Day – 18 (18- டிசம்பர், 2023)
அரசியல் தலைவர்களுக்காக நன்றி
நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம்.
உண்மையில், இப்போது தமிழ் நாட்டிலும், எந்த கிராமத்துக்கு சுவிசேஷ ஊழியம் சென்றாலும், மக்கள் தடை பண்ணுகிறார்கள். கணவருடைய ஜெபக்குழுவின் மூலம், நேற்று (16-12-2023) ஒரு கிராமத்துக்கு உதவி செய்ய சகோதரர்கள் சென்றிருந்தார்கள். 187 குடும்பங்களாக, மற்ற மதத்தினரும் சேர்ந்து கூடியிருந்த அந்த கூட்டத்தில் பேச, சகோதரர்களுக்கு அவர்கள் சொன்ன கட்டளை என்ன என்றால், “அல்லேலூயா, ஸ்தோத்திரம், வசனங்கள் என்று எதுவும் சொல்லாமல், சும்மா பேச வேண்டும். அதுவும் 5 நிமிடங்கள் பேசவேண்டும் என்பது தான்” இப்போது முன்பு போல சுவிசேஷம் அறிவிக்க முடியவில்லைதான். ஆனால் கூட்டம் முடிந்த பிறகு, தனித்தனியாக அத்தனை பேரும் ஜெபிக்க கூடினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சனையை சொல்லி ஜெபிக்க கேட்டார்கள். தேவன் நமக்கு இன்னும் வாசலை திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். இம்மட்டும் கூட்டங்கள் நடத்த தடையாக இல்லாமலிருக்கிற நம் அரசியல் தலைவர்களுக்காகவும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
உத்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில், எத்தனையோ கஷ்டப்படுகிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று செய்தியில் படித்தோம். கர்த்தருடைய கிருபையால் ஓரளவு கர்நாடகா பரவாயில்லை என்றாலும், வட மாநிலங்களில் எவ்வளவு நெருக்கப்படுகிறார்கள். நாம் இங்கே அவ்வளவு கஷ்டப்படவில்லை. இன்றும் சபைகளில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டம் உள்ளது. நம் மாநிலத்தில் இம்மட்டும் தேவன் வாசலைத் திறந்து கொடுத்திருக்கிறார். தேவனுக்கு நன்றி சொல்வோம்.
கிறிஸ்தவர்கள் நெருக்கப்படுகிறார்கள். ஆனால், இம்மட்டும் தேவன் நம்மை பாதுகாத்தாரே. நம் நண்பர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்களா? இல்லையே. ஆனால் இம்மட்டும் தேவன் நம்மை அனைவரிடமும் நன்றாக பழகும்படி கிருபை செய்தாரே. இந்த மட்டும், நமக்கு தயை செய்கிற அரசியல் தலைவர்களை கொடுத்திருக்கிற தேவனுக்கு நன்றி சொல்வோம். கொடுக்கப்பட்ட இந்த காலத்தை நாம் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம்.
Leave a Reply