|

பண்டிகைகள்-14 (பாவ நிவிர்த்தி நாள் 1)

ஆசரிப்பு கூடாரம்

எபிரேய காலண்டரில், ஏழாம் மாதம் முதல் தேதி எக்காள பண்டிகை கொண்டாடப்படுகிறது. பத்தாம் தேதி, பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடப்படும். பதினைந்தாம் தேதியிலிருந்து, எட்டு நாட்கள், கூடாரப் பண்டிகை கொண்டாடப்படும் என்பது நாம் அறிந்ததே. ஏழு வேத பண்டிகைகளில் ஐந்து பண்டிகைகள் பார்த்து விட்டோம். இப்போது பாவ நிவிர்த்தி நாள் என்பது ஆறாம் பண்டிகை.

பாவ நிவிர்த்தி நாளைப் பற்றி தெரிந்து கொள்ள, ஆசரிப்பு கூடாரத்தை பற்றி அறிந்திருப்பது அவசியம். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வரும்போது, மோசேயை சீனாய் மலையில் ஏறி வரச் சொன்னார். அப்போது, இஸ்ரவேலருக்கு நடுவிலே கர்த்தர் தங்கும்படி, தனக்கு ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் செய்யச் சொன்னார். அதுவும், பரலோகத்திலுள்ள மாதிரியைக் காண்பித்து, இதன்படி மாத்திரம் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆக தேவன் காண்பித்த மாதிரிதான் ஆசரிப்பு கூடாரம் (Tabernacle).

இந்த ஆசரிப்பு கூடாரத்தில் மூன்று முக்கிய இடங்கள் காணப்படுகிறது. அவை, வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். வெளிப்பிரகாரத்தில் யார் வேண்டுமானாலும் பலி செலுத்த உள்ளே வரலாம். பரிசுத்த ஸ்தலத்தில், ஆசாரியர்கள் வரலாம். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உள்ளே வர முடியும். அந்த ஒரு நாள் தான் இந்த பாவ நிவிர்த்தி நாள்.

ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பிரிவுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறம், உள்ளே பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்.

வெளிப்புறத்தில் இரண்டு காரியங்கள் உள்ளன. அவை பலிபீடம் மற்றும் தண்ணீர் தொட்டி. இந்த பலிபீடத்தில் தான் பலி செலுத்தப்படும், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரில் ஆசாரியர் தன் கைகளை கழுவுவார்.

உட்பிரகாரத்தில் இரு பகுதிகள் உள்ளன. பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். இந்த இரு பகுதிகளுக்கும் இடையே திரைச்சீலை இருக்கும்.

பரிசுத்த ஸ்தலத்தில், சமூகத்து அப்ப மேஜையும், குத்து விளக்கும், தூப பீடமும் இருக்கும். இந்த மேஜையில், தினமும் அப்பங்களை மாற்றி வைப்பர், முந்தின நாளின் அந்த அப்பங்களை ஆசாரியன் மட்டும் தான் சாப்பிடலாம். தாவீது ஒருமுறை சமூகத்து அப்பங்களை சாப்பிட்டார் என்று வேதத்தில் படிப்போம் அல்லவா! அது இந்த அப்பங்களைத தான். குத்து விளக்கில் எப்போதும் அணையாமல் தீ எரிந்து கொண்டிருக்க வேண்டும். திரி கருப்பாகி மேலே இருப்பதை வெட்டுவதற்கு கூட பொன்னினால் செய்த கத்தரிக்கோல் செய்யச் சொல்லி இருப்பார் தேவன். தூப பீடத்தில் தூபம் போட வேண்டும். அதாவது சாம்பிராணி புகை போல ஒன்று போட வேண்டும்.

மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டி இருக்கும். இந்த பெட்டியின் மூடி தான் கிருபாசனம் (Mercy Seat). கிருபாசனத்தின் மீது இரண்டு கேரூபீங்கள் இருக்கும், அதன் நடுவில் இருந்து தான் கர்த்தர் பேசுவார்.

பொதுவாக பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்கள் எல்லாம் பொன்னால்(Gold) செய்யப்பட்டவை. இந்த ஆசரிப்பு கூடாரத்தை, வனாந்திரத்தில் பிரயாணம் செய்யும்போது,  பிரித்து தூக்கி செல்வார்கள். எங்கு தங்குவார்களோ, அங்கு மீண்டும் ஆசரிப்பு கூடாரம் கட்டப்படும். உள்ளே உள்ள பரிசுத்த ஸ்தலத்தின், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்களை, கையால் தூக்கி செல்லக் கூடாது. எடுத்துக்காட்டாக, உடன்படிக்கை பெட்டி எடுத்துக்கொண்டால், இரு பக்கங்களில் சேர்த்து மொத்தம் நான்கு வளையங்கள் இருக்கும். பொன்னால் செய்த கம்புகளை, இந்த வளையத்திற்குள் விட்டு, அந்த தண்டுகளைப்பிடித்து தான் தூக்க வேண்டும். இதுதான் ஆசரிப்பு கூடாரத்தின் Basic. ஆசரிப்புக் கூடாரத்தை பற்றி ஆழமாக வரும் காலங்களில் பார்க்கலாம். நீங்கள் அறிந்த காரியமாக இருந்தாலும் உங்களுக்கு நினைவு படுத்துதலுக்காக இங்கே பதிவிடப் பட்டுள்ளது.

ஒரு ஆசரிப்பு கூடாரத்துக்குள் மனிதன் செல்ல வேண்டுமானால், கையில் பலி இல்லாமல் செல்ல முடியாது. அந்த வாசலைக் கடக்கவேண்டுமானால் பலி அவசியம். ஆசாரியன், பலியைக் கொண்டு வந்த மனிதன் என்ன பாவம் செய்தான் என்று பார்க்க மாட்டார். கையில் உள்ள பலியில் குறை உள்ளதா என்று மட்டும்தான் பார்ப்பார். பலியில் குறை இருக்க கூடாது. நான் எவ்வளவு பாவி என்பதை ஆசாரியர் பார்க்க மாட்டார்.

பலியிட்டு முடித்ததும், அந்த கரியை(எரிந்த பலியின் எரிகல்) கொண்டு, ஆசாரியன் மட்டும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்று, தூபபீடத்தில் தூபம் காட்டுவார். இந்த தூபம் காட்டுவதற்கு ஆசாரியர்கள் தங்கள் முறைமையின் படி வர வேண்டும்.

யோவான்ஸ்நானகனின் அப்பா சகரியாவுக்கு தூபம் காட்டும் முறை வந்தது என்று வேதத்தில் படிப்போம் அல்லவா! இந்த பரிசுத்த ஸ்தலத்துக்குள் தூபம் காட்ட தான் அவர் வந்திருப்பார். தேவதூதர் சகரியாவை சந்தித்து, அவர் வாய் பேச முடியாமல் போனது கூட பரிசுத்த ஸ்தலத்தில்தான். 

வருடத்தில் ஒரேஒரு நாள், தேவன் நியமித்த நாளான பாவ நிவிர்த்தி நாளில் மட்டும் தான், பிரதான ஆசாரியரால் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்ல முடியும். அதுவும் பலியிட்ட பலியின் இரத்தத்தை உடன்படிக்கை பெட்டியின் மீது தெளிப்பார். பாவம் மன்னிக்கப்படும். 

இது நினைவுகூறலுக்காக மட்டுமே இந்த பதிவு. அடுத்த பதிவில், பாவ நிவிர்த்தி நாளைப் பற்றி பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 281 (08-10-2025)

    Scripture Portion: John 5 யோவான் 5 1இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார்…

  • |

    Day 180 (29-06-2025)

    Scripture Portion: 1 kings 22, 2Chronicles 18 1 இராஜாக்கள் 22 1சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது. 2மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது, 3இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, 4யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான்…

  • |

    Day 341 (07-12-2025)

    Scripture Portion: Acts 20:1-3, Romans 1-3 அப்போஸ்தலர் 20:1-3 1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். 2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். ரோமர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி…

  • |

    Day 207 (26-07-2025)

    Scripture Portion: Isaiah 40-43 ஏசாயா 40 1என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், 5கர்த்தரின் மகிமை…

  • |

    Day 174 (23-06-2025)

    Scripture Portion: I kings 12-14 1 இராஜாக்கள் 12 1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான். 2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான். 3அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 4உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான…

  • |

    Day 334 (30-11-2025)

    Scripture Portion: 1 Corinthians 5-8 1 கொரிந்தியர் 5 1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, 4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், 5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *