இஸ்ரவேலரின் கொண்டாட்டம்

வேதத்தின் ஐந்தாவது பண்டிகை எக்காள பண்டிகை. அதுவே இஸ்ரவேலரின் வருட பிறப்பாகவும் உள்ளது. ஏழாம் மாதம் முதல் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றைய இஸ்ரவேலர் இப்பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுகின்றனர். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இஸ்ரவேலரின் நாள் நிலா வரும் போது ஆரம்பிக்கும். பொதுவாக, இஸ்ரேலரின் புது வருட பண்டிகையான Rosh Hashannah, எல்லா வருடமும் அமாவாசை நாளில் தான் வரும். யூதர்களுக்கு, அமாவாசை என்பது, new moon day, அதாவது புதிய நிலாவின் ஒரு சிறிய பகுதி தெரிய வேண்டும். இந்த நாளில்தான் சிறிய வெள்ளி தெரியும் என்பதைக் கணிக்க முடியாததால், 2 நாட்கள் இப்பண்டிகையை கொண்டாடுகிறார்கள். New Beginning என்பதால், நிலாவும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும் போல. பொதுவாக இந்துக்கள் தான், நிலாவில் பிறை பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதை பார்த்திருப்போம், முஸ்லீம்கள் ரம்ஜான் கொண்டாட பிறை தெரிய வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் யூதர்கள் கூட, பிறையை கணக்கில் வைத்து பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்பது புதிது தான்.

இப்படி பல காரியங்களை கூறுவார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்?

தேவன் ஆதாமை தன் கைகளால் படைத்து விட்டார். ஆனால் மனிதன் பிணம்போல  தான் இருக்கிறான். எப்பொழுது ஆதாமுக்கு உயிர் வந்தது?

தேவன் ஊதியதால் தான் மனிதனுக்கு உயிர் வந்தது. பொம்மை போல மனிதன் ஜீவனற்று கிடந்தான், ஆண்டவர் ஊதினார், உயிர் வந்தது. ஊதியதால் ஒரு புதிய ஆரம்பம்.

எசேக்கியேல் 37ல், உலர்ந்த எலும்புகளைப் பார்த்து தீர்க்கதரிசனம் உரைக்கச் சொல்வார். நரம்பும் மாம்சமும் உருவாகி விட்டது. ஆனால் ஆவி இல்லை.

மாம்சம் உருவாகி விட்டாலும், உயிரடைய வேண்டுமானால், ஊதவேண்டும் என்று தேவன் சொன்னார். ஊதினால்தான், புதிய ஆரம்பம் உருவானது. எனவே ஊதும்போது, ஏதோ ஒரு ஆவிக்குரிய மாற்றம் உருவாகும் என்று இஸ்ரவேலர் நினைக்கிறார்கள். ஊதும்போது, பரலோகம் அசையும், உடனே பதில் வரும் என்று நினைக்கிறார்கள்.

இஸ்ரவேலர் எப்படி கொண்டாடுகிறார்கள்?

  1. Teshuvah கொண்டாடுவார்கள்

முந்தின பதிவில் பார்த்தபடி, 40 நாட்கள் Teshuvah மனந்திரும்புதலின் நாட்கள் என்று கொண்டாடுவார்கள். தங்களை தாங்களே ஆராயும் நேரமாக இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

  • எக்காளம் ஊதுவார்கள்

தேவன் கொண்டாடச் சொல்லிய எக்காள பண்டிகை என்பதாலும், Teshuvah நாட்களில் தினமும் எக்காளம் ஊதும் வழக்கம் இருப்பதாலும், எக்காளம் ஊதுவார்கள்.

  • சபை கூடும் நாள்

அருகிலுள்ள சபையில் சென்று வேதம் தியானிப்பார்கள். செல்ல வாய்ப்பு இல்லை என்றால், குடும்பமாக, நண்பர்களாக இணைந்து, Local Bible Study செய்வார்கள். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றபோது, ஆட்டுக்குட்டியை பலியிட்டவர், மீதமிருந்த ஆட்டின் கொம்பை எடுத்து, வாயில் வைத்து ஊதி ஆண்டவருக்கு நன்றி சொன்னதாகவும், அதிலிருந்து தான் எக்காளம் ஊதும் கலாச்சாரம் வந்ததாகவும் யூதர்கள் கருதுகிறார்கள். எனவே இப்பண்டிகையில், ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் சென்ற நிகழ்வைப் பற்றி தியானிப்பர்.

  • Teshilch Ceremony

Rosh Hashannah அன்று யூதர்கள், சிறு bread துண்டுகளை கையில் எடுத்துக் கொண்டு, அருகிலிருக்கும் நீர்தேக்கங்களுக்கு சென்று, சபையாக அந்த துண்டுகளை உள்ளே எறிந்து விடுவர்.

தேவன் பாவங்களை மன்னித்து விட்டார் என்பதற்கு அடையாளமாகவும், சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார் என்பதற்கு அடையாளமாகவும், பிரெட் துண்டுகளை தண்ணீரில் வீசுவர். இதன் பின்னர், தங்களுக்கு புதிய ஆரம்பம் வந்து விட்டது என்று விசுவாசித்து, New Year Resolution புது வருட தீர்மானங்கள் எடுப்பார்கள்.

  • விருந்து

ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிடுவதுதான், Rosh Hashannah வின் சிறப்பு. வருகிற புத்தாண்டு இனிமையாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் சாப்பிடுவர். Shana Tovah என்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கு Have a Good Year என்று அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *