|

Sent Him Out

மேலே படத்தில் வசனத்தை வாசித்தவுடன், இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று தோன்றுகிறதா? ஏன் வனாந்திரம் போகச் சொல்ல வேண்டும்? அங்கே ஏன் சோதனைகள்?

இங்கே இந்தப் பகுதியில், பலமுறை “ஏவினார்” என்ற வார்த்தையை படித்திருப்போம். இப்போது தான், அதன் அர்த்தம் என்ன என்று தேடிப்பார்க்கத் தோன்றியது.

 “ஏவினார்” என்பது “அனுப்பினார்”விட கொஞ்சம் stronger.
அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு அனுப்பினார் / செல்லும்படி தூண்டினார் என்ற sense வரும்.

“உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்கு ஏவினார்.” என்றால், “உடனே பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்லும்படி அனுப்பினார்.”

அப்படியானால், ஆவியானவர் தான் இயேசுவை வனாந்திரத்துக்கு போகச் சொல்கிறார். முதல் 15 வசனங்களை வாசித்து பார்த்தால், கீழ்க்கண்ட orderல் இருக்கும்.

Spirit → wilderness → 40 days → temptation → ministry

அவர் ஞானஸ்நானம் எடுத்தவுடன், ஆவியானவர் அவர்மேல் இறங்குகிறார். நீர் என்னுடைய நேசகுமாரன் என்று சத்தம் கேட்கிறது. உடன் என்ன நடக்கிறது? இயேசுவை, “தேவகுமாரன்” என்ற இடத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு மனிதனாக மட்டும் பார்ப்போம்.

ஆவியானவர் இயேசுவின் மேல் இறங்கி, “இவர் எனக்கு பிரியமான குமாரன்” என்று இயேசுவை சொல்கிறார். என்ன ஒரு அழகான அழைப்பு! ‘இது நிச்சயமாக தேவனுடைய குரல்’ என்று அறிந்ததும், ஒரு மனிதனாக இயேசுவின் சந்தோஷம் எப்படி இருந்திருக்கும்?

“நான் அவருக்கு பிரியமான குமாரன் என்று சொல்லி விட்டார்” என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய, அடக்கி வைக்க முடியாத சந்தோஷம் தான். அடுத்து உடனே, “நீ வனாந்திரத்துக்கு போ” என்று ஆவியானவர் சொல்கிறார். வனாந்திரத்துக்கு போகச் சொன்னதும், புதிதாக ஆவியின் அனுபவங்களைப் பெற்ற மனிதனுக்கு, ஆவியானவர் என்னை வழிநடத்த ஆரம்பித்து விட்டார். இனி நான் கலங்க வேண்டியதில்லை. அவரது கரம் பிடித்துக்கொண்டே பயணம் செய்யலாம் என்றுதான் தோன்றி இருக்கும். ஆனால் போன இடம் வனாந்திரம்.

வேதத்தில் எந்த வனாந்திரம் என்று கூறப்படவில்லை என்றாலும், வேத அறிஞர்கள் யூதேயா வனாந்திரமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இயேசு போன வ்னாந்திரம் வெறும் மணலும் பாறைகளும் நிறைந்த பகுதி மட்டும் கிடையாது. அங்கே மழைக்காலத்தில் புல், சிறிய புதர்கள், சில shrubs வளரலாம்; சில இடங்களில் மரங்களும் இருக்கலாம். ஆனால் பெரிய, அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடு மாதிரி இல்லை.

ஆக, அந்த வனாந்திரம், அங்கும் இங்கும் சில மரங்கள், கொஞ்சம் புல் புதர் இருந்த, மணலும் பாறையுமான வறண்ட பூமி. மக்கள் வசிக்காத, வறண்ட கடினமான பூமி அது. அங்கே உணவு, தண்ணீர் கிடைப்பது கடினம். காட்டு விலங்குகள், பாம்பு இருக்கலாம். தனிமை இருக்கும். அந்த இடத்தில் மனிதன் வாழ்வதற்கே ஒரு போராட்டம் தேவைப்படும்.

தாவீது ஒருமுறை சிங்கத்தையும், ஒருமுறை கரடியையும் கொன்றார். (1 சாமு 17:34–35) சிம்சோன் சிங்கத்தை கொல்கிறார். (நியா 14:5,6) பெனாயா ஒரு கெபிக்குள் இருந்த சிங்கத்தை கொன்றான்.(2 சாமு 23:20) அசீரிய சாம்ராஜ்யம், இஸ்ரேலை நாடு கடத்திய பிறகு, சமாரியாவில் தங்க வைக்கப்பட்ட மக்களை சிங்கம் தாக்கியதாக 2 இராஜா 17:25 ல் கூறப்பட்டுள்ளது. எனவே சிங்கம் போன்ற காட்டு மிருகங்கள் அங்கே இருந்திருக்கலாம் என்பது possible தான்.

இப்போது மீண்டும் இயேசுவை ஒரு மனிதனாக மட்டும் மனதில் நிறுத்தி யோசியுங்கள். ஞானஸ்நானம் எடுத்தார், ஆவியானவர் அவர் மேல் இறங்கினார். வனாந்திரத்துக்கு போகச் சொன்னார். போகும் இயேசுவுக்கு வனாந்திரம் தனக்கு எத்தனை நாட்கள் என்பது தெரியாது. ஆனால் அந்த வனாந்திரத்தில் இருக்கும் காட்டு மிருகங்கள் பற்றி தெரியும். ஆனாலும், (புது விசுவாசியைப் போல) மிக உற்சாகமாக செல்கிறார். காரணம், ஆவியானவர் அனுப்பினார் என்பதால் ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவர் அறிந்ததால்.

13. அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டு மிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்.

சாத்தானால் சோதிக்கப்பட்டு என்பது, ஏதோ ஒருநாள் சோதனை அல்ல. அவன் ஏதோ ஒரு விதத்தில் சோதனை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கலாம். காட்டு மிருகங்களை அனுப்பி இருக்கலாம், அதிக குளிரால் சோதித்திருக்கலாம், வெயிலால் சோதித்திருக்கலாம், தண்ணீர் இல்லாமல் சோதித்திருக்கலாம், சோர்வைக் கொடுத்திருக்கலாம், பெலன் இல்லாமல் போயிருக்கலாம். சாத்தான் சோதித்துக்கொண்டே தான் இருந்தான்.

பொதுவாக சாத்தான் கொடுக்கும் சோதனை, identity க்கு விரோதமான challenge. ஆதாம் ஏவாள் காலத்தில், ஏவாளிடம், நீ கனியைப் புசித்தால் தேவனைப் போலாகலாம் என்றான். உண்மையில் தேவன் மனிதனைப் படைக்கும்போதே, நமது ரூபத்தின்படியும், நமது சாயலின்படியும் உருவாக்குவோம் என்று சொல்லி, தேவ சாயலாகத்தான் படைத்தார். ஆனால், சாத்தான் ஏவாளிடம் வந்து, நீ தேவனைப் போலாகாலம் என்று சொல்லி, அவள் யார் என்பதை மறக்க வைத்து விட்டான்.

அதேபோல இயேசுவை “நேசகுமாரன்” என்று தேவன் சொல்லி இருக்க, “நீ உண்மையிலேயே தேவனுடைய குமாரனாயிருந்தால்” என்று சாத்தான் கேட்கிறான். அந்த இடத்தில் இயேசு ஒரு சாதாரண மனிதனாய், ஏவாளைப்போல, ‘நான் தேவகுமாரன் தான், இரு இந்த கல்லை அப்பமாக்குகிறேன்’ என்று இயேசுவால் மாற்ற முயற்சிக்க முடியும். ஆனால் வசனத்தால் பேசி அவனை ஜெயித்தார்.

ஒரு 30 வயது இளமையின் துடிப்பில் இருக்கும் வாலிபனிடம், ‘இதை செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவது போல தூண்டி விட முயற்சித்தான் சாத்தான். ஆனால் இயேசுவோ, வேத வசனத்தை வைத்து எல்லாவற்றிலும் ஜெயித்தார்.

இயேசுவை ஆவியானவர்தான் வனாந்திரம் போகச்சொன்னார். அங்கே உடனே ஒரு பெரிய ஊழிய வாய்ப்பு கிடைக்கவில்லை. சுகமளிக்கும் வரம் கிடைக்கவில்லை. சாத்தானுடைய சோதனையும், காட்டு மிருகங்களும் தான் இருந்தது. ஆனால் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? தேவன் அவரை தனியாக விடவில்லை. தேவதூதர்களும் அங்கு இருந்தனர்.

இன்றைக்கு நமக்கும் ஊழிய அழைப்பு இருக்கலாம். ஒருவேளை தேவன் கூறியதால், நம்பி சில விஷயம் செய்து, தோல்வியடைந்து, மனிதர்களின் நிந்தனைக்கு உள்ளாகி இருக்கலாம். ஒன்றே ஒன்று தான். நீங்கள் தனியாக இல்லை.

உங்களுக்கே தெரியாமல், தேவன் உங்களை கவனிக்கிறார். இயேசுவுக்கு Angels போல, நமக்கும் God’s care ஏதோ ஒரு விதத்தில் இருக்கும். ஆவியானவர் நடத்தும் பாதை சில நேரம் easy-ஆ இருக்காது. ஆனால் கஷ்டமான இடத்தில் இருப்பது, தேவன் நம்மை விட்டுவிட்டார் என்பதற்கு அர்த்தமில்லை.

வனாந்திரம் என்பது தேவன் இல்லாத இடம் இல்லை. சில நேரம் தேவனை இன்னும் நெருக்கமாக depend பண்ண கற்றுக்கொடுக்கும் இடம்.

Wilderness → முடிவு இல்லை.
Jesus wilderness-ஐ கடந்து தான் ministry-க்குள் வந்தார்.

நாமும் சோதனையை தாண்டினால், தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

Similar Posts

  • இஸ்ரேல்-16 (பத்சேபாள்)

    தாவீது – பத்சேபாள் சவுலுக்கு அடுத்து அரசாண்ட தாவீதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நிறைய பேருக்கு, தாவீது என்றாலே நினைவுக்கு வருவது, பத்சேபாள் தான். முதலாவது, இன்று பத்சேபாள் பற்றி பார்த்து விட்டு, பின்னர் தாவீதைப் பற்றி படிக்கலாம். வேதத்தில் 1 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது. பொதுவாக, மக்களாட்சி என்றால், பிரதமர் அவர் இடத்திலிருக்க, வீரர்கள் போருக்கு செல்வார்கள். தாவீது செய்ததுஅரசாட்சி. யுத்தத்துக்கு அரசன் செல்ல வேண்டும். ஆனால் தாவீதோ, மற்றவர்களை யுத்தத்துக்கு…

  • |

    இஸ்ரேல்–32 (ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம்)

    உலக அளாவில் பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்த அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம் அல்லவா? அடுத்ததாக ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் ஆங்கிலேயர்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று இங்கிலாந்தை தான் கூறுவார்கள். கிரேக்க சாம்ராஜ்யம் கூட அப்படி கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட ஏதாவது ஒரு நாட்டில், எப்போதும் பகல் இருந்து…

  • |

    பண்டிகைகள்-3 (பாவ நிவிர்த்தி நாள்)

    Yom Kippur (Day of Atonement) பாவ நிவிர்த்தி நாள் Happy Yom kippur (Day of Atonement) September 24,2023 Evening 6லிருந்து, September 25 Evening வரை பாவ நிவிர்த்தி நாள் என்கிற  ஆறாம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் 10ம் தேதி. கர்த்தர் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகளில், ஆறாவது பண்டிகை இன்று. எபிரேய ஏழாம் மாதத்தில் முதல் நாள் Rosh Hashannah என்று, முதல் பதிவாகப்…

  • |

    விடுதலை-1 (போராடும் சிங்கம்)

    போராடும் சிங்கம் நான் பார்த்த சில செய்திகளின் தொகுப்பை முதலில் உங்களிடம் பகிர விரும்புகிறேன். கடந்த 3 மாதங்களில் வந்த சில செய்திகள் தான் இவை. இன்னும் அநேக செய்திகள் உள்ளன. சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அவை உங்கள் பார்வைக்கு: 13 வயது சிறுவன் மத்திய பிரதேசத்தில், தன் சொந்த தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்கிறான். ஆந்திராவில் 13 வயது சிறுவர்கள் இப்பொழுதே  கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். மகாராஷ்டிராவில் 13 வயது சிறுவன், தன் சொந்த…

  • |

    வேதாகம பெண்கள் – 1 (உல்தாள்)

    Huldah – உல்தாள் வேதபகுதி : உல்தாள் வேதத்தில் இரண்டு இடங்களில், ஆனால் ஒரே சம்பவத்தில் மட்டுமே வருவார்.  2இராஜாக்கள் 22:14, 2 நாளாகமம் 34:22 கதை பின்புலம்: யூதாவை ஆண்ட எசேக்கியா ராஜாவிடம், ஏசாயா தீர்க்கதரிசி வந்து, “உம் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும். நீர் மரிக்க போகிறீர்” என தீர்க்கதரிசனம் உரைக்கிறார். எசேக்கியா ராஜா ஜெபம் செய்தார். 2 இராஜாக்கள் 20:3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது…

  • |

    Day 12 (12-01-2025)

    Scripture Portion: Job 32-34 யோபு 32 1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். 2அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 4அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *