இஸ்ரேல் – 5

இஸ்ரேல் தேசிய கீதம்

யார் இந்த யூதர்கள்?

பூமியில் யூதர்கள் கஷ்டப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் கஷ்டப்பட்டது கிடையாது. அதேபோல யூதர்கள் வெறுக்கப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் வெறுக்கப்பட்டதும் இல்லை. யூதர்களை அதிகம் வருத்தியப்படுத்தியது முஸ்லிம்களோ, அரபியர்களோ கிடையாது. வரலாற்றை நன்றாக படித்துப் பார்த்தால், யூதர்களை கொடுமைப்படுத்தியது கிறிஸ்தவர்கள் தான் என்பதை அறியலாம். இயேசு ஒரு யூதர். இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள். இயேசுவின் சீஷரை விரட்டி விரட்டி கொன்றவர்கள் யூதர்கள். இந்த எண்ணமே கிறிஸ்தவர்கள், யூதர்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. யூதர்கள் இலுமினாட்டிகள் என்றும், அவர்கள் இந்த உலகை ஆள்வதற்காக, உலக மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன. பாலஸ்தீனியத்தில் அடிக்கடி குண்டு மழை பொழிந்து, அதிகம் பேரை காவு வாங்கிக் கொண்டிருப்பவர்களும் யூதர்கள் தான்.

யூதர்கள் இத்தனை மூர்க்கமாக இருப்பதற்கும், இரக்கமற்று செயல்படுவதற்கும், சுயநலவாதிகளாக வலம் வருவதற்கும், வரலாறு முழுவதும் அவர்கள் அடைந்த துயரமே காரணம். இன்னொருமுறை அகதிகளாக அலைந்து திரிய அவர்கள் தயாராக இல்லை. பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின், தன் கைக்கு கிடைத்த தேசத்தை விட்டுக் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்கள், அரபியர்கள், கிறிஸ்தவர்கள் என யாரையுமே நம்பிக்கைகுரியவராக பார்ப்பதற்கு யூதர்கள் தயாராக இல்லை. தம்மையும் தம் தேசத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, எந்த எல்லைக்கும் போக யூதர்கள் தயாராக இருக்கிறார்கள். இரக்கமற்று எத்தனை பேரை கொலை செய்யவும், அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை லட்சம் உயிர்களை பலியிடவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கு காரணம் 2000 ஆண்டுகள் அவர்கள் பெற்றிருந்த, நீண்ட கொடிய அனுபவங்கள்.

இஸ்ரேல் தேசிய கீதம்

இஸ்ரேலின் தேசிய கீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போது அவ்வளவு ஆச்சரியம். கிபி 73ல், இஸ்ரேல் முற்றிலுமாக இல்லாமல் போனது. அதன்பின் 1948ல் தான் அவர்கள் தேசம் அவர்களுக்கு திரும்பக் கிடைத்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தங்களுக்கு என்று தேசமே இல்லாத ஜனங்கள். பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்த மக்கள். ஆனால் அவர்களது வெறி, இஸ்ரேல் என்று தேசியகீதம் மூலம் அறியலாம்.இந்தக் கீதம் எழுதப்பட்ட ஆண்டு கிபி1878. Naftali Herz Imber, 1878ல் எழுதி இருக்கிறார். அப்போது அவர்களுக்கென்று ஒரு தேசம் கூட கிடையாது. யூதர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் தேவனுக்காக எப்படி வளர்த்து இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அமைதியாக அந்த தேசிய கீதத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவர்களின் ஏக்கம் புரியும். எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் கண்கள் சீயோனை நோக்கியே இருக்கும் என்று பாடுவது, அவர்கள் வலியைக் காட்டுகிறது.

இந்தப் பாடலை வாசித்தாலே தெரிகிறது அல்லவா! எவ்வளவு துயரம் பட்டிருக்கிறார்கள் என்று. வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தாலும், கண்கள் எப்போதும் கிழக்கே சீயோனை நோக்கியே இருந்தது அவர்களுக்கு. (தானியேல் பாபிலோனில் சிறைப்பட்டு இருக்கும் போது, மூன்று வேளையும் எருசலேமுக்கு நேராக திரும்பி ஜெபித்தார்.) நம் நாட்டில் இருந்து அமெரிக்கா போனால், அங்கேயே செட்டில் ஆகிறதற்கு என்ன வழி என்று தான் யோசிக்கிறார்கள். மீண்டும் இந்தியா வருவதைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் நாட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு தேசவெறி அல்லவா! அவர்கள் பிற நாடுகளில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *