|

Deliverance Ministries

விடுதலை – 11

Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்)

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம்.

Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது என்ன? “பேய் ஓட்டுவது” , “பிசாசுகளை துரத்துவது” , “அசுத்த ஆவிகளை விரட்டுவது” என்று நமக்கு தோன்றும். அது தவறல்ல… ஆனால், இது மட்டும்தான் deliverance ministryயா?

இயேசு சீஷர்களை ஏன் தேர்ந்தெடுத்தார்?

மாற்கு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, மாற்கு 3: 14,15 இப்படி சொல்கிறது,

  1. அவர்கள் இயேசுவோடு இருக்க வேண்டும். இன்று நமக்கு தேவன் ஊழியம் கொடுத்திருந்தால், முதலாவது நாம் செய்ய வேண்டியது, தேவனோடு இருக்க வேண்டும், அவரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.
  2. பிரசங்கம் பண்ணும்படியாக இயேசு அவர்களை அனுப்ப வேண்டும். யார் கூப்பிட்டாலும் சென்று பிரசங்கம் பண்ணுவது ஊழியம் அல்ல, இயேசு அனுப்பும் இடத்துக்கு, அவர் சொல்லும் நேரத்தில் போய் சொல்வதே ஊழியம்.
  3. வியாதிகளை குணமாக்கி, பிசாசுகளை துரத்தும் அதிகாரம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். எனவே ஊழியர்கள், குணமாக்கும் வல்லமை உடையவர்களாய் மாத்திரம் இருக்க கூடாது. பிசாசுகளை துரத்தும் அதிகாரமுடையவர்களாய் இருக்க வேண்டும். அதாவது Healing and Deliverance ministry செய்ய வேண்டும்.

இயேசு எப்படி ஊழியம் செய்தார்?

  1. நாம் எப்படி இயேசுவோடு இருக்க வேண்டுமோ, அவரும் ஆவியானவரோடு இருந்தார்.
  2. நம்மை இயேசு பிரசங்கம் பண்ணும்படி அனுப்புவது போல, அவரையும் பிரசங்கம் பண்ண அபிஷேகம் பண்ணியிருந்தார்.
  3. இயேசுவும் Healing and Deliverance ministry செய்து இருக்கிறார்.

நாம் அனைவருமே அவருடைய சீஷர்கள் என்றபோது, நமக்கு இந்த 3 தகுதிகளும் அவசியம். நாமும் healing and deliverance ministry செய்ய வேண்டும். கர்த்தரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.

விடுதலை அல்லது Deliverance என்று பேசுகிறோமே… விடுதலை என்றால், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவது மட்டும்தானா? இல்லை. தயவு செய்து, விடுதலையை பிசாசுகளை துரத்துவதோடு நிறுத்தி விடாதீர்கள். விடுதலை என்பது அதற்கும் மேல்.

விடுதலை ஊழியம் என்றால், பிசாசுகளைப் பற்றி அதிகமாக கவனம் கொள்கிறோம், அதிகமாக பேசுகிறோம். ஆனால் விடுதலை என்பது இயேசுவை மையமாக கொண்டது. அநேக ஊழியர்கள், அந்த ஆவி, இந்த ஆவி என்று பல பெயர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து ஜெபிக்க சொல்கிறார்கள். அது நல்லது தான். ஆனால் அதை விட முக்கியமான தேவை, “இயேசு எவ்வளவு நல்லவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், அவர் சிலுவையில் சம்பாதித்தது என்ன? கிறிஸ்துவுக்குள் நான் யார்?” இதை மக்களுக்கு போதிக்க வேண்டும். விடுதலை என்பது இயேசுவால் தான் கிடைக்கும்.

பலர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகும், பயம், கோபம், மனச்சோர்வு, வெறுப்பு, கசப்பு, பாவ அடிமைத்தனம், ஆழமான காயங்கள் என்று சொல்ல முடியாத காரியங்களோடு போராடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? நம் மனதில் நாம் வைத்திருக்கிற அரண் போன்ற சிந்தனைகள் (strongholds) இருக்கலாம். நம் ஆத்துமா குணமாகாமல் இருக்கலாம். எதிரிக்கு இடம் கொடுத்து இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், இயேசு சிலுவையில் வெற்றி சிறந்து விட்டார். விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அது ஒரு செயல்முறை (process). சிலருக்கு ஒரு நிமிடத்தில் விடுதலை கிடைக்கலாம். சிலருக்கு நிறைய நேரம் எடுக்கலாம். நம் மனதில் கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதை உணர வேண்டும், தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டும். நிச்சயமாக நம்மால் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ச்சியாக விடுதலை பற்றி நாம் பார்க்கலாம்.

விடுதலை என்பது,

  1. கட்டுகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
  2. இயேசு முழுமையாக நம்மில் ஆட்சி செய்வது.
  3. பாவம், பயம், அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
  4. இயேசுவின் பிள்ளை என்ற அதிகாரத்தில் வாழ்வது.
  5. பேயைப்பற்றியது அல்ல, இயேசுவைப் பற்றியது.

Similar Posts

  • |

    Day 207 (26-07-2025)

    Scripture Portion: Isaiah 40-43 ஏசாயா 40 1என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், 5கர்த்தரின் மகிமை…

  • |

    Day 338 (04-12-2025)

    Scripture Portion: 2 Corinthians 1-4 2 கொரிந்தியர் 1 1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது: 2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு…

  • |

    Day 49 (18-02-2025)

    Scripture Portion: Leviticus 16-18 லேவியராகமம் 16 1ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: 2கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். 3ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும். 4அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து,…

  • |

    பண்டிகைகள் – 6 (பஸ்கா)

    நாம் ஏற்கனவே எல்லா பண்டிகைகளையும் பற்றி அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு பண்டிகையையும் இஸ்ரவேலர் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம். இன்று பஸ்கா பண்டிகை பற்றிய பதிவை பார்க்கலாம். ஒரு சின்ன குடும்பம் (யாக்கோபின் குடும்பம்), ஒரு பெரிய நாடாக மாற ஆரம்பித்த இடம், முதல் பஸ்காவில் தான். 70பேர் ஆண்களாக எகிப்துக்கு சென்றவர்கள், 6,00,000பேர் ஆண்களாக ஒரு தேசமாக திரும்பி வந்தது தான் பஸ்கா. 7 நாட்கள் பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது. பஸ்கா என்கிற…

  • |

    Day 239 (27-08-2025)

    Scripture Portion: Ezekiel 1-4 எசேக்கியேல் 1 1முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன். 2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது. 3அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. 4இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும்…

  • |

    Day 88 (29-03-2025)

    Scripture Portion: Joshua 22-24 யோசுவா 22 1அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து, 2அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். 3நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். 4இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *