Day – 16 (16- டிசம்பர், 2023)
தெய்வீக சமாதானத்துக்காக நன்றி
தேவனே, நீர் கொடுத்த தெய்வீக சமாதானத்துக்காக நன்றி. நீர் கொடுக்கும் சமாதானம், நிபந்தனையற்றது. அது அளவிட முடியாதது. அதற்கு கால அவகாசம் கிடையாது. நீர் கொடுக்கும் சமாதானம் பூரணமானது. என் நன்மை காலத்தில் மட்டுமல்ல, நீர் என் துன்ப காலத்திலும் எனக்கு சமாதானத்தை தந்தீர் நன்றி அப்பா.
உலக மக்கள், தங்கள் வாழ்வில் நன்மையான (good) காரியங்களில், சமாதானமாக இருப்பார்கள். அதேவேளையில், கெட்ட (bad) காரியங்களில் சமாதானம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால், உம்மை விசுவாசிக்கிற எனக்கு, என் வாழ்வில் கெட்ட காரியமாய் எதுவும் தோன்றினாலும் கூட, அதை நீர் நன்மையாக மாற்றுவீர் என்ற சமாதானம் இருக்கிறது. அதற்காக நன்றி அப்பா.
நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்க இயேசப்பா. உங்க சமாதானத்தை எனக்கு தருவேன் என்று. அதை இயேசுவின் நாமத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் பேசுகிறேன். கர்த்தருடைய சமாதானம் எங்களோடு இருப்பதாக. என் இருதயத்தில் தேவையற்ற கலக்கங்கள், பயங்கள் வரக்கூடாது. என் வாழ்வில் சில காரியங்களில் நான் தோற்றதுபோல இருக்கலாம், சில காரியங்களில் உலகம் என்னை நிந்திக்கலாம். எனக்கு விசுவாசம் இருக்கிறது, எனக்கு நீர் கொடுத்தது உங்க சமாதானம். அது தெய்வீக சமாதானம். அதற்கு expiry கிடையாது. இயேசுவின் நாமத்தில், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தெய்வீக சமாதானத்தை பேசுகிறேன்.
எனக்கு இது இல்லை, அது இல்லை என்று குறைபட வரவில்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று விண்ணப்பம் பண்ண வரவில்லை. உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இயேசப்பா. என் குறைவுகள், இழப்புகள் எவ்வளவு இருந்தாலும், என் உள்ளத்தில் உம் தெய்வீக சமாதானம் இருக்கிறது. கலக்கங்கள் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும், நீர் செய்த நன்மையை நினைக்கும்போது, ஒரு தெய்வீக சமாதானம் வருகிறது. அதற்காக நன்றி இயேசப்பா.
பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.Tamil Easy Reading Version
தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.Thiru Viviliam
அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.“The peace of God which is beyond our understanding will guard your hearts and your thoughts in Christ Jesus” (Phil 4:7).
தேவனுடைய சமாதானம் என்பதை வேதம் beyond our understanding என்று சொல்கிறது. இயேசப்பா, எங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, நீங்க எங்களுக்கு தந்து, எங்க இருதயத்தை, எங்க சிந்தையை இதுவரை பாதுகாத்து இருக்கீங்க. அதற்காக நன்றி.
உங்க சமாதானம் எனக்குள் இருந்ததால தான், நான் மன அழுத்தத்துக்குள்ள போகலை. எனக்கு தற்கொலை எண்ணம் வரவில்லை. அடிமைத்தனத்துக்குள் போகலை. அதற்காக நன்றி. என்னை ஜீவனோடு வைத்திருப்பது, உங்க சமாதானம் இயேசப்பா. அதற்காக நன்றி.
இயேசப்பா, என் வாழ்வில், எவ்வளவு புயல் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அவமானங்கள் வந்தாலும், இம்மட்டும் என்கூட இருந்து பாதுகாத்த உங்க தெய்வீக சமாதானம், என் வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாக்க வேண்டும். நீங்க கொடுத்த, கொடுக்கப்போகிற தெய்வீக சமாதானத்துக்காக நன்றி இயேசப்பா. ஆமென்.
Leave a Reply