|

Deliverance Ministries -2

விடுதலை – 12

Deliverance Ministries -2 (விடுதலை ஊழியங்கள் 2)

இயேசு எப்படி ஊழியம் செய்தார் என்பதைப் பார்த்தோம். இயேசுவால் மட்டும்தான் இப்படி ஊழியம் செய்ய முடியுமா? இல்லையே. அவரை விசுவாசிக்கிறவன், அவரைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று வேதம் சொல்கிறது.

கடந்த பாகத்தில் பார்த்தது போல, விடுதலை என்பது வெறும் பிசாசுகளை துரத்துவது மட்டுமல்ல. அப்படியானால் விடுதலை என்றால் என்ன? நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் அசுத்த ஆவிகளிடமிருந்து மட்டும் வருவது இல்லை. பல பிரச்சனைகள் வருவதற்கு நாம் தான் காரணமாக இருப்போம். சில பிரச்சனைகள் தலைமுறை சாபத்தால் வருகிறது. சாத்தான் சில சமயங்கள் நம் மீது legal actions எடுப்பதால் கூட பிரச்சனைகள் வருகிறது.

விடுதலை ஊழியத்தில் என்ன செய்ய வேண்டும்?

தனிப்பட்ட நபருக்கான inner healing

அசுத்த ஆவிகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் சுலபமாக நுழைய முடியாது. நாம் ஏதோ ஒரு கதவை திறந்து வைத்திருப்பதால் தான் அவை உள்ளே வந்திருக்கும். பல சமயங்களில், ஜெபத்தின் மூலம் அந்த கிரியையை துரத்தி விட்டாலும், மீண்டும் அது உள்ளே வருவதற்கு காரணம், அசுத்த ஆவி வெளியேறியவுடன், அது உள்ளே நுழைந்த கதவை மூடி, அந்த இடத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பும்படி ஜெபிக்க தவறி விடுகிறோம். அதனால், அந்த கதவின் மூலம் தன்னுடன் இன்னும் சில ஆவிகளை கூட்டி வந்து, மீண்டும் பிரச்சனையை தொடர வைக்கிறது. 

பிசாசுக்கு எப்படி கதவு திறக்கப்பட்டிருக்கும்?

  1. பாவம் – நாம் செய்யும் சின்ன சின்ன பாவங்கள், நம்மை அடிமைப்படுத்தி, பெரிய பாவத்துக்கு கொண்டு செல்லும். சில இச்சைகள் அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும்.
  2. மன்னிக்காமை – எல்லாரையும் மன்னிப்பது நம்மால் கூடாத காரியம் தான். ஆனால் சிந்தித்து பாருங்கள், நாம் எவ்வளவு பின் வாங்கிப் போனாலும், மீண்டும் மீண்டும் இயேசு நம்மை மன்னித்துக் கொண்டு இருக்கிறார். மன்னிக்காமை என்பது, ஒரு பெரிய கதவை திறந்து வைத்திருக்கும்.
  3. தலைமுறை சாபங்கள் – தலைமுறை சாபங்கள், நாம் பிறக்கும்போதே பெரிய கதவை திறந்து அசுத்த கிரியைகளை வரவேற்கிறது.
  4. தலைமுறை பாவங்கள் – சில சமயம் அப்பா செய்த பாவம், மகனாலும் செய்யப்படும். இதற்கு காரணம், அந்தக் கதவு திறப்பில் இருக்கிறது. (தினமும் முன்னோரின் பாவம் என் குடும்பத்தை தாக்க கூடாது என்ற ஜெபம் அவசியம்)
  5. சுய சாபங்கள் – இதை நாம் வெகு சுலபமாக செய்வோம். “நான் செத்தால் தான் நிம்மதி”, “என் வாழ்க்கையே பாழாய் போச்சு”, “எனக்கு அவ்வளவு திறமை இல்லை”, “நான் ஒரு பயந்தாங்கொள்ளி” இப்படி negative words எல்லாமே, ஒரு கதவை open செய்து கொண்டு தான் இருக்கிறது.
  6. பலவீனமான தருணம் – விபத்து, திடீர் அதிர்ச்சி, உணர்ச்சி காயம் போன்ற நேரத்தில் நாம் பலவீனமாக சிந்திக்கும்போது, நம்மை அறியாமல் அசுத்த ஆவிகள் சுலபமாக உள் நுழைகின்றன.
  7. தீய உடன்படிக்கை – மந்திரவாதம், ஜோதிடம் போன்ற காரியங்களில் ஈடுப்படும்போது, ஒரு தீய உடன்படிக்கை உருவாகி, ஒரு கதவு திறக்கிறது.
  8. Soul ties – திருமணத்துக்கு மீறிய உறவு, sexual relationship, Pornography மூலமாக, சிலருடன் ஆத்தும பிணைப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய கதவு திறக்கப்படுகிறது.

இவை எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டவை தான். நமது கோபம், வெறுப்பு, கசப்பு, இச்சை, பொறாமை என்று கதவைத் திறக்கும் காரணிகள் இன்னும் அநேகம் உள்ளன.

ஒரு தனி மனிதனுடைய உள்ளார்ந்த மனந்திரும்புதல் மிகவும் அவசியம். அதோடு, சில கதவுகளை மூடி, அதன் மூலம் உருவான அந்த வெறுமையான இடத்தில் பரிசுத்த ஆவியானவரை நிரப்புவது மிகவும் அவசியம்.

முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், “எந்த கதவு திறக்கப்பட்டிருக்கும்? எந்த ஆவி கிரியை செய்கிறது?” என்றெல்லாம் எண்ணுவதை விட்டு விட்டு, இயேசுவினுடைய அன்பை எண்ணிப் பாருங்கள். பிசாசின் காரியங்கள் அல்ல, இயேசுவையும், தேவனுடைய அன்பையும் சிந்தியுங்கள்.

“சிலுவை அன்பு, கிருபை, நான் நீதிமான், கிறிஸ்துவுக்குள் நான் யார்? நான் அவருடைய சொந்த பிள்ளை, அவருடைய நாமத்தை சொல்லி என்னால் பிசாசை துரத்த முடியும்…” இப்படிப்பட்ட சிந்தனைகளில் மூழ்கும்போது, சுலபமாக திறந்த கதவுகளை அடைக்க, அடைக்கப்பட்ட அந்த வெற்றிடத்தில் ஆவியானவர் வசிக்க, கர்த்தர் கிருபை செய்வார்.

தொடர்ந்து பார்க்கலாம்…

Similar Posts

  • |

    Day 95 (05-04-2025)

    Scripture Portion: Judges 16-18 நியாயாதிபதிகள் 16 1பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். 2அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள். 3சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல்…

  • |

    Day 9 (09-01-2025)

    Scripture Portion: Job 21-23 யோபு 21 1யோபு பிரதியுத்தரமாக: 2என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும். 3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள். 4நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா? 5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். 6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும். 7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு…

  • |

    Day 125 (05-05-2025)

    Scripture Portion: Psalm 1-2, 15, 22-24, 47, 68 சங்கீதம் 1 1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின்…

  • |

    Day 222 (10-08-2025)

    Scripture Portion: Jeremiah 10-13 எரேமியா 10 1இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: 2புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள், 3ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். 4வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். 5அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப்…

  • |

    Day 104 (14-04-2025)

    Scripture Portion: 1 Samuel 21-24 1 சாமுவேல் 21 1தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். 2தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன். 3இப்போதும்…

  • |

    Deliverance Ministries

    விடுதலை – 11 Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம். Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *