ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

 ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.

 வசன அறிக்கைகள்

  1. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என் பழைய குணங்கள் அனைத்தும் ஒழிந்து போனது. எல்லாம் புதிதாகி, நான் புது மனிதன் ஆகிவிட்டேன்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

2 கொரிந்தியர் 5 – 17

  1. நான் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல. என் சுயம் அல்ல. என் வீண் பெருமை அல்ல. விசுவாசத்தினால், கிறிஸ்து எனக்குள் பிழைத்திருக்கிறார். நானும் கிறிஸ்துவும் ஒன்றாக இருக்கிறோம்.

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

கலாத்தியர் 2 – 20

  1. நான் இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டேன். நற்கிரியைகளைச் செய்வதற்காக சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன். எனக்காக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினவர் அவர்.

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

எபேசியர் 2 -10

  1. நான் மாம்சத்தில் பிறந்தவன் அல்ல. நான் ஆவியில் பிறந்தவன். நான் எப்பொழுது இரட்சிக்கப்பட்டேனோ, அப்பொழுதே ஆவியில் பிறந்து விட்டேன். நான் ஆவிக்குரியவைகளை யோசிப்பவன். என் தேவன் ஆவியாயிருக்கிறார். நானும் ஆவியாயிருக்கிறேன்.

மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

யோவான் 3 -6

  1. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். அவர் எனக்குள் இருக்கிறார். எனவே நான் உன்னதமானவரின்(Most High) மகனாயிருக்கிறேன்.

நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

சங்கீதம் 82-6

My decree is: ‘You are elohim [gods, judges], sons of the Most High all of you.

  1. கிறிஸ்து எனக்குள் இருக்கிறார். தேவனுடைய ஆலயமாக நான் இருக்கிறேன். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கும். நான் பரிசுத்தமாயிருப்பேன். தேவனுடைய ஆலயமாகிய என் சரீரத்தை நான் கெடுக்க மாட்டேன்.

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

1 கொரிந்தியர் 3 -17

  1. தேவன் எனக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1-7

  1. தேவன் என்னை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி, அவருடைய குமாரனாகிய இயேசுவின் ராஜ்யத்துக்கு உட்படுத்திவிட்டார்.அவருடைய குமாரனாகிய இயேசுவால், இயேசுவுடைய இரத்தத்தினால் எனக்கு பாவமன்னிப்பு கிடைத்தது.

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

கொலோசெயர் 1 – 13,14

  1. எங்கள் முன்னோர்களின் அழிவுள்ள நடத்தையிலிருந்து, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டேன்.

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,
19. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

1 பேதுரு 1 – 18,19

  1. நான் இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டேன். எனவே இப்பொழுது நான் அடிமை இல்லை. நான் அவருடைய மகனாயிருக்கிறேன். நான் இனி பாவத்துக்கு அடிமை இல்லை. யாருக்கும் அடிமை இல்லை. நான் தேவனுடைய பிள்ளை.

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கலாத்தியர் 4 – 7

  1. நான் தேவனுடைய பிள்ளை. அவர் என்னை ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்து இருக்கிறார்.

3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

எபேசியர் 1- 3

3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. 

  1. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். கொடி செடியில் நிலைத்திருப்பது போல, நானும் தேவனுக்குள் நிலைத்திருக்கிறேன். எனவே நான் கனி கொடுப்பேன்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

யோவான் 15-4

  1. நான் தேவனிடத்தில் சேர்ந்து விட்டேன். என்னை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு, நீதியுள்ளவரான அவர், எனக்காக பாடுபட்டு, மாம்சத்தில் கொல்லப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். எனவே நானும் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டு விட்டேன்.

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1 பேதுரு 3-18

  1. நியாயப்பிரமாண காலத்தில் தேவனிடத்தில் சேர்வதற்கு, ஆசாரியன் என்கிற மத்தியஸ்தர் தேவைப்பட்டார். இப்பொழுதோ இயேசு எனக்கான மத்தியஸ்தராகி, என்னை ஆசாரியன் இல்லாமல் நேரடியாகவே தேவனிடத்தில் சேர வழிவகுத்து விட்டார்.

அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
20. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.

கலாத்தியர் 3 -19,20

  1. நான் தேவனால் உண்டாயிருப்பதால், நான் உலகத்தை ஜெயித்தேன். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் என்னில் இருப்பவர் பெரியவர்.

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

1 யோவான் 4 – 4

  1. நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். அவர் எனக்குள் இருக்கிறார். நான் ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும் விட, மிகவும் அதிகமாய் எனக்கு செய்ய வல்லவர் அவர்.

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

எபேசியர் 3-20

  1. நான் வேத வசனங்களை தியானிப்பதால், சத்தியத்தை அறிவேன். சத்தியமாகிய வார்த்தை என்னை விடுதலையாக்குகிறது. வார்த்தையாகிய இயேசு என்னை விடுதலை ஆக்கினால், மெய்யாகவே நான் விடுதலை அடைந்து விட்டேன்.

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

யோவான் 8 – 32,36

  1. நான் என்னில் அன்புகூறுகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவனாயிருக்கிறேன்.

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

ரோமர் 8-37

  1. பரிசுத்தஆவி என்னிடத்தில் வந்ததால் நான் பெலனடைந்து விட்டேன். அவருக்கு சாட்சியாகவும் இருப்பேன்.

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப்போஸ்தலர் 1-8

  1. என்னுடைய கிரியைகளினால் அல்ல. இயேசுவை விசுவாசிப்பதால் மட்டுமே நான் நீதிமான் ஆக்கப்பட்டிருக்கிறேன். இயேசுவின் மூலம் சமாதானமும் பெற்றேன்.

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடையகர்த்தராகியஇயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ரோமர் 5-1

  1. கர்த்தர் தம்முடையவனாகிய என்னை அறிவார். அவருடைய உறுதியான அஸ்திபாரம் எனக்குள் நிலைத்திருக்கிறது. அவருடைய நாமத்தை சொல்கிற எவனும் அநியாயத்தை விட்டு விலகுவான்.

ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர்தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 2 – 19

  1. நான் தேவனுக்கு கீழ்ப்படிவதால், பிசாசுக்கு எதிர்த்து நிற்பேன். அவன் என்னை விட்டு ஓடிப் போவான்.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

யாக்கோபு 4- 7

விசுவாச அறிக்கைகள்

  1. கிறிஸ்து என்னை நியாயபிரமாணத்தின் சாபத்துக்கு நீக்கி விட்டார். எனவே பலவீனம், நோய்கள், வலிகள், பாடுகள், பாவங்கள், வறுமை, தரித்திரம் எதுவும் என்னை ஆளுகை செய்ய முடியாது.

  2. நான் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் நடக்கிறேன். கண்ணால் பார்த்து விசுவாசிப்பவன் அல்ல. காணாமல் விசுவாசிக்கிறேன்.

  3. நான் தினமும் தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறேன். அவருடைய வார்த்தைகளைப் பேசுகிறேன். என் விசுவாசத்தில் உறுதியாக இருக்கிறேன்.

  4. நான் ஆவிக்குரிய வாழ்வில் வளருகிறேன். சூப்பர்நேச்சுரல் வாழ்வில் நடக்கிறேன்.

  5. நான் அபிஷேகம் பெற்றவன். அற்புதங்கள், அடையாளங்கள் என் வாழ்வில் வெளிப்படுவதால், பிறரை தேவனிடம் ஈர்க்கிறேன்.

  6. என் வாழ்க்கையின் அபிஷேகத்தால், ஒவ்வொரு நுகமும் உடைக்கப்பட்டு அழிக்கப்படுகிறது; இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு சுமையும் நீக்கப்படுகிறது.

  7. நான் தேவனால் பிறந்தவன். அவர் என்னுடைய அப்பா, நான் அவருடைய மகன். அவருடைய மகன் என்ற உரிமையை  நான் எடுத்துக்கொள்கிறேன்.

  8. வெளி 3:15ல், லவோதிக்கேயா சபையைப் பார்த்து, நீ அனலும் அல்ல குளிரும் அல்ல என்று ஆண்டவர் சொல்கிறார். என் வாழ்வில் காணப்படுகிற இந்த சூழ்நிலை மாறட்டும். இயேசுவின் நாமத்தில் வெதுவெதுப்பான நிலை மாறட்டும். உம்முடைய அக்கினியை என் குடும்பத்தில் ஊற்றும். ஜெபத்தின் ஆவி எங்கள் குடும்பத்துக்குள்ளாக வரட்டும். பின் வாங்கிப் போன நிலை மாறட்டும்.

  9. கனி கொடுக்க முடியாதபடி தடை செய்கிற சர்ப்பத்தின் ஆவிகளுக்கு எதிராக பேசுகிறேன். நான் கனி கொடுக்க வேண்டியது தேவத்திட்டம். என் வாழ்வில் வருகிற பாவம், சோம்பேறித்தனம், வியாதி எல்லாமே என்னை கனி கொடுக்க விடாமல், பிசாசு எனக்கு தருவது. என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு விரோதமாக, பிசாசு போட்ட திட்டங்கள், இயேசுவின் நாமத்தில் இப்பொழுது அழிகிறது.

  10. நான் முன்னேறுகிறேன். என் ஜெப வாழ்வுக்கு இனி எந்த தடையும் இல்லை. புதிய வாசல்களை ஆண்டவர் திறக்கட்டும். இயேசுவின் நாமத்தில் அடைக்கப்பட்ட வாசல்கள் திறக்கப்படுவதாக. அடைத்து வைத்த பிசாசின் வல்லமையை சபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில்

  11. உம் சித்தத்துக்கு நேராக நடக்க எனக்கு கிருபை கொடுப்பீராக. உம்முடைய வழியில் நடக்க எனக்கு கிருபை கொடுங்க. உம்முடைய சித்தத்தை இழந்த அந்த தருணங்களை மன்னியுங்க. என் மனக் கண்களை கழுவுங்க. என் சிந்தைகளை கழுவுங்க. என் பேச்சை கழுவுங்க. இருதயத்தை கழுவுங்க

  12. என் ஆவிக்குரிய வாழ்வில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. புதிய உயரங்களுக்குள் என்னை கொண்டு செல்லுங்கள். கழுகின் பலனை புதுப்பிப்பது போல, என் ஆவியை புதுப்பியும். பழைய பலன் அல்ல புதிய பலன் வரட்டும். தரிசனங்கள், ஆவிக்குரிய ஆழங்கள் வரட்டும்.

  13. ஜெபத்தின் ஆவி ஊற்றப்படட்டும். மேலோட்டமான ஜெபங்கள் வேண்டாம். ஆழமான ஜெபத்துக்குள் என்னை இழுத்துச் செல்லும். அவசியத்துக்காக ஜெபிக்க கூடாது. உன் மேல உள்ள அன்புக்காக ஜெபிக்க வேண்டும். உங்கள் பிரசன்னத்துக்காக ஜெபிக்கணும். என் ஜெப நேரம் ஐக்கியத்தின் நேரமாய் மாறனும்.

  14. இயேசுவுக்குள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும். “என் கண்களில் உம் வெளிச்சம் வைங்க. உம் அக்கினியை என் கண்களில் வைப்பீராக. குருடாட்டம் இருக்கக் கூடாது. என் கண்கள் யாரையும் பொறாமையாய் பார்க்க கூடாது. இச்சையின் கண்கள் என்னிடத்தில் இருக்க கூடாது. வேசித்தனத்தின் கண்கள் இருக்கக்கூடாது.இயேசுவின் நாமத்தில் என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படட்டும்.

  15. உண்மையுள்ளவர்களாக மாற்றுங்க. என் பேச்சில் உண்மை இருக்க வேண்டும். பொய் இருக்கக் கூடாது. புரட்டு இருக்கக் கூடாது. மாய்மாலம் இருக்கக் கூடாது. சிந்தையில் உள்ள கட்டுகள் உடையட்டும். இருதயத்தில் உள்ள இறுமாப்புகள் உடையட்டும். நாங்கள் குடும்பமாய் அக்கினியாய் பற்றி எரிய உதவி செய்யும்.

  16. ஒரு ஆவியின் பெருமழை என் மேல் வீசட்டும். ஆவியின் உயிர்மீட்சி எனக்குள்ளே வரட்டும். எழுப்புதலின் மையமாக நான் இருக்க வேண்டும். புதிய அக்னி என்னை நிரப்பட்டும். என் ஆத்மாவை நிரப்பட்டும். என் இருதயத்தை நிரப்பட்டும். என் சரீரத்தை நிரப்பட்டும். எழுப்புதலில் நான் அக்கினியாய் எரிந்து பிறரையும் பிரகாசிக்கச் செய்ய எனக்கு கிருபை கொடும். ஆமென்

  17. நான் என் வாழ்வில் எதையெல்லாம் விசுவாசிக்கிறேனோ, அதையெல்லாம் என் வாயால் அறிக்கையிடுகிறேன். நான் ஆவிக்குரிய வாழ்வில் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அறிக்கையிடுகிறேன். என் சரீரத்தில், எந்த பலவீனமோ, நோய்களோ இல்லை என்று அறிக்கையிடுகிறேன். என் மனம், சிந்தை தேவனால் புதுப்பிக்கப்பட்டது என்று அறிக்கையிடுகிறேன். என் சரீரம் தேவன் தங்கும் ஆலயம் என்று அறிக்கையிடுகிறேன். என் பொருளாதாரம் செழித்திருக்கிறது என்று அறிக்கையிடுகிறேன். நான் செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றியும் செழிப்பும் என்னை தொடர்ந்து வருகிறது என்று அறிக்கையிடுகிறேன். தேவதூதர்களின் பாதுகாப்பு என் வாழ்வில் இருக்கிறது என்று அறிக்கையிடுகிறேன். கர்த்தர் என்னையும் என் வீட்டையும் எனக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்து இருக்கிறார் என்று அறிக்கையிடுகிறேன்.என் குடும்பத்தார் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அறிக்கையிடுகிறேன். நான் அறிக்கையிட்ட எல்லாவற்றையும் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறேன். ஆமென்.

2 responses to “ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்”

  1. G Samarasam Avatar
    G Samarasam

    Excellent.
    Congratulations.

    1. RhemaTamil Avatar

      Praise God… Thank you so much

Leave a Reply to G Samarasam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *