|

இஸ்ரேல்–25 (தாவீதின் பாவம்)

தாவீதின் பாவம்

தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது.

தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது?

முதல் காரணம்

இச்சம்வத்தில் தாவீது என்ன பாவம் செய்தார்? நான் அனேக நாட்கள் யோசித்ததுண்டு. ‘எல்லாருமே தன்னிடம் எவ்வளவு போர்ச்சேவகர் இருக்கிறார்கள் என்று அறிந்து, அதன்படி யுத்தத்துக்கான திட்டம் வகுப்பார்கள். தாவீதும் அதையே தான் செய்தார், தேவனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’

அந்த இடத்தில் உண்மையாகவே தாவீது அறிய நினைத்தது, “யூதா கோத்திரத்தில் படைவீரர்கள் எவ்வளவு பேர்? மற்ற கோத்திரங்களை கணக்கிட்டால் எவ்வளவு பேர்?” ஏன் இந்த கணக்கெடுப்பு எடுக்க நினைத்தார் தாவீது?

நம் காலத்தைப் போல தான் அப்போதும் தாவீது செய்தார். தாவீது, யூதா கோத்திரத்தை சேர்ந்தவர். அவரை முதலில் ராஜாவாக்கியதும் யூதா கோத்திரத்தார் தான். சவுலின் மரணத்துக்கு பிறகு தான், முழு 12 கோத்திரத்தையும் தனதாக்கி, இஸ்ரவேல் என்று முழு தேசத்தையும் ஆட்சி செய்தார். ஆனாலும், நம் ஜாதியில்(யூதா கோத்திரத்தில்) எத்தனை பேர், பிற ஜாதி வீரர்கள் எத்தனை பேர் என்று தாவீது அறிய நினைத்தார். அதனால்தான் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

மொத்தம் 13 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இஸ்ரவேலில் 8லட்சம், யூதாவில் 5 லட்சம் என்று தான் சொல்கிறார்கள். தேவன் முழு தேசமாக தாவீதின் கையில் கொடுத்திருக்க, தாவீதோ பிரித்து விட்டார். அதனால் தேவ கோபம் வந்தது.

இரண்டாம் காரணம்

தேவன் ஏற்கனவே அவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருக்கிறார், கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காணிக்கை செலுத்தவேண்டும் என்று. ஏன் அப்படி சொன்னார்? தெரியாது. ஆனால் நிச்சயமாக அதற்கு பின்னால் ஆவிக்குரிய காரணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் தாவீது நியாயப்பிரமாணத்தை மீறி விட்டதால் வாதை வந்தது.

 ஏன் கொள்ளை நோயை தேர்ந்தெடுத்தார்?

தாவீதுக்கு தேவன் 3 ஆப்சன் கொடுத்தார். முதலாவது, பஞ்சம். இரண்டாவது யுத்தம். மூன்றாவது கொள்ளை நோய். பஞ்சம் என்றால், ராஜா தன் ஜனங்களுக்காக, பிற தேசத்தில் உணவு கேட்க வேண்டும். யுத்தம் என்றால், பிற தேசத்தோடு யுத்தம் செய்ய வேண்டும், அதற்கு தன் போர் வீரர்களின் தயவு வேண்டும். மனிதன் முன்பாக போக்ககூடாது என்று, சுய நலமாக யோசித்து தாவீது கொள்ளை நோய் பக்கம் சென்றாரா? இல்லை.

தாவீது சுய நலமாக கொள்ளை நோய்க்கு செல்லவில்லை. தாவீது நன்றாக அறிந்திருந்தார், அவர் பஞ்சம் என்றாலும் சரி, யுத்தம் என்றாலும் சரி, அவர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார், மனிதர்களின் உதவியால். ஆனால் கொள்ளை நோய் என்றால், தேவன் தான் மனமிறங்க வேண்டும். தேவன் மன்னித்தாரா இல்லையா என்பதையும் கொள்ளை நோய் சரியாவதன் மூலமாக தாவீது அறிய முடியும். அதோடு, தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அந்த தண்டனையை செலெக்ட் செய்தார்.

பலி செலுத்திய இடம்

இந்த தண்டனையை நிறுத்துவதற்கு தேவன் பலி செலுத்த சொன்னார். எந்த இடத்திலும் தாவீது பலி செலுத்தலாம். ஆனால் தேவனே ஒரு இடத்தை சொல்லி, அங்கே பலி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார் ஒரு இடத்தை தேவனே செலெக்ட் செய்தால், அது எவ்வளவு முக்கியமானது அல்லவா. ஆம், அங்கே தான் சாலமோனை ஆலயம் கட்ட சொன்னார். தேவாலயம் கட்டப்பட்ட இடம் அது. இஸ்ரவேலர் இன்றும் மூன்றாவது ஆலயம் கட்ட போராடிக் கொண்டிருப்பது அதே இடத்தில்தான்.

எது எப்படியோ? அந்த தண்டனையின் மூலம் தான், தேவன் தங்குமிடம் இஸ்ரவேலருக்கு வெளிப்பட்டது.  அதுவும் நன்மைக்கே. இனி சாலமோனைப் பற்றி பார்த்துவிட்டு, ஒவ்வொரு சாம்ராஜ்யங்களைப் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 79 (20-03-2025)

    Scripture Portion: Deuteronomy 28-29 உபாகமம் 28 1இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். 3நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன்…

  • |

    Day 89 (30-03-2025)

    Scripture Portion: Judges 1-2 நியாயாதிபதிகள் 1 1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். 2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். 3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன்…

  • |

    Day 4 (04-01-2025)

    Scripture Portion: Job 1-5 யோபு 1 1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். 3அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 4அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன்…

  • |

    Day 257 (14-09-2025)

    Scripture Portion: Daniel 1-3 தானியேல் 1 1யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கைபோட்டான். 2அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். 3அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல…

  • |

    பண்டிகைகள்-14 (பாவ நிவிர்த்தி நாள் 1)

    ஆசரிப்பு கூடாரம் எபிரேய காலண்டரில், ஏழாம் மாதம் முதல் தேதி எக்காள பண்டிகை கொண்டாடப்படுகிறது. பத்தாம் தேதி, பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடப்படும். பதினைந்தாம் தேதியிலிருந்து, எட்டு நாட்கள், கூடாரப் பண்டிகை கொண்டாடப்படும் என்பது நாம் அறிந்ததே. ஏழு வேத பண்டிகைகளில் ஐந்து பண்டிகைகள் பார்த்து விட்டோம். இப்போது பாவ நிவிர்த்தி நாள் என்பது ஆறாம் பண்டிகை. பாவ நிவிர்த்தி நாளைப் பற்றி தெரிந்து கொள்ள, ஆசரிப்பு கூடாரத்தை பற்றி அறிந்திருப்பது அவசியம். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை…

  • |

    இஸ்ரேல்–31 (ரோம சாம்ராஜ்யம்)

    அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், மற்றும் கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம். அடுத்ததாக ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் ஆண்ட சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். எனவே இதைப் பற்றி முழுமையாக நாம் அறிந்தால், வேதத்தை ஆழமாக படிக்க உதவியாக இருக்கும். முடிந்த வரையில் முழுமையாக, பொறுமையாக படியுங்கள். ரோம சாம்ராஜ்யம் அடுத்ததாக ஆட்சி செய்த சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அதிக வருடங்கள் ஆட்சி செய்த சாம்ராஜ்யமும் இதுதான்….

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *