|

வேதாகம பெண்கள்- 4 (யோவன்னாள்)

Joanna/ Johannah – யோவன்னாள்

வேத பகுதி: இரண்டே வசனங்களில் வருபவர் இந்த யோவன்னாள். ஆனால், இவருடைய பங்கு மிக முக்கியமானது.

கதை பின்புலம்: இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த பெண்களின் பெயரில் இந்த யோவன்னாளின் பெயரும் வருகிறது. எனவே, இயேசுவை கண்குளிர பார்த்து, அவருடன் பேசும் அனுபவம் பெற்றவர் இவர். “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்தவர்கள்” என்ற listல் இவர் பெயரும் உள்ளதால், மனமுவந்து கொடுத்து, ஊழியத்தை தாங்கிய ஒரு பெண் என்பதை அறியலாம்.

யார் இந்த யோவன்னாள்?

Joanna Name Meaning: Hebrewல் அவரது பெயரான Yohannah வுக்கு, Yahweh is Gracious or Graced by Yahweh என்று அர்த்தம்.

லூக்கா8:3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

லூக்கா 24:10 இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

ஏரோதின் காரியக்காரன் என்பதற்கு ஆங்கில வார்த்தை Joanna the wife of Chuza, the manager of Herod’s household. ஏரோதின் வீட்டு மேலாளர், அதாவது ஏரோதின் மேனஜர். இயேசு வாழ்ந்த நாட்களில், ரோம சாம்ராஜ்யம் உலகெங்கும் ஆட்சியில் இருந்தது. ஒவ்வொரு நாட்டையும் ஒருவரின் கையில் கொடுத்து, ரோமர்கள் ஆட்சி செய்தனர். அதன்படி, இஸ்ரேலை ஏரோதின் கைகளில் கொடுத்திருந்தனர். இதை நாம் ஏற்கனவே, ரோம சாம்ராஜ்யம் என்ற பதிவில் பார்த்தோம்.

ரோமர்கள் ஏற்படுத்திய இந்த ஏரோது மிகவும் கொடுமைக்காரன். இயேசு பிறந்த செய்தி அறிந்ததும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொன்றவன் ஏரோது. மத்தேயு 2 மற்றும் லூக்கா 1ல் குறிப்பிட்ட ஏரோது, Herod the great. அதன்பின்னர் புதிய ஏற்பாட்டில் வரும் ஏரோது என்பவர், ஏரோதின் மகன் அந்திப்பா ஏரோது(Herod Antippas). யோவான் ஸ்நானனின் தலையை வெட்டியவர் கூட அந்திப்பா ஏரோது தான். ஆக ஏரோது என்பது, இஸ்ரேலை ஆளும் ஒரு வம்சத்தின் குடும்ப பெயர். இந்த ஏரோதுக்கள், ரோமருக்கு பிரியமானவர்களாகவும், இஸ்ரேலுக்கு எதிரானவர்களாகவும் இருப்பார்கள்.

இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்ததில் இருந்தே, ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவை பிடிக்க வகை தேடிக்கொண்டு இருந்தனர். இப்படி உள்ள ஏரோதுவின் வீட்டில் மேனஜராக இருப்பவர் கூசா. இந்த கூசா மேனஜராக இருப்பதால், ரோமர்களுடன் ஒரு நெருங்கிய பழக்கம் இருக்கும். எனவே அவரது மனைவியாகிய யோவன்னாளுக்கும் ரோமர்களுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட மேன்மைகளை உதறித் தள்ளிவிட்டு, இயேசுவின் பின்னே சென்றவர் யோவன்னாள்.

யோவன்னாள் பணத்தை, தன் சுகபோக வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தான் இயேசுவுக்கு பின்னே செல்கிறார். ஒருவேளை தன் குடும்பத்தாரை எதிர்த்துக் கூட, அவர் இயேசுவுக்கு பின் சென்றிருக்கலாம். ஏன் அப்படி சென்றிருப்பார்?

 லூக்கா8:2,3 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

முதன்முதலாக யோவன்னாள் வருகிற இடம் இது. பொல்லாத ஆவிகளையும், வியாதிகளையும் நீக்கி குணமாக்கிய சில ஸ்தீரிகள் என போடப்பட்டுள்ளது. ஒருவேளை யோவன்னாள் வியாதியிலிருந்து சுகம் பெற்றிருக்கலாம், அல்லது பேயிலிருந்து சுகம் பெற்றிருக்கலாம். ஆனால் விடுதலை பெற்றதிலிருந்து இயேசுவை பின் தொடர்கிறவளாய் இருந்திருக்கிறார். அதோடு, இயேசுவுக்கும் அவரது 12 சீஷர்களுக்கும் தன்னுடைய பணத்தால் உதவி செய்து இருக்கிறார். இரண்டாவதாக இந்த யோவன்னாள் வேதத்தில் எந்த இடத்தில் வருகிறார்?

  1. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
    10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

 இரண்டாவதாக யோவன்னாள் வரும் இடம், இன்னும் அற்புதமானது. இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், அவருடைய காலியான கல்லறையை கண்ட பெண்களில் இவரும் ஒருவர். இயேசு உயிர்த்தெழுந்த நற்செய்தியை அவருடைய சீஷர்களுக்கு சொன்னவர்களில், யோவன்னாளும் ஒருவர். எத்தனை அற்புதமான பாக்கியம் அல்லவா! இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் பேசி, சில உதவிகள் செய்தார். இயேசு மரிக்கும்போது அருகில் இருந்தார். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை கேட்கும் பாக்கியம் பெற்றார். எவ்வளவு உன்னதமான அனுபவம்!

யோவன்னாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

ஒரு மதிப்பான இடத்தில் இருந்தவர் யோவன்னாள். அநேக முறை, வேதத்தை படிக்கும்போது, வேதத்திலுள்ள நபர்களை பாவப்பட்ட ஏழைகளாக கற்பனை செய்து நாம் படிக்கிறோம். ஆனால், உண்மை அப்படி அல்ல. பெபேயாளைப் பற்றி படித்தோம். அவரும் தன் ஆஸ்தியை விற்று ஊழியம் செய்தார். இங்கே யோவன்னாளும் ஆஸ்தியை விற்று ஊழியம் செய்கிறார். கணவரின் தொழில் மூலம் நல்ல மரியாதையான இடத்தில் இருந்தவர், இயேசுவுடன் ஊழியத்துக்கு பின் செல்கிறார். தன் status பார்க்காமல், இயேசுவின் போதனையைக் கேட்டு பின் சென்றார். இயேசு உயிரோடு இருக்கும்போது அவருடன் சென்றார் என்பது பரவாயில்லை. இயேசுவை கடுமையான தண்டனை கொடுத்து சிலுவையில் அறைந்தபிறகும், அவரது கல்லறைக்கு செல்கிறார் யோவன்னாள். அதுதான் தேவன் மீதுள்ள உண்மையான அன்பு.

இயேசு மரித்தது இயற்கையான மரணம் அல்ல. ரோமர்களின் கொடுமையான தண்டனை சிலுவை மரணம். இப்போது இயேசுவின் கல்லறைக்கு அந்த பெண்கள் செல்கிறார்கள் என்றால், ரோமருக்கு தெரிந்தால் அது ஆபத்து என்பதை உணர்ந்தும் செல்கிறார்கள். அப்படிப்பட்ட தைரியம் யோவன்னாளுக்கு இருந்ததால், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அந்த நற்செய்தியை தூதன் மூலம் கேட்கும் பாக்கியம் பெற்றார் யோவன்னாள்.

தேவனிடம் ஒருவரை நெருங்கி சேர்க்க, தேவன் யாரை வேண்டுமானாலும், use செய்வார். நமக்கு அதற்கான படிப்பு தேவை(Bible College) இல்லை, அறிவு (Intelligence) தேவை இல்லை, பணம் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதரையும்(பெண்களையும்) தேவன் தனித்துவமாக படைத்து இருக்கிறார். நமக்கென்று ஒரு அழைப்பு இருக்கிறது. தேவனால், ஒரு பாவியையும், தவறு செய்தவனையும் கூட உபயோகப்படுத்த முடியும்.

யோவன்னாள் கற்றுக்கொடுப்பது என்ன என்றால், நமக்கான அழைப்பு ஒன்று இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏதாகிலும் செய்ய வேண்டும் என்பதற்கான தைரியம் நமக்குள் தான் இருக்கிறது. ஏரோதின் நம்பிக்கைக்கு எதிராக யோவன்னாள் இயேசுவை பின் பற்றினார். இன்று நம்மை தடுப்பது எதுவாக இருந்தாலும், அதை உதறி தள்ளி விட்டு, இயேசுவை பின்பற்றுவோம். யோவன்னாள் தொடர்ச்சியாக இயேசுவை பின்பற்றினார். ‘பரிசேயர் சதுசேயர் இயேசுவை எதிர்த்தார்கள். ரோம போர்ச்சேவகர் இயேசுவை எதிர்த்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.’ அவர் மரணத்துக்கு பிறகு கூட, அவரைப் பின் தொடர்ந்தார் யோவன்னாள். இன்று நாமும், நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், இயேசுவை தொடர்வதில் பின்வாங்காமல் இருப்போமானால், அதாவது நிலைத்தன்மையுடன் Consistency இருப்போமானால், ஆவிக்குரிய ஆழமான அனுபவங்களை நம்மால் அனுபவிக்க முடியும்.

Similar Posts

  • |

    பண்டிகைகள்-9 (பெந்தேகோஸ்தே 2)

    பெந்தெகோஸ்தே பண்டிகை – Part 2 மூன்று பண்டிகைக்கு தேவன் நேரில் வரச் சொன்னார் என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் அந்த மூன்று பண்டிகையும், மூன்று அனுபவங்களைக் குறிக்கும் என்பதையும் பார்த்தோம். முதலாவது எகிப்தை விட்டு வெளியே வந்த அனுபவம். அதைத்தான் பஸ்கா என்று கொண்டாடுகிறார்கள். நமக்கும், அது  பாவத்திலிருந்து வெளியே வருகிற அனுபவம். பாவத்திலிருந்து வந்தபின்பு Red Sea Cross பண்ணும் வரை, பார்வோன் பின் தொடர்வான். சிலர் உள்ளே…

  • |

    Day 333 (29-11-2025)

    Scripture Portion: 1 Corinthians 1-4 1 கொரிந்தியர் 1 1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், 2கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, 5நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6அவர் மூலமாய் உங்களுக்கு…

  • |

    Day 77 (18-03-2025)

    Scripture Portion: Deuteronomy 21-23 உபாகமம் 21 1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், 2உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்களாக. 3கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். 5உன்…

  • |

    இஸ்ரேல்–32 (ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம்)

    உலக அளாவில் பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்த அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம் அல்லவா? அடுத்ததாக ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் ஆங்கிலேயர்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று இங்கிலாந்தை தான் கூறுவார்கள். கிரேக்க சாம்ராஜ்யம் கூட அப்படி கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட ஏதாவது ஒரு நாட்டில், எப்போதும் பகல் இருந்து…

  • |

    Day 247 (04-09-2025)

    Scripture Portion: Ezekiel 24-27 எசேக்கியேல் 24 1ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான். 3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு. 4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து…

  • |

    Day 207 (26-07-2025)

    Scripture Portion: Isaiah 40-43 ஏசாயா 40 1என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், 5கர்த்தரின் மகிமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *