Israel

  • |

    இஸ்ரேல்–29 (மேதிய பெர்சிய சாம்ராஜ்யம்)

    முதல் சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம், அவர்கள் இஸ்ரேலின் 10 கோத்திரமாக இருந்த இஸ்ரவேலை சிறைபிடித்து, பல நாடுகளில் கலந்து விட்டார்கள். 2 இராஜாக்கள் 17ம் அதிகாரத்தோடு, 10 கோத்திரங்கள் வரலாறு முடிந்தது. இரண்டாம் சாம்ராஜ்யம் பாபிலோன் சாம்ராஜ்யம், அவர்கள் மீதமிருந்த 2 கோத்திரங்களை சிறைபிடித்து 70 வருடங்கள் கூட்டி சென்றனர் என்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம். இன்று மூன்றாம் சாம்ராஜ்யமான மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். பாபிலோனை தோற்கடித்து பெர்சிய ராஜா கோரேஸ் ஆட்சியைப் பிடித்தார்…

  • |

    இஸ்ரேல்-28 (பாபிலோனிய சாம்ராஜ்யம்)

    முதல் சாம்ராஜ்யம் அசீரிய சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம். இப்போது இரண்டாவது சாம்ராஜ்யமான பாபிலோன் சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். இந்த பாபிலோனியரின் கால கட்டத்தில் தான், எரேமியா, எசேக்கியேல், தானியேல் என்பவர்கள் இருந்தார்கள். எனவே இப்பதிவு கொஞ்சம் பெரியதாக இருக்கலாம். ஆனால் ஒரே பதிவில் கொடுத்தால், நன்றாகப் புரியும் என்பதால் பெரிய பதிவு. நேரம் ஒதுக்கி படியுங்கள். கோரேஸ் மன்னன் எப்படி பாபிலோனியரை மேற்கொண்டான் என்பதையும் இப்பதிவில் படிக்கலாம். இதைத் தெரிந்து கொண்ட பின், வேதம் வாசித்தால், இன்னும்…

  • |

    இஸ்ரேல்–27 (அசீரிய சாம்ராஜ்யம்)

    அசீரிய சாம்ராஜ்யம் வேதத்தில் இராஜாக்கள், நாளாகமம் புத்தகத்தில், யூதாவின் ராஜாக்கள், இஸ்ரேல் ராஜாக்களைப் பற்றி வரிசையாகக் கூறப்பட்டிருக்கும். இஸ்ரவேல் தேசம், அசீரியர்களின் கையில் ஒப்பு கொடுக்கப்படுவதோடு, இஸ்ரேல் தேசத்தைப் பற்றிய குறிப்புகள் வேதத்தில் முடிந்திருக்கும். ஆனால் யூதா தேசமோ, அதற்கு அடுத்து பாபிலோனுக்கு சிறைப்பட்டு செல்வது, பாபிலோனில் இருந்து மீண்டும் வருவது, என யூதாவைப் பற்றிய குறிப்புகள் வேதத்தில் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும். யூதாவின் தலைநகர் எருசலேம். அதைப் பற்றி தொடர்ச்சியாக நாம் காண இருக்கிறோம். முதலாவது பெரிய…

  • |

    இஸ்ரேல்-26 (சாலொமோன்)

    சாலொமோன் தாவீதுக்குப் பிறகு சாலமோன் இஸ்ரவேல் தேசத்தை அரசாளுகிறார். சாலமோன் ராஜாவாகும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாகத்தான் இருந்தார். தேவன் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, ஞானத்தைக் கேட்டவர் சாலமோன். நன்கு வேதத்தை படித்தவர்களிடம், “தேவனைப் பற்றி உங்களது கற்பனை வாழ்வு எது?” என்று கேட்டால், தாவீதைப்போல் ஆண்டவரிடம் உறவு கொள்வது எங்கள் கற்பனை வாழ்வு என்று கூறுவார்கள். அந்த தாவீதின் மகன்தான் சாலமோன். நமக்கு ஒரு தரிசனம் கிடைப்பதே அரிது. ஆனால் சாலமோனிடம் தேவனே…

  • |

    இஸ்ரேல்–25 (தாவீதின் பாவம்)

    தாவீதின் பாவம் தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது. தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது? 2 சாமுவேல் 24…

  • |

    இஸ்ரேல்-4 (வினோத சட்டங்கள்)

    இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள் 1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது. 2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை தயாரிப்பவர்கள் யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை மழுங்கி விடும் என்பதால், 15 வயது வரை கார்ட்டூன் பார்க்க கூடாது…

  • |

    இஸ்ரேல்

    இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று வேதத்தில் வாசிக்கும் போதெல்லாம், இஸ்ரவேலைப் பற்றி அதிகமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். ஏன் அவர் இஸ்ரவேலின் தேவன்? இந்தியாவின் தேவனாக ஏன் அவர் இருந்திருக்கக் கூடாது? பிற மதத்தினர் சொல்வது போல வெளிநாட்டு கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேனா? இது போன்ற எண்ணங்கள் எனக்கு பள்ளிப்பருவத்திலே அதிகமாக வந்தது உண்டு. எவ்வளவு அதிகமாக வேதத்தை வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதைப் பற்றியும்…