1972ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற வீரர்களில், 3 பேரை Black September கடத்திக்கொன்று விட்டு, 8 பேரை பணையக்கைதியாக பிடித்துக்கொண்டு போய், அவர்களையும் கொன்று விட்டது. இதை கடந்த பதிவில் பார்த்தோம். அப்போது அதிபராக இருந்த Golda Meir என்பவர், “11 பேருக்காக, அவர்கள் ஒவ்வொருவரும் வேட்டையாடப் படுவார்கள்” எனக் கூறினார். அப்போது, யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் மொசாட் தனது வேலையை ஆரம்பித்து விட்டது.

செப்டம்பர் 5, 1972ல் 3 பேர் கொல்லப்பட்டு, 8 பேர் பிணையக்கைதியாக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அந்த 8 பேரும் கொல்லப்பட்டனர். மொசாட் திட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்து விட்டது. மொத்தம் 15பேர் கொண்ட குழு இந்த operation, Wrath Of Godக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர் அல்லவா! அவர்கள் ஒவ்வொருவராக தேடிச்சென்று, தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர். “குடும்பம் இருக்கிறதா? காதல் இருக்கிறதா? officeக்கு எப்பொழுது போவார்? எதில் பயணம் செய்வார்? அவர்கள் வீட்டின் அமைப்பு, கட்டில், மேசை முதற்கொண்டு எல்லாவற்றையும் மொசாட் உளவு பார்த்தது.

முதல் கொலை அக்டோபர்16, 1972ல் நடக்கிறது. அதாவது ஒலிம்பிக் தாக்குதல் நடந்த 40வது நாளில், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கும் போன் வந்தது. “இன்று மாலை வானொலி செய்தியை நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்” என்று மட்டும் கூறி விட்டு, கட் செய்து விட்டார்கள். அந்த 11 பேரின் குடும்பமும், செய்தி கேட்கிறார்கள்… அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதோடு விட்டு விட்டார்கள். ஆனால் அடுத்தடுத்து, ஒவ்வொரு கொலையின்போதும், இந்த போன் வரும்போது தான், அவர்களுக்கு புரிந்தது… கொல்லப்பட்ட 11 பேருக்காக இந்த கொலைகள் நடக்கிறது என்று. அதில் பல பேர் கொடுத்த பேட்டியில், உண்மையில் இந்த கொலையை அவர்கள் விரும்பவில்லை என்று தான் சொல்லியிருந்தார்கள்.

முதல் கொலை, Abdul Wael Zwaiter. இவர் பொதுவாக மாலை நேரத்தில், தன் காதலியை சந்திக்கப் போவது வழக்கம். அதேபோல சென்றிருக்கும்போது அவர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதுவும் அவர் உடலில், 11 குண்டுகள் துளைத்திருந்தன எனக் கூறுகிறார்கள். இந்தக் கொலை Rome நாட்டில் நடந்தது. இந்த zwaiter யாரென்றால், இவர் PLO தீவிரவாத அமைப்பின் Organiser.

இரண்டாவது Mahmoud Hamshari, இவர் ஒரு Italian Journalist. இந்த Hamshariயின் மனைவி French பெண். அவரைக் கொலை செய்தால், Israel-Italy பிரச்சனை வரும். எனவே கொலை நடக்கும்போது, வீட்டில் மனைவி, மகள் இருக்கக்கூடாது என பிளான் செய்கிறார்கள். இந்த Hamshari இன்டர்வியூ கொடுப்பதில் அதிக விருப்பம் உள்ளவர் என்பதை அறிந்த மொசாட், அதை வைத்தே அவரை அழிக்க பிளான் போட்டது. Hamshariக்கு அடிக்கடி இன்டெர்வியூக்கள் வருகிறது. அவர் PLO அமைப்பின் Representative. அதைச் சொல்லியே இன்டர்வியூ எடுத்து, அவர் வாயாலே வாக்குமூலம் வாங்குகிறார்கள். உண்மையில் Hamshariக்கு மகிழ்ச்சி, நாம் இவ்வளவு பிரபலமா என்று. ஆனால், அவரை இன்டர்வியூ எடுத்த எல்லாருமே மொசாடின் உறுப்பினர் என்பது அவர் அறியாத உண்மை. ஒருமுறை அவர் வீட்டை பூட்டி விட்டு இன்டர்வியூ கொடுக்க வெளியே செல்கிறார். அந்த நேரத்தில் Hamshari வீட்டில் உள்ள Furnitures எல்லாமே, அதேபோல உள்ள வேறு furniture ஆக மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட furnitureல் bomb set பண்ணி வைத்தார்கள்.

வழக்கம்போல ஒரு Telephone Interview, Hamshariயிடம் book செய்கிறார்கள். அந்த நாளில், அவரது மனைவியும் மகளும் ஊருக்கு சென்றிருந்தனர். இன்டர்வியூ கொடுக்கும் ஆர்வத்தில், போனை எடுத்தவர், Hello, This is Hamshari எனக் கூறுகிறார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அவர் போன் பேசிய, அந்த டெலிபோன் ஸ்டான்டில் bomb வைத்திருந்தார்கள். அதை வெடிக்கச் செய்து அவரைக் கொன்று விட்டனர். இந்தக் கொலைக்கு பின்னர்தான், உலகத்துக்கு ஒலிம்பிக் கொலைக்கு பழி வாங்க கொலை நடக்கிறது என்பது புரிந்தது. எனவே இதற்கு பின்னர், மொசாட் யாரை கொலை செய்யப் போகிறதோ, அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே மலர்வளையம் அனுப்பிய, அடுத்து நீதான் என காட்டி விடும். எப்படியும் 1 மாதத்துக்குள் அவர்கள் கொல்லப்பட்டு விடுவர்.

மூன்றாவதாக, ஜனவரி24,1973ல் Hussain Al bashir என்ற ஜோர்தான் நாட்டைச் சேர்ந்தவர், cyprus நாட்டிலிருக்கும்போது, அவர் தூங்கும் கட்டிலுக்கு அடியிலிருந்த bomb வெடித்து கொல்லப்பட்டார்.

நான்காவதாக ஏப்ரல்6,1973ல் Basil al-Kubaisi PARISல் dinner முடித்து வரும்போது, 11 குண்டுகளோடு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்தான் ஆயுதங்கள் கொடுத்து உதவியவர் என்று கண்டறிந்தார்கள்.

அடுத்து யாரைக்கொல்ல வேண்டும் என மொசாட் பிளான் போட்டது. PLOவின் மூன்று முக்கிய தலைவர்கள், Lebanon நாட்டில், 7 மாடி buildingல் இருக்கிறார்கள். அவர்களைக் கொல்ல வேண்டும். இந்த opeationக்கு தலைமை தாங்கியவர், Ehud Barak. (இவர் பிற்காலத்தில் இஸ்ரேலின் PMஆக இருந்தார். இஸ்ரேலில், அரசியலுக்கு வர வேண்டுமானால், அவர் இப்படி ஏதேனும் மிலிட்டரியிலோ, அல்லது மொசாடிலோ சாதித்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய சட்டம்.)  

Lebanonஐ சுற்றிப்பார்க்க, ஒரு 5பேர் வருகிறார்கள். ஒரு கார் இருக்கிறது. 5 பேரும் காரின் உள்ளே செல்கிறார்கள். திரும்ப வரும்போது, மூன்று அழகிய பெண்கள் வருகிறார்கள். காரின் உள்ளேயும் 2 பெண்கள் இருக்கிறார்கள். அதாவது வந்த 5 பேரும் பெண் வேடமிட்டு விட்டார்கள். 3 பெண்களும் அந்த 7 மாடி கட்டிடத்துக்குள் போகிறார்கள். அது நடு இரவு. அந்த கட்டிடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் தான் இருப்பார்கள்.  அல்லது Lebanon நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இந்த பெண்கள் வேறு அறைக்கதவை மாற்றி தட்டினால் மரணம் தான். ஆனாலும் இந்த 3 பேரும் உள்ளே நுழைகிறார்கள்.

இந்த சமயத்தில், வெளியே இருந்த காரில் 2 பெண்களைப் பார்த்துவிட்டு ஒருவன், “இந்நேரத்துல் இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க, அவனை சுட்டு விட்டனர். சத்தம் கேட்டு வந்தவர்களையும் சுட ஆரம்பிக்க, அப்பாவியான 9 பேரை சுட்டு விட்டனர். அந்த கட்டிடத்துக்குள் கலவரம் வந்தது. இவ்வளவு பிரச்சனைகள் நடக்க ஆரம்பித்ததும், உள்ளே சென்ற 3 பேர் இன்னொரு நாள் வரலாம் என நினைத்திருப்பார்கள் என்கிறீர்களா? அதுதான் இல்லை. மொசாட் ஒரு வேலையைக் கையிலெடுத்தால், அதை குறித்த நேரத்தில் முடித்தே தீரும். மூவரும், தங்கள் டார்கெட் அறைக்கதவின் முன் வந்து நின்று, ஒவ்வொரு அறையை தட்டுகின்றனர். திறந்தவுடன் சுட்டுத் தள்ளி விட்டு, திரும்பி பார்க்காமல் வந்து விட்டனர். அவ்வளவுதான். அடுத்த 3 பேர் காலி.

இப்படித்தான் தேடி தேடி கொலை செய்தனர். Abu Hasan ஒரு பண முதலை. PLOக்கு பணம் கொடுத்து உதவுபவர். இவர் தான் அடுத்து டார்கெட். திடீரென ஒரு தகவல் கிடைக்கிறது, நார்வே நாட்டில் Lillehammer இடத்தில், அவர் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. இவர்களும் உள்ளே சென்று ஒருவரைக் கொன்று விட்டனர். ஆனால் அவர் Abu Hasan கிடையாது. அவர்கள் Lillehammer சென்ற இடத்தில், தங்கள் ஒரிஜினல் பெயரை உபயோகித்திருந்தனர். அது பெரிய பிரச்சனையாக உலகம் முழுவதும் எழுந்தது. மொசாட் அப்பாவியைக் கொலை செய்கிறது என சொல்லி, உலக நாடுகள் மொசாடை தடை செய்வதாக கூறியது. ஐந்து வருடங்கள் மறைந்திருந்து, இனி மொசாடால் பிரச்சனை கிடையாது என நம்பி, பின்னர் ஜாலியாக abu hassan வெளியே வர, அவரை ஐந்து வருடம் கழித்து கொலை செய்தது மொசாட்.

ஐந்து வருடம் கழித்து Abu Hassan, மொசாடை மறந்து விட்டார் என்றே கூறலாம். அதுவரையில், அவர் வேறுவேறு பாதைகளில் செல்வது, என தன்னை பயங்கரமாக காப்பாற்றிக் கொண்டவர், பின்னர் அசால்ட்டாக ஒரே பாதையில் செல்ல ஆரம்பித்தார். பெண் விஷயத்தில் வீக்காக இருந்ததால், ஒரு பெண்ணை வைத்து இவரை அழிக்க திட்டம் போட்டனர்.

Brittan நாட்டைச் சேர்ந்த Erika Chamber என்பவர் mossad அமைப்பை சேர்ந்தவர். இவர் Lebanonக்கு போய், நானும் பாலஸ்தீனிய விடுதலைக்காக போராடப் போகிறேன் என சொல்லி, சில உதவிகள் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தலைவர்களின் லிங்க் கிடைக்கிறது. அப்படித்தான் அவரை Abu hasanஉடனும், பேச வைத்தார்கள். அவருடன் நெருங்கி பழகி, அவர் வரும் வழியை மொசாடுக்கு சொன்னது இந்த பெண்தான். அவர் வரும் வழியில், ஒரு காரை நிறுத்தி வைத்து, அதனுள் 100கிலோ bomb வைத்து, வெடிக்கச் செய்து கொலை செய்தனர் மொசாட் அமைப்பினர். ஆனால் அவருடன் இன்னும் 8 பேர் சேர்ந்து கொல்லப்பட்டனர்.

ஆனால் இந்த கொலையில், இஸ்ரேலில் உள்ள 11 ஒலிம்பிக் வீரர்களின் குடும்பமே பொங்கி எழுந்தனர். Abu Hassanஐ கொன்றது சரி. உடன் ஏன் அந்த 8 அப்பாவிகள் என உலகமே பொங்கியது. இதுதான் மொசாட். ஒருவரைக் கொல்ல முடிவெடுத்தால், எப்படியாவது கொன்று விடும். இன்று பலர் இஸ்ரேலை வெறுக்க காரணமும் இதுதான். அவர்கள் டார்கெட் மட்டும் கொல்ல மாட்டார்கள். உடன் அப்பாவிகளின் உயிரையும் எடுத்து விடுவார்கள். PLO அமைப்பினர், பாலஸ்தீனத்தில், தங்கள் இடத்துக்காக போராடுகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகள் என்றால், சில சமயங்களில் அப்பாவிகளைக் கொல்வதன் மூலம், மொசாட் அமைப்பினரும் தீவிரவாதிகளே!

மிக பயங்கரமான உளவு படைதான் மொசாட். இஸ்ரேலை பகைத்தால் உயிர் தப்ப முடியாது என உலகுக்கே காட்டினார்கள். என்னதான் “கடவுளின் குழந்தைகள் நாங்கள்” என்று தங்களை சொல்லிக் கொண்டாலும், இன்னும் அநேகர் நம் இரட்சகர் இயேசுவை அறியவில்லை.அவர்கள் இரட்சிப்புக்காக ஜெபிக்க வேண்டியது நம் தலையாய கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *