|

பண்டிகைகள்–17 (கூடாரப் பண்டிகை)

கூடாரப் பண்டிகை

Feast of Tabernacle (Sukkot)

எனக்கு வேதத்தில் சில காரியங்களை ஆராய்ந்து படிக்க பிடிக்கும். சில மாதங்களுக்கு முன்பு, யோவான் சுவிசேஷம் படித்துக் கொண்டிருந்தேன். யோவான் புத்தகத்தில் 7, I am Statement, 7 அற்புதங்கள் இருக்கிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், அதை Note செய்து கொண்டே வந்தேன். அப்போது, இயேசு உயிர்த்தெழுந்தது 8வது அற்புதமாகவும், பின்னர் பெரிய 153 மீன்கள் பிடித்தது 9வது அற்புதமாகவும் இருந்து. (நிறைய நேரங்களில் இப்படித்தான் என் நேரத்தை வீணாக்குவது போல எனக்கு தோன்றும்.) ஒருவேளை இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், 153 மீன் என்பதால், அதைக்கூட அப்போது அவர் மனிதன் இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தது 8வது தானே என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தளங்களில், பேதுரு கடலில் நடந்தது அற்புதம் அல்ல என்றும், இயேசுவின் உயிர்த்தெழுதல் 7வது அற்புதம் என்றும் படித்தேன். அதன் பின்னர் நிறைய படிக்கும்போதுதான் தெளிவான ஒரு விளக்கம் கிடைத்தது. 7 அற்புதங்கள் இயேசுவின் அற்புதங்கள் பழைய உடன்படிக்கையில் இருக்கிறது. எட்டாவது அற்புதமான இயேசுவின் உயிர்த்தெழுதல் புதிய உடன்படிக்கையை ஆரம்பிக்கிறது.  இப்படி கொஞ்சம் விளக்கம் கிடைத்தது.

வேதத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கும். உதாரணமாக 7 என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். அதுபோல தான் இந்த 8 என்ற எண்ணும். 8 என்பது New Beginning புதிய ஆரம்பத்தைக் குறிக்கிறது. இயேசு எப்பொழுது உயிர்த்தெழுந்தார்? வாரத்தின் முதல் நாளில். அதாவது 7 நாட்கள் கழித்து, எட்டாம் நாளில் உயிர்த்தெழுந்தார். 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா! இப்போது யோவான் சுவிசேஷத்தில், 8 வது அற்புதம் இயேசுவின் உயிர்த்தெழுதல். அதாவது புதிய உடன்படிக்கை ஆரம்பிக்கிறது. பலி எல்லாம் முடிந்து, நமக்கான ஒரே பலி செலுத்தப்பட்டு விட்டது. எனவே 8 என்பது புதிய ஆரம்பம் தானே. அடுத்ததாக, தேவன் இந்த உலகத்தை 7 நாளில் படைத்தார் என்பதை அறிவோம். நாம் இப்பொழுது தேவனுடைய 7வது நாளில் இருக்கிறோம். அடுத்ததாக இந்த பூமி அழிந்து, புதிய பூமி உருவாகும்போது, தேவனுடைய எட்டாவது நாள் ஆரம்பிக்கும். நான் உங்களுக்காக வாசஸ்தலத்தை உருவாக்க போகிறேன் என்று இயேசு சொல்லியிருந்தார் அல்லவா! அது எட்டாம் நாளின் படைப்பு. அப்படியானால், 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா!

தேவன் சூரியனை சந்திரனை எல்லாம் நான்காவது நாளிலே உருவாக்கினார். ஒரு நாளில், சூரியன் உதித்தால் நமக்கு நாள் ஆரம்பிக்கிறது. அதேபோல, இஸ்ரவேலர் போல, லூனார் காலண்டர் உபயோகிப்பவர்களுக்கு, சந்திரன் தோன்றினால் நாள் ஆரம்பிக்கிறது என்று பார்த்திருக்கிறோம். இங்கே நான்காவது நாள்தான் சூரியன் படைக்கிறார் என்றால், அதற்கு முன் எப்படி 3 நாள் முடிந்திருக்கும்?  நாள் என்பதை எப்படி கணக்கிட்டு இருப்பார்?

“தேவன் வெளிச்சம் படைத்தது முதல் நாளில். ஆனால் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் படைத்தது நான்காவது நாளில். எப்படி வெளிச்சம் வந்திருக்கும்? உன் பைபிள் தவறு” என்று சிலர் பதிவை வாசித்த பின்னர் தான், அட ஆமால.. என்று யோசிக்கவே செய்தேன் என் கல்லூரி நாட்களில். சிறு வயதிலிருந்தே நாம் வேதம் வாசித்தாலும், புரிந்து தெளிவாக படிக்கிறோமா? என்பது சந்தேகமே. அதன் பின்னர் தான் தெரிந்து கொண்டேன், முதல் 3 நாட்களில் பூமிக்கு வெளிச்சம் தந்தது கர்த்தருடைய மகிமையே. ஆதாம் இழந்து போன கர்த்தருடைய மகிமை அது. ஆதாம் கீழ்ப்படியாமையில் விழும்வரை, அந்த மகிமை பூமியில் இருந்தது.

இந்த ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில், முதல் வசனத்துக்கும் 2ம் வசனத்துக்கும் இடையே, ஒரு காலம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று, இரண்டாம் வருகை பற்றி பேசும், சகோ.ஏசுவடியான் அவர்களின் புத்தகத்திலும், சகோ.சாம் ஜெபத்துரை அவர்களின் புத்தகத்திலும் கூறப்பட்டிருந்தது.  அதன் பின்னர்தான் creation பற்றி படிக்கும் போது, முதலாம் நாள், இரண்டாம் நாள் என்று தேவன் கூறியது, மனிதர்களுடைய நாட்கணக்கு அல்ல, தேவனுடைய நாள். 10,000 வருட படிமம் கிடைத்தது, பல லட்ச வருடத்துக்கு முந்தின டைனோசர் படிமம், என்றெல்லாம் ஆராய்ச்சியாளார்கள் கண்டுபிடிப்பது உண்மையாக இருக்கலாம். எபிரேயத்தில், முதலாம் நாள் ஆயிற்றென்று எழுதப்பட்டதன் இன்னொரு அர்த்தம், ஒரு சகாப்தம் ஆயிற்று என்பதாம். அதாவது, முதலாவது தேவன் ஒரு படைப்பை படைத்து அதை ரசித்து நல்லது என்று கண்டு, பின்னர் அடுத்த படைப்பை படைத்தார். அப்படி பார்த்தால், இப்போது நாம் ஏழாவது நாளில் இருக்கிறோம் என்பது உண்மை தானே! எட்டாவது நாள் என்பது, இனி வரும் புதிய பூமி. II பேதுரு 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். எனவே கர்த்தருக்கு ஒரு நாள் என்பது எத்தனை வருடங்கள் என்பதை கர்த்தரே அறிவார்.

இப்பொழுது ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், சுக்கோத் என்ற கூடாரப்பண்டிகையிலும், ஏழு நாட்கள் கூடாரத்துக்குள் இருக்க வேண்டும். எட்டாவது நாள் என்பது பரிசுத்தமான ஓய்வு நாள். அதில் சபை கூட வேண்டும் என்று தேவன் கூறினார். எட்டு என்பது புதிய பூமியைக் குறிக்கும். எனவே எட்டாம் நாள் பண்டிகை என்பது, இரகசிய வருகை முடிந்து, அந்தி கிறிஸ்து ஆட்சி 7 வருடம் முடிந்து, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி முடிந்து, அதன் பின்னர் ஆரம்பிக்கப்போகும் புதிய பூமியைக் குறிக்கும். 

இந்த கூடாரப்பண்டிகையை பொறுத்தவரையில் தேவன் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளை, சந்தோஷமாயிருங்கள். சுக்கோத் பண்டிகையில் என்ன செய்ய வேண்டும், nothing but joy. லேவி 23-36ல் எட்டாம் நாள் சபை கூடும் பரிசுத்த நாள். அதில் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். எட்டாம் நாள், வேலை செய்ய வேண்டாம், சந்தோஷமாயிருக்க வேண்டும். அவ்வளவு தான்.

இந்த கூடாடப்பண்டிகை கர்த்தர் ராஜாவாயிருக்கும்போதும் நடக்கும் என்று, சகரியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். கூடாரப்பண்டிகை கொண்டாடவில்லை என்றால், அவர்களுக்கு தண்டனை வரும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பண்டிகை இது. இஸ்ரவேலர் இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    விடுதலை-1 (போராடும் சிங்கம்)

    போராடும் சிங்கம் நான் பார்த்த சில செய்திகளின் தொகுப்பை முதலில் உங்களிடம் பகிர விரும்புகிறேன். கடந்த 3 மாதங்களில் வந்த சில செய்திகள் தான் இவை. இன்னும் அநேக செய்திகள் உள்ளன. சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அவை உங்கள் பார்வைக்கு: 13 வயது சிறுவன் மத்திய பிரதேசத்தில், தன் சொந்த தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்கிறான். ஆந்திராவில் 13 வயது சிறுவர்கள் இப்பொழுதே  கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். மகாராஷ்டிராவில் 13 வயது சிறுவன், தன் சொந்த…

  • |

    Day 66 (07-03-2025)

    Scripture Portion: Numbers 28-30 எண்ணாகமம் 28 1கர்த்தர் மோசேயை நோக்கி: 2எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே…

  • |

    Day 157 (06-06-2025)

    Scripture Portion: Proverbs 10-12 நீதிமொழிகள் 10 1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். 2அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். 6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று…

  • |

    Day 345 (11-12-2025)

    Scripture Portion: Romans 14-16 ரோமர் 14 1விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். 2ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். 3புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. 5அன்றியும், ஒருவன் ஒருநாளை…

  • |

    Day 43 (12-02-2025)

    Scripture Portion: Exodus 39-40 யாத்திராகமம் 39 1கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள். 2ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 3அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள். 4இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய்…

  • |

    விடுதலை – 7 Vlad மற்றும் Danielன் வெற்றி

    இரு ஊழியர்கள், தங்களுடைய வாழ்வில், porn addictionல் இருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்ற சாட்சியைப் பார்த்தோம். அவர்கள் வாழ்விலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இருவருமே ஒரு நல்ல ஜெபிக்கிற வீட்டில் பிறந்தவர்கள். Vlad: Vlad சிறுவனாக இருக்கும்போது, டீன் ஏஜ் உந்துதலால், ஆபாச படத்தை பார்க்க ஆரம்பித்தவர், அதற்கு அடிமையாகி விட்டார். ஒரு ஜெபிக்கிற பெற்றோரின் மகனுக்கு, அதிக வருடங்கள் பாவத்தில் நிலைத்திருக்க முடியாது. vladம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *