டும் பத்தாது, பரிசுத்த ஆவியானவரும் தேவை என்று பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம், நீதிமான் ஆக்கப்பட்டோம், என்பது நமக்கு தெரியும். ஆனால் நீதிமான் ஆக்கப்படுவதற்கு, பரிசுத்த ஆவியானவரும் அவசியம்.
I கொரிந்தியர் 6:11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய
இயேசுவின் நாமத்தினாலும், நமது
தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்,
பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
பத்தாவதாக, அவர் நாமம் எனக்கு எந்தளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரும் தேவை. வெறும் இரட்சிப்பின் அனுபவத்தோடு இருந்து விடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் நிறைவும் தேவை.
அவர் நாமத்தில் அற்புதம் செய்தால் பரலோகமா?
அவர் நாமத்தில் அற்புதங்களைச் செய்தாலும், அவர் உங்களை அறியேன் என்று சொல்லி விடுவாராம். எவ்வளவு மோசமான நிலை அல்லவா! அவர் நாமத்தைக் கொண்டு, வெறும் பிசாசுகளை துரத்துவதும், அற்புதங்களை செய்வதும் மட்டும் நம் மறுமையின் வாழ்வுக்கு போதாது.
மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
- அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
கிறிஸ்துவின் நாமத்தை சொல்கிற யாரும், அநியாயம் செய்யக்கூடாது என்று வேதம் சொல்கிறது.
II தீமோத்தேயு 2:19 ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.
பதினொன்றாவதாக, இயேசுவின் பெயரை உபயோகப்படுத்துகிறவன், அநியாயத்தை விட்டு விலகுகிறவனாய் இருக்க வேண்டும். அவர் பெயரை வைத்து, அற்புதங்கள் செய்வதால் மட்டும் பரலோகத்துக்கு போக முடியாது.
நாம் என்ன செய்ய வேண்டும்?
கொலோசெயர் 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
சுலபமாக சொல்ல வேண்டுமானால், அவரைத் துதிக்க வேண்டும். கடைசியாக, நாம் அநேகரை சுகப்படுத்துவது, அநேக பிசாசுகளை துரத்துவது, இந்த ஊழியத்தைக் காட்டிலும், அவரைத் துதிப்பதை தேவன் விரும்புகிறார்.
அவர் நாமம் இயேசு கிறிஸ்து. அது வானத்திலும் பூமியிலும் மேலான நாமம். அவர் நாமம் பெரியது. அந்த நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும். நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுடைய நாமம். எல்லாவற்றிலும் வெற்றி சிறந்த நாமம். அந்த நாமத்தை தினமும் சொல்லி, அந்த நாமத்தின் மூலம் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவோம். ஆமென்.
Leave a Reply