Feast of Tabernacle (Sukkot)
நாம் கர்த்தருடைய கிருபையால், ஆறு பண்டிகைகள் முடித்து இப்போது ஏழாவது பண்டிகைக்குள் வந்திருக்கிறோம். முதல் மூன்று பண்டிகைகள் முதலாம் மாதம் 14,15,16ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பஸ்கா (Pass over, Pesach), புளிப்பில்லாத அப்ப பண்டிகை (unleavened Bread), முதற்கனி (First Fruit) பண்டிகை. பின்பு 50வது நாளில், மூன்றாம் மாதம் 6வது தேதியில், நான்காவது பண்டிகையான வாரங்களின் பண்டிகை அதாவது பெந்தெகோஸ்தே பண்டிகை (Shavuot) கொண்டாடப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஏழாவது மாதம் முதல் தேதியில் ஐந்தாவது பண்டிகையான எக்காள பண்டிகையும் (Feast of Trumpet, Rosh Hashannah), ஏழாவது மாதம் பத்தாம் தேதியில், ஆறாவது பண்டிகையான பாவ நிவிர்த்தி நாள் (Yom kippur), ஏழாவது மாதம் பதினைந்தாம் தேதி முதல் ஏழாவது பண்டிகையான கூடாரப்பண்டிகையும் (Sukkot) கொண்டாடப்படுகிறது.
இந்த 7 பண்டிகைகளில் மூன்று பண்டிகைகளுக்கு,(பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத்) யூத ஆண்கள் சபையாக கூடி வர வேண்டும் என்று தேவன் கூறினார். பஸ்கா என்பதில், எகிப்திலிருந்து வெளியே வந்த அனுபவம் இஸ்ரவேலருக்கு. நமக்கு, பாவத்தை விட்டு வெளியே வந்த அனுபவம். பெந்தெகோஸ்தே என்பது, சீனாய் மலை அனுபவம் இஸ்ரவேலருக்கு. நமக்கு, சீயோன் மலை அனுபவமான, பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இது தான் கிறிஸ்தவர்கள் என்ற ஒரு பிரிவு யூதர்களிடமிருந்து பிரிந்து தனியே ஆரம்பித்த தருணம். மூன்றாவது சுக்கோத் அனுபவம். இன்றுமே நாம் பெந்தெகோஸ்தே அனுபவம் வரைக்கும் தான் வருவோம். அதற்கு பின் உள்ள சுக்கோத் அனுபவத்துக்கு செல்பவர்கள் வெகு சிலரே. கடைசி கால எழுப்புதல், மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்று வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுவது சுக்கோத் அனுபவத்தின் ஒரு துளி அளவு மட்டுமே. சுக்கோத் அனுபவம், இயேசுவின் 1000 வருட அரசாட்சி கால மகிமையைக் குறிக்கும்.
இந்த கூடாரப்பண்டிகை என்பது, இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் கூடாரத்தில் வாழ்ந்ததை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில், முதல் 7 நாட்கள், இஸ்ரவேலர் இன்றும் வீட்டிற்கு வெளியே கூடாரம் போட்டு, அதில் வசிக்கிறார்கள். எட்டாவது நாள் சபை கூடும் நாள். பண்டிகையின் முடிவின் நாள்.
3.நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
14.உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
15.உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
உபாகமம் 16
இப்பண்டிகையில் என்ன செய்ய தேவன் கூறினார் என்றால், சந்தோஷப்படுங்கள். அவ்வளவுதான். Nothing, but Joy. நாம் சந்தோஷமாக இருப்பது தேவனுடைய கட்டளை. சந்தோஷமாயிருப்பதற்காகவே ஒரு பண்டிகை கொடுத்திருக்கிறார் எனில், சந்தோஷமாயிருப்பது எவ்வளவு முக்கியம் அல்லவா!
இந்த வருடம் செப்டம்பர் 2023ல், 30ம் தேதி கூடாரப் பண்டிகை வந்தது. பொதுவாக, இன்றைய இஸ்ரவேலர் எப்படி கொண்டாடுவார்கள் என்றால், தோரா என்ப்படும் வேதாகம சுருளை, வீட்டில் வைத்து, வீட்டில் உள்ளவர்கள், தோராவை முதல் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை, ஒரு முறை சுற்றி வருவார்கள். ஏழாம் நாளிலோ, ஏழு முறை சுற்றி வருவார்கள். எகிப்திலிருந்து எரிகோ வரும்வரை, கூடாரத்தில் வாழ்ந்ததை நினைவுகூறும் பண்டிகை தான், கூடாரப்பண்டிகை. இஸ்ரவேலர், தோராவை சுற்றி வந்து, அந்த பண்டிகையை ஆசரிப்பார்கள். அக்டோபர் 5ம் தேதி வரை ஆறு நாட்கள், அவர்கள் தோராவை ஒரு முறை சுற்றி வந்திருப்பார்கள். ஏழாம் நாளுக்கு, Hoshana Rabha என்று பெயர், அதன் அர்த்தம், The Ultimate Salvation. ஏழாம் நாளான, ஹோஷனா ரஃபா வில், அவர்கள் தோராவை, ஏழு முறை சுற்றி வர வேண்டும். அந்த 7வது நாளில், அக்டோபர் 6ல், அவர்கள் ஏழு முறை சுற்றினார்கள். அதற்கு அடுத்த நாளான, எட்டாம் நாள் Simchat Torah. சிம்காட் என்றால், greatest Joy. மிக உயர்ந்த மகிழ்ச்சி. சிம்காட் தோரா என்றால், வேதத்தைக் குறித்தே என் மகிழ்ச்சி என்று அர்த்தம்.
எட்டாம் நாள், அக்டோபர் 7,2023 மிகவும் சிறப்பான நாள். காசாவிலிருந்து 3 மைல் தொலைவில், சில கிராமங்கள் இஸ்ரவேலில் உள்ளது. அதிலிருந்து கரண்ட் எடுத்து, ஒரு பெரிய கொண்டாட்டத்தை கொண்டாடினார்கள். யேசபேலின் படம் வரைந்து, வேறுவேறு மதங்களின் பாரம்பரியம் கொண்டு வந்து, வண்ண விளக்குகள் போட்டு, யூதர்கள் பேயாடுவது போல, நடனமாடி இருக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையைக் குறித்து கொண்டாட வேண்டிய நாளிலே, பேயைக்குறித்து கொண்டாடி இருக்கிறார்கள். தேவனுக்கு கோபம் வந்ததால், இஸ்ரவேலின் மீதுள்ள கையை எடுத்தார் தேவன். ஹமாஸ் உள்ளே வந்தது, இழப்புகள் வந்தது.
யோவான் 7ம் அதிகாரத்தில், இயேசு வாழ்ந்த நாட்களில் ஒரு கூடாரப்பண்டிகை வருகிறது. யூத ஆண்கள் எல்லாரும், எருசலேமுக்கு செல்ல வேண்டும் என்பதால், இயேசுவின் சகோதரர்களும் செல்கிறார்கள். அவர்களுக்கு இயேசுவின் மீது அப்போது, விசுவாசம் இல்லை என்பதால், வருவார்கள். நீரும் போகலாமே” என்கிறார்கள். இயேசு, இப்போது என் வேளை வரவில்லை. நீங்கள் போங்கள் என்று அனுப்பி வைக்கிறார். பண்டிகையில், அவரை யூதர்கள் தேடுகிறார்கள். பாதி பண்டிகையில், அவர் தேவாலயத்துக்கு போய் உபதேசிக்கிறார். பாதி பண்டிகை என்பது, ஒருவேளை நான்காவது நாளாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். பண்டிகையின் கடைசி நாளில், ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன் என்கிறார், இந்த கடைசி நாள் என்பது, எட்டாவது நாளான 22ம் தேதியைக் குறிக்கிறது.
அறிஞர்கள் கருத்துபடி, இயேசு முதல் நாளிலே பண்டிகைக்கு போயிருப்பார், ஆனால் யாருக்கும் காணப்படாமல், தன்னை முக்காடிட்டு மறைத்திருப்பார் என்கிறார்கள். கூடாரப்பண்டிகையில் ஒரு கூடாரம் நம்மை மூடியிருக்க வேண்டும். இயேசுவும் தான் வந்திருப்பது யாருக்கும் தெரியாதபடிக்கு, முக்காடிட்டு (hooded) இருந்ததால், அவரும் ஒரு மூடப்பட்ட அனுபவத்துக்குள் இருந்திருப்பார். அதாவது, ஒரு கூடாரத்துக்குள் இருந்தது போல மறைந்திருப்பார்.
எட்டாவது நாள், ஒரு பாரம்பரியமான காரியம் உண்டு. அதாவது, பிரதான ஆசாரியன், சீலோவாம் குளத்தின் தண்ணீரை எடுத்து வந்து, தேவாலய படிகளில் ஊற்றி விடுவார். பண்டிகை முடிந்துவிட்டது என்பதன் அடையாளம்.
நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
ஏசாயா 12 – 3
இந்த வசனத்தை சொல்லிக்கொண்டே தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். இயேசு என்ற பெயரின் அர்த்தம், இரட்சிப்பு என்பது நமக்கு தெரியும். இங்கே எபிரேய மொழி பெயர்ப்பில், இரட்சிப்பின் ஊற்று என்பதை, yeshuvahவின் ஊற்று என்று குறிப்பிட்டிருக்குமாம். அதனால் தான், அந்த நிகழ்வு நடக்கும்போது, மனது பொறுக்காமல், “ஏய் அந்த தண்ணீரை அப்படி பார்க்கிறீர்களே. நான் தான் அது, இந்த நிகழ்வு என்னைத்தான் குறிக்கிறது. ஜீவ தண்ணீர் நான்தான்” என்று இயேசு தொடர்ந்து வரும் பதிவுகளில் பேசியிருப்பார்.
பல காலங்களாக யூதர்கள் அக்காரியத்தை, பாரம்பரியமாக செய்தார்கள். இயேசு கண் முன்னே இருக்கும்போது கூட, அதை செய்தார்கள். ஆனால் இன்று நமக்கு ஒவ்வொரு பண்டிகைக்கும் அர்த்தம் தெரியும். பண்டிகைகள் வருங்காரியமான இயேசுவைக் குறிக்கிறது என்பது தெரியும். நாம் பார்த்தபடி, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை, இனி நடக்கப்போவது. ஆனால் அந்த அனுபவம் கடைசி கால் எழுப்புதல் என்ற பெயரில் கட்டவிழ்க்கப்படுகிறது. கொஞ்சம் காலம் மட்டுமே இப்போது வெளிப்படும் உலகில், நாமும் அனுபவிக்க வேண்டும்.
இந்த சுக்கோத் பண்டிகையை இக்கால இஸ்ரவேலர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கடைசி பதிவாக வரும் பதிவில் பார்ப்போம்.
Leave a Reply