Deliverance Ministries
விடுதலை – 11
Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்)
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம்.
Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது என்ன? “பேய் ஓட்டுவது” , “பிசாசுகளை துரத்துவது” , “அசுத்த ஆவிகளை விரட்டுவது” என்று நமக்கு தோன்றும். அது தவறல்ல… ஆனால், இது மட்டும்தான் deliverance ministryயா?
இயேசு சீஷர்களை ஏன் தேர்ந்தெடுத்தார்?
மாற்கு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, மாற்கு 3: 14,15 இப்படி சொல்கிறது,
14 அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
- அவர்கள் இயேசுவோடு இருக்க வேண்டும். இன்று நமக்கு தேவன் ஊழியம் கொடுத்திருந்தால், முதலாவது நாம் செய்ய வேண்டியது, தேவனோடு இருக்க வேண்டும், அவரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.
- பிரசங்கம் பண்ணும்படியாக இயேசு அவர்களை அனுப்ப வேண்டும். யார் கூப்பிட்டாலும் சென்று பிரசங்கம் பண்ணுவது ஊழியம் அல்ல, இயேசு அனுப்பும் இடத்துக்கு, அவர் சொல்லும் நேரத்தில் போய் சொல்வதே ஊழியம்.
- வியாதிகளை குணமாக்கி, பிசாசுகளை துரத்தும் அதிகாரம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். எனவே ஊழியர்கள், குணமாக்கும் வல்லமை உடையவர்களாய் மாத்திரம் இருக்க கூடாது. பிசாசுகளை துரத்தும் அதிகாரமுடையவர்களாய் இருக்க வேண்டும். அதாவது Healing and Deliverance ministry செய்ய வேண்டும்.
இயேசு எப்படி ஊழியம் செய்தார்?
லூக்கா 4:18 சொல்கிறது,
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
- நாம் எப்படி இயேசுவோடு இருக்க வேண்டுமோ, அவரும் ஆவியானவரோடு இருந்தார்.
- நம்மை இயேசு பிரசங்கம் பண்ணும்படி அனுப்புவது போல, அவரையும் பிரசங்கம் பண்ண அபிஷேகம் பண்ணியிருந்தார்.
- இயேசுவும் Healing and Deliverance ministry செய்து இருக்கிறார்.
நாம் அனைவருமே அவருடைய சீஷர்கள் என்றபோது, நமக்கு இந்த 3 தகுதிகளும் அவசியம். நாமும் healing and deliverance ministry செய்ய வேண்டும். கர்த்தரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.
விடுதலை அல்லது Deliverance என்று பேசுகிறோமே… விடுதலை என்றால், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவது மட்டும்தானா? இல்லை. தயவு செய்து, விடுதலையை பிசாசுகளை துரத்துவதோடு நிறுத்தி விடாதீர்கள். விடுதலை என்பது அதற்கும் மேல்.
விடுதலை ஊழியம் என்றால், பிசாசுகளைப் பற்றி அதிகமாக கவனம் கொள்கிறோம், அதிகமாக பேசுகிறோம். ஆனால் விடுதலை என்பது இயேசுவை மையமாக கொண்டது. அநேக ஊழியர்கள், அந்த ஆவி, இந்த ஆவி என்று பல பெயர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து ஜெபிக்க சொல்கிறார்கள். அது நல்லது தான். ஆனால் அதை விட முக்கியமான தேவை, “இயேசு எவ்வளவு நல்லவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், அவர் சிலுவையில் சம்பாதித்தது என்ன? கிறிஸ்துவுக்குள் நான் யார்?” இதை மக்களுக்கு போதிக்க வேண்டும். விடுதலை என்பது இயேசுவால் தான் கிடைக்கும்.
யோவான் 8:36
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
பலர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகும், பயம், கோபம், மனச்சோர்வு, வெறுப்பு, கசப்பு, பாவ அடிமைத்தனம், ஆழமான காயங்கள் என்று சொல்ல முடியாத காரியங்களோடு போராடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? நம் மனதில் நாம் வைத்திருக்கிற அரண் போன்ற சிந்தனைகள் (strongholds) இருக்கலாம். நம் ஆத்துமா குணமாகாமல் இருக்கலாம். எதிரிக்கு இடம் கொடுத்து இருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், இயேசு சிலுவையில் வெற்றி சிறந்து விட்டார். விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அது ஒரு செயல்முறை (process). சிலருக்கு ஒரு நிமிடத்தில் விடுதலை கிடைக்கலாம். சிலருக்கு நிறைய நேரம் எடுக்கலாம். நம் மனதில் கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதை உணர வேண்டும், தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டும். நிச்சயமாக நம்மால் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ச்சியாக விடுதலை பற்றி நாம் பார்க்கலாம்.
விடுதலை என்பது,
- கட்டுகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
- இயேசு முழுமையாக நம்மில் ஆட்சி செய்வது.
- பாவம், பயம், அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
- இயேசுவின் பிள்ளை என்ற அதிகாரத்தில் வாழ்வது.
- பேயைப்பற்றியது அல்ல, இயேசுவைப் பற்றியது.
