2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. 3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
யாத்திரகாமம் 12 – 2,3,6
3. முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 33- 3
மேலே குறிப்பிட்ட வசனங்களின் படி,
First Month
நிசான் மாதம்(ஆபிப் மாதம்)
01/01 புது வருடம் ஆரம்பம்
10/01 ஆட்டுக்குட்டி தேர்ந்தெடுக்க வேண்டும்
14/01 ஆட்டுக்குட்டி அடிக்க வேண்டும்
15/01 எகிப்தை விட்டு புறப்பட்டார்கள்
Second Month
சீப் மாதம் (ஐயர் மாதம்)
1. இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
யாத்திரகாமம் 16 – 1
16/02 சீன் வனாந்திரத்தில் முறுமுறுத்தார்கள்
1.இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
11. மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.
16. மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
யாத்திரகாமம் 19 – 1,11,16
Third Month
சீவான் மாதம்
01/03 சீனாய் வனாந்திரம்
04/03 கர்த்தர் இறங்கி வருகிற அனுபவம்
15. மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
யாத்திரகாமம் 24-15
06/03 மோசே மலையில் ஏறி 40 நாள் இருக்கிறார்.(1st Time Day1)
Fourth Month
தம்மூஸ் மாதம்
17/04 40 நாள் முடிந்து கீழே வருகிறார். (1st Time Day 40)
ஜனங்கள் அதற்குள் கன்றுகுட்டி செய்து வழிபட்டதால் கோபத்தில் கற்பலகையை உடைத்துப் போடுகிறார். அந்த 40 நாளில் ஆசரிப்புகூடாரம் எப்படி செய்ய வேண்டும், ஆசாரியரின் வஸ்திரங்கள், பலிகள் பற்றி கர்த்தர் கற்றுக் கொடுத்திருப்பார்.
30. மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
யாத்திரகாமம் 32-30
18/04 அடுத்த 40 நாட்கள் மோசே மலையில் இருந்தார்.
(2nd time Day 1)
வேதத்தில் கூறப்படவில்லை என்றாலும், இஸ்ரவேலரின் மத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 40 நாட்களும், தேவன் மோசேயிடம், “நீயும் நீ அழைத்து வந்த ஜனமும்”, என்பது போல பேசுவார். அதற்கு முன்பாக, என் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தில் படும் உபத்திரவத்தைக் கண்டேன் என்று, “என் ஜனங்கள்” என்று கூறியிருப்பார்.
இந்த அனுபவத்தை மோசேக்கு தோல்வியடைந்த நேரம் என்று கருதுகிறார்கள். அதன் பின்னர், மோசே 33ம் அதிகாரம் முழுவதிலும் “உம்முடைய ஜனம், உம்முடைய ஜனம்” என்று பரிந்து பேசி இருப்பார். ஆனாலும் தோல்வியடைந்த தருணமாக பார்க்கப்படுகிறது.
Fifth Month
ஆப் மாதம்
29/05 40 நாட்கள் முடிந்து தோல்வியடைந்து வருகிறார் மோசே
(2nd Time Day 40)
Sixth Month
ஏலுல் மாதம்
01/06 New Season. தேவனே ஆரம்பிக்கிறார். (3rd Time Day 1)
தோல்வியடைந்து திரும்பிய மோசேயிடம், தேவன் பேசி, இரண்டு கற்பலகை கொண்டு வரும்படி சொல்கிறார். இந்த 40 நாட்களை Teshuvah என்று இஸ்ரவேலர் இன்றும் கொண்டாடுகின்றனர். இந்த 40 நாட்கள் தேவனுடைய தொடுதலின் நாட்கள், மனந்திரும்புதலின் நாட்கள், அனுக்கிரகத்தின் நாட்கள், புதிய ஆரம்பத்தின் நாட்கள் என்று கொண்டாடுகின்றனர்.
Sevanth Month
திஷ்ரி மாதம்
10/07 40 நாட்கள் முடிந்து மோசே திரும்ப வருகிறார்.(3rd time Day 40 )
இந்த நாட்களை இஸ்ரவேலர் கொண்டாடுகின்றனர். ஏனெனில் இது தேவன் ஆரம்பித்த காலம்.
நாம் இப்பொழுது ஏன் இந்த காலவரிசையைப் பார்த்தோம் என்றால், இஸ்ரவேலர் கொண்டாடும் பண்டிகைகள் இதோடு தொடர்புடையது.
பொதுவாக நாம் எப்பொழுது பண்டிகைகள் கொண்டாடுவோம்? பிறந்த நாள் என்றால், அந்த நாளில் நான் பிறந்து இருக்கிறேன். எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. திருமண நாள் என்றால், அன்று எனக்கு திருமணம் நடந்து இருக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது, ஏதோ ஒரு நாளை கிறிஸ்து பிறப்பின் நாளாக நியமித்து, நாம் கொண்டாடுகிறோம். இப்படி ஏதோ ஒன்றை, நடந்து முடிந்த காரியத்தைக் கொண்டு பண்டிகைகள் கொண்டாடுகிறோம். அதேபோல் தான் வேத பண்டிகைகளும். இஸ்ரவேலருக்கு அது நடந்து முடிந்த அனுபவமாக உள்ளது.
முதல் பண்டிகையான பஸ்கா, எகிப்தில் ஆட்டை அடித்து இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் தெளித்து, சங்காரத்தூதனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட அனுபவம். வாரங்களின் பண்டிகை என்று கொண்டாடப்படும் ஐம்பதாவது நாள் பண்டிகை, சீனாய் வனாந்திரத்தில் கர்த்தர் இறங்கி வந்து மோசேயிடம் பேசிய அனுபவம். பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடுவது, மோசே மூன்றாவது முறையாக தேவனே ஆரம்பித்த சீசனில், மலைக்கு சென்று இறங்கி வந்த அனுபவம். இப்படி நடந்து முடிந்த காரியங்களை அவர்கள் கொண்டாடுகின்றனர். நமக்கு இந்த காரியத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. 17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
கொலேசெயர் 2 – 16,17
ஆம், நமக்கு பண்டிகை நாட்கள் என்பது கிறிஸ்துவைப் பற்றியது. பஸ்கா என்பது, இஸ்ரவேலருக்கு ஆட்டு இரத்தத்தின் மூலம் மீட்கப்பட்ட அனுபவம். நமக்கு தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட, அதாவது இரட்சிக்கப்பட்ட அனுபவம்.
ஐம்பதாவது நாளான பெந்தெகோஸ்தே பண்டிகையில், யாத்திரகாமம் 19 மற்றும் அப்போஸ்தலர் 2 ஒப்பிட்டு பார்த்தால், மிகச் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு தேவன் மலையில் இறங்கி பேசிய அனுபவம். நமக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஊற்றப்பட்ட அனுபவம். இஸ்ரவேலருக்கு அப்போது தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. நமக்கு பெந்தேகொஸ்தே நாளில் ஆவி கொடுக்கப்பட்டது.
இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து கானான் வரை என்னவெல்லாம் செய்தார்களோ அது நமக்கு தீர்க்கதரிசனம். துரதிஷ்டவசமாக, தேவனுடைய ஜனங்களாகிய அவர்கள், நம் வாழ்க்கையில் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாகி விட்டார்கள். பிரச்சனைகளின் போது, அவர்களைப் போல, முறுமுறுக்க கூடாது, தேவனை கோப்பபடுத்தக் கூடாது, நமக்கென வைத்திருக்கும் கானானை இழந்து போய்விடக் கூடாது என்பது அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனம் விட்டு வெளிவந்தது போல, நாமும் பாவ அடிமைத்தனத்திலிருந்து, இயேசுவின் இரத்தம் மூலம் வெளியே வருகிறோம். இயேசுவை ஏற்றுக்கொண்டால் சோதனையே வராது என்பது தவறானது. அதற்கு பின்னர்தான் செங்கடல் வந்தது. நமக்கும் செங்கடல் போன்ற பிரச்சனைகள் வரும். அபிஷேகம் பெற்றால் சோதனை இல்லை என்பதும் தவறு தான், எல்லாருடைய வாழ்விலும் வனாந்திரமான காலம் ஒன்று இருக்கும். சிலர் செங்கடலில் பின்வாங்கி போய் விடுவர். சிலர் வனாந்தரத்தில் பின்வாங்குவர். ஆனாலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து யோர்தானையும் கடந்து, கானானுக்குள் நுழைவதே கிறிஸ்தவ வாழ்க்கை.
குறிப்பு
(தோராயத்தின்படி மாத்திரமே இந்த தேதிகள் கணக்கிடப்பட்டு இருக்கிறது. சிலருடைய கணக்கில் பெந்தெகோஸ்தே பண்டிகை, சீவான் மாதம் 6ம் தேதி வரும், சிலருடைய கணக்கில் 4ம் தேதி வரும். நமக்கு பண்டிகைகளின் பொருள் அறிவதற்காக மட்டுமே இந்த பதிவு.)
Leave a Reply