இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள்

1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது.

2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை தயாரிப்பவர்கள் யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை மழுங்கி விடும் என்பதால், 15 வயது வரை கார்ட்டூன் பார்க்க கூடாது என்ற சட்டம் இஸ்ரேலில் இருக்கிறது.

3. பேருந்து நிலையமாக இருக்கட்டும்… ரயில் நிலையமாக இருக்கட்டும்… எங்கு சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்கும் மக்கள் நாம். ஆனால் இஸ்ரேலில், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏசி உடன் கூடிய லைப்ரரி உள்ளது. பேருந்துக்காக காத்து நிற்கிறவர்கள், அந்த நேரத்தில் அந்த நூலகத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4. இஸ்ரேலில் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவர்கள் ராணுவத்தில் மிக முக்கிய பொறுப்பாளராக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது, அங்குள்ள வினோதமான ஒரு சட்டம்.

5. Highway roadல் பைக்கையோ காரையோ நிறுத்தி லிப்ட் கேட்பது மிகப்பெரிய குற்றம். வழிப்பறி கொள்ளைகள் நிகழாமல் தடுக்க இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

6. ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, டிப்ஸ் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செல்லும் போது உங்களை நிறுத்தி டிப்ஸ் தருமாறு கேட்பார்கள்.

7. இஸ்ரேலில் புகை பிடிப்பது மரண தண்டனைக்குரிய குற்றம். அதில் இருக்கும் நிக்கோட்டின், டிஎன்ஏவில் கலப்பதால், அடுத்த தலைமுறையின் மூளை பாதிக்கப்படும். எனவே அவர்கள் பொது இடத்திலோ, வெளியிலோ புகை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். (இப்பொழுது நன்றாகவே குடிக்கிறார்கள்)

ஆனால் உலகின் மிகப்பெரிய சிகரெட் கம்பெனி ஒரு யூதருடையது. இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்றி முடிக்கும் வீரர்கள், உடனடியாக இந்தியாவுக்கு சுற்றுலா வருவார்கள். இந்தியாவில் உள்ள கோவாவில், ஓய்வு எடுத்தபடி, சிகரெட் புகையை இழுத்து மூச்சு வாங்குவார்கள். அதுதான் அவர்கள் வாழ்க்கையில் முதலாவது பிடிக்கும் சிகரெட், அதே போல் அவர்கள் வாழ்க்கையில் கடைசியாக குடிக்கும் சிகரெட்டும் இந்தியாவில் தான் குடிப்பார்கள். ராணுவத்தில் பணியாற்றியதால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலைப்பளு அனைத்தையும் தோற்கடிக்க, இந்தியாவுக்கு சுற்றுலா வந்து, நன்கு ஓய்வெடுத்து விட்டுத்தான், தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் யூதர்கள். (ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.)

யூத பெற்றோர்கள்:

உலக அளவில் பதினைந்து சதவீதம் கூட மக்கள்தொகை இல்லாதவர்கள் யூதர்கள், உலக அளவில் தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் இவற்றில் 70% யூதர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு பெற்றோரின் வளர்ப்பும் மிகப்பெரிய காரணம். குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் தாய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இஸ்ரேலில் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு ஆற்றிக் கொண்டிருப்பவர் தாய் என்பதை வெளிப்படையாகக் காணலாம். தன் வயிற்றில் கரு உருவாவது தெரிந்த உடனேயே, அந்தத் தாய் எல்லா வேலையும் ஒதுக்கி விட்டு, Maths puzzle போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தாயின் மூளை தூண்டப்படும் போது, குழந்தையின் மூளையும் தூண்டப்படும் என்பது அவர்களது எண்ணம். அறிவியல் பூர்வமாக அந்த கருத்தும் சரியே. கரு உருவான உடன், அந்த தாய் தூக்கம் வரக் கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல், தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இசை வாசித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சாப்பாட்டிலும் அதிகமாக மீன் எடுத்துக் கொள்வார்கள். மீனும் இறைச்சியும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது அந்த அளவுக்கு சத்து அல்ல என்று கூறும் யூதர்கள், இறைச்சியை avoid செய்து விட்டு, அதிகமாக மீனைத்தான் சமைப்பர். அதுவும் மீனைப் பொறித்து உண்ணாமல், வேக வைத்துத் தான் சாப்பிடுவர். நிறைய nuts, vegetables எடுத்துக் கொள்வார்கள்.

யூதக் குழந்தைகள்:

குழந்தைகள் சிறு வயதிலிருந்து இசை வாசிக்கப் பழக வேண்டும். கண்டிப்பாக குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கக் கூடாது. 15 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளையைத் தூண்டும் வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்றவை, கட்டாயமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஆறாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வணிக கணிதவியல் படிப்பு கட்டாயமாக சொல்லித் தரப்படும். அதன் பின்னர் அவர்கள் என்ன துறையில் படிக்க விரும்புகிறார்களோ, அந்தத் துறைக்கான பாடங்கள் மட்டுமே சொல்லித் தரப்படும். நம்மைப் போல் எல்லா பாடங்களையும் அவர்கள் படிப்பது கிடையாது. போர்த்தளவாடம், மருத்துவம், தொழில்நுட்பம். இதுதான் அவர்களது முக்கிய பாடங்கள். இதை நோக்கித்தான் அவர்களது கவனம் சென்று கொண்டே இருக்கும்.

முக்கியமாக வணிகவியல் எடுக்கும் ஆசிரியருக்கு, அங்கே மரியாதை அதிகம். வணிகவியலில் ஒரு பத்து பேர் சேர்ந்து கூட்டாக இருப்பார்கள். அந்த பத்து மாணவர்களும் சேர்ந்து, ஒரு business செய்து, பத்து மில்லியன் அமெரிக்கன் டாலரை சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அப்படி சம்பாதித்தால் மட்டுமே அவர்களுக்கு டிகிரி முடித்ததற்கான சான்றிதழ் கொடுக்கப்படும். இதனால் தான் எழுபது சதவீத உலகமே யூதனின் கையில் இருக்கிறது. Cococola, Dell, Apple, Motorola என்று முக்கிய நிறுவனங்கள் யூதனுடையதாகத்தான் இருக்கும்.

மாணவர்கள் பிசினஸ் செய்வதற்கு பணம் தேவை. பணம் யார் கொடுப்பார்கள்? நியூயார்க்கில் யூதர்களுக்கென்று ஒரு வர்த்தக நிறுவனம் உள்ளது. அங்கே போய் மாணவர்கள், ‘எனக்கு இந்த ஐடியா இருக்கிறது. நான் இப்படி ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போகிறேன்’ என்று சொன்னால், வட்டி இல்லா கடன் அந்த நிறுவனம் கொடுக்கும். அதனால் தான் அவர்களால் அதிக பிசினஸ் செய்ய முடிகிறது.

மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கும் கடன் வழங்கப்படும். அவர்கள் மருத்துவர்கள் ஆன பின்பு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, மூன்று வருடங்களுக்குள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். மூன்று வருடம் முடிந்த பின்னர், அவர்கள் அந்த வட்டி இல்லா கடனைத் திரும்ப செலுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *