சில பயணங்களை தொடர்வது மிகக் கடினமானது. சில பயணங்கள் சவாலானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் உள்ள இந்த எழுத்து பயணம் கூட அப்படித்தான். இது என்னுடைய 100 வது பதிவு. இன்னொரு சிறப்பு, நமது தளத்தில் எனது முதல் பதிவை நான் பதிவிட்டது செப்டம்பர் 16,2023. ஆக, நமது தளத்தின் முதல் பிறந்த நாள் இன்று. மகிழ்ச்சியான இந்த நாளில், உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஒருவேளை நான் எழுத்தாளராக, எனது கற்பனைகளை எழுதிக்கொண்டிருந்தால், 366 நாட்களில், 400 பதிவு கூட பதிவிட்டு இருக்கலாம். ஆனால், வேதத்தின் காரியங்கள் என்பதால், அதிகமாக படித்து எனக்கு புரிந்ததை பதிவு செய்தேன். 366 நாட்களில் 100 பதிவுகள் என்பது, மிகவும் குறைவானதுதான். ஆனால், எனக்கு இது அதிகமானது. இம்மட்டும் பெலன் கொடுத்து, ஞானம் கொடுத்து, என்னை வழி நடத்தி வரும் நம் தேவனுக்கு நன்றி.

இந்த தளத்தை நினைத்த உடனே ஆரம்பிக்கவில்லை. பல செய்திகள் மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசி, கணவருக்கும் ஒத்த இதயத்தைக் கொடுத்து, இந்த தளத்தை ஆரம்பிக்க உதவி செய்தார்.

Proverbs 14:1 says, “The wise woman builds her house…

  • You are not Home Maker
  • You are Home Builder  

Ps. Angelina Gersson (11-03-2023)

இந்த செய்தி தான், எனக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. அதன்பின், பல ஊழியர்களின் செய்திகள், விசேஷமாக அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் Restart என்ற செய்தியில், “நீங்கள் retired ஆகி விட்டேன்… என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும் என சாக்கு சொல்லாதீர்கள். கையில் மொபைல் போன் இருக்கும் யாரும், atleast message அனுப்பி கூட ஊழியம் செய்ய முடியும்” என பேசியது என்னை எழுத தூண்டியது. 26-03-2023ல் தளம் ஆரம்பிக்க ஒருவரிடம் பேசினேன். ஆனால் பல முறை முயற்சித்தும் தடங்கல் வந்தது. கர்த்தருடைய கிருபையால், 13-09-2023ல் என் கணவரின் நண்பரிடம் பேசி, 15-09-2023ல் அவரே தளம் ஆரம்பித்து தந்தார். கர்த்தர் முன்குறித்த நாளில், கர்த்தர் எனக்கு ஆரம்பித்துக் கொடுத்தார். அதற்காக கர்த்தருக்கு நன்றி.

அடுத்ததாக, நான் எழுதுவதை வாசித்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய உற்சாகப்படுத்திய, அல்லது வாசித்து தியானிக்கிற உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் யாரென்றே தெரியாத போதகர்கள், அவ்வப்போது என் பதிவுகளை வாசித்து, என்னை உற்சாகப்படுத்தினீர்கள். உங்கள் யாவருக்கும் நன்றி. ஒருவேளை, உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகள் இல்லையென்றால், 100 பதிவுகளை நான் எட்டியிருக்க முடியாது. உங்கள் யாவருக்கும் நன்றி.

முதன்முதலாக பண்டிகைகள் பற்றிய பதிவுகளை பதிப்பித்தேன். கடந்த வருடம் செப்டம்பர் 16ம் தேதி, இஸ்ரேலின் Rosh Hashannah. அதாவது எபிரேய காலண்டரில் வருடப் பிறப்பு. அந்த நாளில் நாம் இந்த தளத்தை ஆரம்பித்தோம். இஸ்ரவேலர்கள், எபிரேய வருடப்பிறப்பை New Beginning என்று கூறுவார்கள். நாமும் புதிய ஆரம்பத்தை ஆரம்பித்தோம். கர்த்தர் நம்மை இம்மட்டும் நடத்தி வந்தார். கர்த்தருடைய கிருபையால், “பண்டிகைகள்”, “நன்றியுடன் 21 நாட்கள்”, “விசுவாச அறிக்கைகள்”, “இஸ்ரேல்”, “விடுதலை” என பல தலைப்புகளில் படிக்க ஆரம்பித்தோம். இன்னும் நாம் போகவேண்டிய தூரம் வெகு அதிகம். கர்த்தர் நம்மை நடத்துவார் என்று விசுவாசிக்கிறேன்.

எப்போதும் எந்த மனிதன் சொல்வதும், அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே நான் எழுதுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூற மாட்டேன். ஆனால், எல்லாவற்றையும் சோதித்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சோதிக்க வேண்டுமானால், எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும். அதற்காக நமது பதிவுகளை படியுங்கள். ஆவியானவர் உங்களுக்கு என்ன வெளிப்படுத்துகிறாரோ, அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலாவது, நம் தேவாதி தேவனுக்கு நன்றி. அடுத்ததாக, என்னுடன் இணைந்து பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருக்கும் என் குடும்பத்தினருக்கும், என் கணவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடம், website வேலைகள் முடிக்காமல், Hosting idல் இருந்தே பதிவிட்டேன். தற்போது, website வேலைகளை முடிக்கலாம் என சனிக்கிழமை(14-09-2024) அதற்கான வேலையில் ஈடுபடும்போது, பழைய பதிவுகள் (99 பதிவுகள்) அப்படியே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 99 பதிவுகளையும் நேற்றும், இன்றும், அதே urlல் புதிதாக பதிப்பித்தேன், அதற்கு உறுதுணையாக இருந்த கணவருக்கு நன்றி. கணவரின் நண்பர் எனக்கு free hosting கொடுத்ததுமல்லாமல், அவரது idல் நேற்று வரை பதிவிட உதவி செய்தார். அவருக்கும் என் நன்றி. என்னை அடிக்கடி உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், தினமும் தவறாமல் என் பதிவுகளைப் படித்து thumbsup கொடுத்த என் சகோதரிகளுக்கும் நன்றி. விசேஷமாக கணவரின் ஜெபக்குழுவில் உள்ளவர்களுக்கும், எனது சபையில் உள்ளவர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் உண்மையான விமர்சனம் கொடுத்தீர்கள். மீண்டுமாக என்னுடன் இணைந்து பயணிக்கிற உங்கள் யாவருக்கும் நன்றி. கர்த்தர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில், என் எழுத்தின் மூலம் கிரியை செய்வார் என விசுவாசித்து, கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், உண்மையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே ஒரு காரியம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் தேவன் உண்மையுள்ளவர். இன்றைக்கு தோற்றுப்போனது போல நாம் இருக்கலாம். ஆனால், நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். நம்மை உயர்த்தும் தேவன் நமக்கு இருக்கிறார். நாம் ஜெயிப்பதற்கான விலையை, 2000 வருடங்கள் முன்பே அவர் கொடுத்து விட்டார். ஒருவேளை நாம் தோற்றுப்போனால், கிறிஸ்து மரித்தது வீணாக இருக்கும். வெற்றி வெகு சீக்கிரம் நம்மை நோக்கி வரும். தளர்ந்து போகாதிருங்கள். விசுவாச வார்த்தைகளை பேசுங்கள். கர்த்தருடைய கிருபை நம் அனைவரோடும் எப்போதும் இருக்கட்டும்.

4 responses to “சிறப்பு பதிவு (Rhema Tamil)”

  1. Sam Charan Avatar
    Sam Charan

    Congratulations for 100th special post.

  2. Lisha karunya Avatar
    Lisha karunya

    Energy booster for home makers❌ Home builders✅

    1. RhemaTamil Avatar

      Thank you dear Sister…

Leave a Reply to Lisha karunya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *