The Kingdom of God

யோவான் கைது செய்யப்பட்ட பின்பு இயேசு ஏன் ஊழியத்தைத் தொடங்கினார்?
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு பிரசங்கிக்க தொடங்கினார் என்று வேதத்தில் பார்க்கலாம். அப்படியானால், யோவான் காவலில் வைக்கப்படும் வரை இயேசு wait பண்ணினாரா? அப்படியெல்லாம் இல்லை.
யோவான் செய்த ஊழியம், “எனக்கு பின் ஒருவர் வருவார், அவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று மேசியாவின் வருகையை அறிவித்தார். யோவான் ஊழியம் முடிந்த பின்பு இயேசு வந்து, “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்று கூறுகிறார். எனவே இங்கே யோவானின் வேலை, மேசியாவுக்கான வழியை ஆயத்தம் பண்ணுவது மட்டுமே.
John prepared the way.
Jesus came to fulfil the mission.
யோவான் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்தும் இயேசு ஊழியத்தை தொடங்குகிறார். இயேசு மனிதனாக இருந்தபோதும், சூழ்நிலைகள் அவரை பயமுறுத்தவில்லை. இதற்கு காரணம், வனாந்திர வாழ்க்கையாக கூட இருக்கலாம். கடந்த பதிவில், வனாந்திரத்தில் 40 நாட்கள் சோதிக்கப்படும்போது, காட்டு விலங்குகளாலும் சோதிக்கப்பட்டார். தாவீது சிங்கம் மற்றும் கரடியைக் கொன்றதால், அங்கே அந்த விலங்குகள் இருந்திருக்கலாம் என்று பார்த்தோம்.
ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.(எரேமியா 5:6)
வனாந்திரத்தில் ஓநாய்கள் இருந்தது என்பதை இவ்வசனம் மூலம் அறியலாம். 40 நாட்கள் இயேசு உபவாசம் இருந்தார் என்பதை, ஏதோ மரத்தின் அடியில், நிழலில், ஜெபம் பண்ணி இருப்பார் என்றுதான் கற்பனை பண்ணி இருப்போம், ஆனால் அவர் உபவாசத்தில், தண்ணீர் கூட கிடைக்காமல், காட்டு மிருகங்களின் தொல்லைகளோடு போராடி தான் ஜெயத்தைப் பெற்றுக்கொண்டார்.
இன்று 40 நாட்கள் உபவாசம், அல்லது 21 நாட்கள் உபவாசம் என்று நாம் சுக பத்திரமாக வீட்டில் இருந்துகொண்டு, உபவாசித்து, தேவன் ஏன் இன்னும் அற்புதம் செய்யவில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அந்த இடத்தில் இருந்துகொண்டே தேவனை தேட வேண்டும் என்று இயேசு வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அவர் வெறும் சாத்தான் மற்றும் காட்டு விலங்குகளோடு மாத்திரம் அங்கு இருக்கவில்லை. அங்கே தேவதூதர்களும் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது. எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை என்றாலும் சரி, தேவன் இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருக்கும்போது, நமக்குத் தெரியாமலேயே தேவனுடைய தூதர்களும் நம்மைக் காத்துக் கொண்டிருப்பார்கள்.
இயேசுவின் ஊழிய தொடக்கமே, யோவான் கைது செய்யப்பட்ட சூழ்நிலையில் தான். ஆனால் அவர் சூழ்நிலையைப் பார்க்கவில்லை. அழைத்த தேவனை மட்டுமே பார்த்தார். அழைப்பை நிறைவேற்றினார்.

Jesus ministry-ன் முதல் message என்ன?
இயேசு என்ன பிரசங்கித்தார்? “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று. மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்பதே. இரண்டு விஷயங்களை முக்கியமாக பார்க்கலாம்.
- Repent
- Believe the Good news
Repent
முதல் காரியம், மனம் திரும்ப வேண்டும். “தப்பு பண்ணாதே” என்று இயேசு சொல்லவில்லை. “நான் தப்பு பண்ணிட்டேன், sorry” என்று சொல்வது மட்டும் கிடையாது. “மனந்திரும்பு” என்று சொல்கிறார். நீ போய்க்கிட்டு இருக்கிற direction-ஐ மாற்று; God-ஐ நோக்கி திரும்புன்னு அர்த்தம். ஒரு UTurn போடச் சொல்கிறார் இயேசு.
ஒவ்வொரு முறையும் தப்பு பண்ணக்கூடாது என்று நாம் நினைத்தால், தோற்று தான் போவோம். மனந்திரும்பி வாழ்க்கையை மாற்றினால் மட்டுமே, வெற்றியுள்ள வாழ்வு வாழலாம்.
அதனால Christian life என்பது: “நான் இனிமேல் எந்தத் தவறும் பண்ணக்கூடாது” என்று நம்முடைய own strength-ல் போராடுவது மட்டும் கிடையாது. தவறு செய்தால்,
Recognize → Repent → Return to God. இதுதான் முக்கியம்.
Believe the Good news
இரண்டாவது என்ன சொல்கிறார்? Believe the Goodnews – சுவிசேஷத்தை (நற்செய்தியை) நம்பு. அது என்ன Good news? அதை தான் முதலாவது சொல்லி இருப்பார், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று” என்று.
Good News = “God-ன் Kingdom வந்துவிட்டது.”
அதாவது:
“God தூரத்துல இல்ல. அவர் தன்னுடைய ஆட்சியை கொண்டு வருகிறார். அந்த Kingdom-ன் ராஜாவாக Jesus இங்கே இருக்கிறார்.”
இது இயேசுவின் ஊழியத்தின் ஆரம்ப நாட்கள். இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்னர் தான், அவர் ராஜாவாக, பிரதான ஆசாரியராக மாறி, நம்மையும் ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆக்கினார். இன்னும் அந்த காரியங்கள் நிறைவேறவில்லை. அதனால்தான் தேவனுடைய ராஜ்யம் சமீபமாக (அருகில்) இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், தேவனுடைய அரசாட்சி இயேசு இருக்கும்பொழுதே வரத் தொடங்கி விட்டது.
“God’s Kingdom”ன்னா என்ன? இங்கே Kingdomன்னா ஒரு இடம் மட்டும் கிடையாது. அதன் basic idea:
God is King → God ஆட்சி செய்கிறார்.
அதாவது, God-ன் ஆட்சி, அதிகாரம், rule மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுவது. உதாரணத்துக்கு ஒரு நாட்டுக்கு ராஜா இருந்தா, அந்த ராஜாவின் kingdom-ன்னா அந்த ராஜா ஆட்சி செய்கிற இடம் + அவருடைய ஆட்சி.
அதே மாதிரி God’s Kingdom = God-ன் ஆட்சி.
இன்னொரு முக்கியமான விஷயம்,
Jesus “God’s Kingdom will come someday” என்று மட்டும் சொல்லவில்லை. அவர்: “The kingdom of God has come near.” — Mark 1:15 என்று சொல்கிறார். ஏன்? ஏனென்றால் Jesus வந்திருக்கிறார்.
Jesus மூலமாக:
- நோயாளிகள் குணமானார்கள்
- பிசாசுகளிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றார்கள்
- பாவங்களுக்கு மன்னிப்பு அறிவிக்கப்பட்டது
- மக்கள் God-ஐ நோக்கி திரும்ப அழைக்கப்பட்டார்கள்
- இறுதியில் Jesus மரித்து உயிர்த்தெழுந்தார்
இவை எல்லாம் God-ன் ஆட்சி Jesus மூலம் செயல்பட ஆரம்பித்ததற்கான signs. அதாவது இயேசு மூலமாக நடந்த அற்புத அடையாளங்கள் எல்லாமே, God’s Kingdom வந்து விட்டது என்பதன் அடையாளமே.
God’s Kingdom னா, Heaven ஆ?
இயேசு ராஜாவாக ஆட்சி செய்கிறார், அல்லது தேவனுடைய ராஜ்யம் வந்து விட்டது என்றெல்லாம் கேட்கும்பொழுது, நாம் மரித்து உயிர்த்தெழுந்து, 1000 வருட அரசாட்சியிலோ, அல்லது புதிய வானம் புதிய பூமியிலோ, இயேசு ராஜாவாக் இருப்பார் என்று கற்பனை செய்வோம். ஆனால் இயேசு இப்பொழுதே ராஜாவாக இருக்கிறார்.
இயேசு யரையெல்லாம் பார்த்து, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றாரோ, அவர்கள் வாழ்வில் God’s Kingdomன் மன்னிப்பு கிடைத்தது. “நீ சுகமாகு” என்று சொல்லும்போது, God’s kingdomன் வல்லமை வெளிப்பட்டது.
“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்பதை இப்படியும் சொல்லலாம். “God-ன் Kingdom இப்போ உங்களுக்குள் வந்துகொண்டிருக்கிறது — அதனால் என்னை நம்பி, God-ஐ நோக்கி திரும்புங்கள்.”

Practical Examples:
1. கோபம் வந்தாலும், பழைய மாதிரி react பண்ணாமல் இருக்க ஆரம்பிப்போம்.
முன்னாடி: “அவங்க இப்படிப் பண்ணாங்க; நானும் பதிலுக்கு பண்ணுவேன்.”
இப்போ: “Jesus இருந்தா இந்த situation-ஐ எப்படி handle பண்ணுவார்?”
அந்த ஒரு கேள்வியே நம் reaction-ஐ மாற்ற ஆரம்பிக்கும்.
2. Forgive பண்ண முடியாத ஒருவரை forgive பண்ண ஆரம்பிப்போம்.
Feeling உடனே மாறாது. ஆனா: “Jesus, நான் forgive பண்ண விரும்புறேன். Help me.” என்று சொல்ல ஆரம்பிப்போம்.
அங்கே God’s Kingdom நம் heart-ல் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
3. யாரும் பார்க்காத நேரத்திலும் சரியானதைத் தேர்ந்தெடுப்போம்.
“என்னை யாரும் பார்க்கல” என்பதிலிருந்து “God பார்க்கிறார்” என்பதற்கு நம் வாழ்க்கை மாறுகிறது.
4. மற்றவர்களைப் பற்றிய நம் attitude மாறும்.
“எனக்கு என்ன?” என்பதிலிருந்து: “இவருக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று யோசிக்க ஆரம்பிப்போம்.

Final Question:
Christianity என்பது வெறும் “Church போறது + Bible படிக்கிறது + prayer பண்ணுவது” மட்டும் இல்ல. யார் என் வாழ்க்கையின் King? அதுதான் கேள்வி.
Who is the King of my life?
நான் என்னுடைய விருப்பப்படி வாழ்கிறேனா? அல்லது, Jesus-ன் rule-க்கு என்னுடைய life-ஐ surrender பண்ணி வாழ்கிறேனா?
“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.” இதுதான் Jesus-ன் message. அதனால் இன்று நமக்கான response:
- Turn to God.
- Believe the Good News.
- Let Jesus be King
Jesus என் King என்று சொல்லுவது மட்டும் அல்ல—
அவருடைய Kingdom என் வாழ்க்கையில் செயல்பட ஆரம்பிக்கட்டும்.
