Day – 19 (19- டிசம்பர், 2023)
இரட்சிப்புக்காக நன்றி
தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை. அதே இனத்தில், இயேசு பிறந்து, நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, கீழ்ப்படியாமையின் சாபத்தை தொலைத்து போட்டார். சிலுவையில் குற்றமில்லாத இரத்தத்தை சிந்தி, யூதர்களை மட்டுமல்ல, வெளியே இருந்து நம்மையும் மீட்டு விட்டார். இது தான் கிறிஸ்தவம். நம் எல்லாருக்கும் தெரியும்.
முதலாவது நாம் வாழும் காலம் சிறந்த காலம், இதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்து இரத்தம் சிந்தி மீட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும் நம் நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும், வேத புத்தகம் தாராளமாக கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். நிறைய வேத வெளிப்பாடுகள் கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். அதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம்.
இஸ்ரவேலர்கள், கடவுளின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்னும் மேசியாவாகிய இயேசுவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாமோ, ஆவிக்குரிய இஸ்ரவேலாக, ஆபிரகாமின் சந்ததியாக வந்து, இயேசுவைக் கண்டு, அவரது அன்பை ருசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
வருடத்தில் ஒரு நாள், பாவ நிவாரண பலி செலுத்த வேண்டும், இது வரை செய்த பாவங்களுக்காக. ஒருவேளை அதன் பிறகு பாவம் செய்து விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மன்னிப்பு கேட்பதற்காக. ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லையே. நாம் பாவம் செய்த ஐந்தாவது நிமிடத்தில், உணர்ந்து மன்னிப்பு கேட்டால், உடனடியாக நம் பாவத்தை மன்னித்து நம்மை கட்டி அரவணைக்க நம் நேசர் இருக்கிறார். இது மிகப் பெரிய கிருபை. இதற்காக எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!
இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசித்தால் போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால், நமக்கு தேவையானது ஒன்று தான், விசுவாசம் மட்டும் தான். அதற்காக நன்றி சொல்வோம். அவர் ஒரே பேரான குமாரனை நமக்காக தந்தார். இதைவிட சிறந்த பரிசு Precious gift எதுவும் இருக்காது, அதற்காக நாம் நன்றி சொல்வோம்.
இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையினால், இன்றைக்கு நாம் எந்த காரியத்தையும் செய்து விடலாம். அதற்கான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு மனிதன் சுகவீனமாக இருக்கும் போது, இயேசுவின் நாமத்தை(Name) சொல்லி, அந்த மனிதனை சுகப்படுத்தும் அதிகாரம் நம் நாவில் இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.
Father God, உம் கிருபை அளவிட முடியாதது, உம் அன்பு அளவிட முடியாதது. இதெல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால், நான் இரட்சிக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருப்பதற்காக நன்றி. நீர் ரொம்ப அற்புதமானவர். பாவிகளை, அப்படியே போகட்டும் என்று விடாமல், அவர்கள் மனந்திரும்ப, சந்தர்ப்பம் கொடுக்கிறீர். அப்படி எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீர், அதனால்தான் நான் இரட்சிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக நன்றி. நீர் எங்களை அழைக்கும்போது, எங்கள் இருதயத்தை விசாலமாக்கி, Yes சொல்ல வைத்தீர். அதற்காக நன்றி. உம் வல்லமை பெரிது. நீர் பெரியவர். அற்புதம் செய்பவர். மகிமை நிறைந்தவர், ஆனால், எங்கள் வாயால் நாங்கள் துதிக்கும்போது, நீர் எங்களுக்குள் இறங்கி வருகிறீர். உம் மகிமையை, உம் பிரசன்ன்னத்தை உணரச் செய்கிறீர். அதற்காக நன்றி. எங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் நீர் எங்களை தகுதி படுத்திவிட்டீர், நாங்கள் இப்பொழுது நீதிமான்கள். அதற்காக நன்றி இயேசுவே. நாங்கள் மட்டுமல்ல, எங்களை சேர்ந்தவர்கள், மற்றும், உலகில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீர் கிரியை செய்யும். ஆமென்
Leave a Reply