எக்காளம்
தமிழ் வேதத்தில் எக்காளம் என்றும் பூரிகைகள் என்றும் தனித்தனி பெயர்கள் இருந்தன. இரண்டும் ஒன்று தானா? என்று தேடிப் படித்தால், இரண்டும் வேறு வேறு என்பதை அறியலாம். எக்காளம் என்பது (shofar) என்றும், பூரிகை என்பது Trumpet என்றும் அறியலாம். ஆட்டின் கொம்பில் எக்காளம் தயாரிப்பது Shofar அதாவது எக்காளம் என்றும், வெள்ளியினால் பூரிகை செய்வது, Trumpet என்றும் அழைக்கப்படுகிறது.
நாள் தொடங்கும்போது, அதாவது இரவில் ஆரம்பிக்கும் இந்த பண்டிகையில், அடுத்த நாள் காலையில் தொடர்ச்சியாக 100 முறை எக்காளம் ஊதுவார்கள். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இந்த சீசனில் மாதுளை முக்கியமானது. இந்த பண்டிகையில் ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிட்டாலும், மாதுளை யூதர்களுக்கு முக்கியமானது. இது மாதுளையின் சீசன் என்பதாலும், மாதுளை யூத கலாச்சாரத்தில் முக்கியமானது என்பதாலும், மாதுளையை சாப்பிடுவர். மாதுளை ஏன் முக்கியமானது?
உபாகமம் 8:8 அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்;
முதலாவது, தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த தேசமே, மாதளம்செடி உள்ள தேசம் என்று கூறியிருக்கிறார். இரண்டாவதாக, ஆசாரியருக்கு உடுத்த வேண்டிய உடையில், அடிப்பக்கத்தில், மணியும், மாதளம்பழமும் தொங்க வேண்டும் என்று தேவன் கூறினார். அதுவும் போக, யூதர்களின் நம்பிக்கையின் படி, மாதளம் பழத்தில், 613 விதைகள் இருக்குமாம். தேவன் இஸ்ரவேலருக்கு, 10 கற்பனைகள் கொடுத்தது போல, நியாயப்பிரமாணம் 613 கொடுத்தார். எனவே மாதுளை முக்கியமானது. ஆனால் உண்மையில் மாதுளையில், 200 முதல் 1200 வரை விதைகள் இருக்கும். 613 என்பது அறிவியல் பூர்வ உண்மை கிடையாது. ஆனால், யூதர்களின் பாரம்பரிய நம்பிக்கை, 613 விதைகள் தான் இருக்கும் என்பது.
Blessed are You, Lord our God, King of the Universe, who has kept us alive, sustained us, and brought us to this season. Amen.
மாதுளையை சாப்பிடுவதற்கு முன்னர், இந்த ஜெபத்தை சொல்வார்களாம். ஒரு நல்ல பாரம்பரிய யூதன், ஒரு நாளைக்கு 70 முறை ஜெபம் செய்வான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை, இப்படி அனேக ஜெபங்கள் மனப்பாடமாக சிறுவயதிலிருந்தே சொல்வதால், 70 முறை என்பது அவருக்கு எளிதாக இருக்கும் போல.
கிதியோன்
கிதியோனை பராக்கிரமசாலி என்று தேவன் கூறினாலும், தேவனுக்கே 2 முறை Test வைத்து, சோதித்த பின்னர் தான், யுத்தத்துக்கு தயாரானார் கிதியோன். அப்படிப்பட்ட கிதியோனிடம், கையில் பானை, வழிக்கு Snacks, ஒரு எக்காளம் மட்டும் போதும், யுத்தத்துக்கு போ என்று தேவன் கூறினால், உடனே நம்பி போய்விடுவாரா? பின் எப்படி கிதியோன் போனார்? தேவன் மீது நம்பிக்கை என்றே வைத்துக் கொள்ளலாம். எக்காளத்தை ஏன் ஊதச் சொன்னார்? இருப்பதே 300 பேர். அதையும் 100, 100ஆக பிரித்து, நாங்கள் 100 பேர் எக்காளம் ஊதும்போது, நீங்களும் ஊத வேண்டும் என்று கூறினார்.
நியாயாதிபதிகள் 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.22 Gid’on’s men blew their 300 shofars, and ADONAI caused everyone in the camp to attack his comrades; and the enemy fled beyond Beit-Sheetah near Tz’rerah, as far as the border of Avel-M’cholah, by Tabat. (CJB)
ஒரு இஸ்ரவேலன் இவ்வளவு விசுவாசமாயிருக்கிறான் என்றால், அதன் பின்னால் ஒரு வாக்குத்தத்தம் உள்ளது என்று அர்த்தம். அப்படி என்ன வார்த்தையை நம்பி போருக்கு எக்காளத்துடன் கிதியோன் போயிருப்பார்?
எண்ணாகமம் 10:9
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.9 “When you go to war in your land against an adversary who is oppressing you, you are to sound an alarm with the trumpets; then you will be remembered before ADONAI your God, and you will be saved from your enemies.
தேவன் ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தார், நீங்கள் எக்காளம் ஊதினால், நான் உங்களை நினைவு கூறுவேன். உங்கள் பகைஞரிலிருந்து விடுதலை தருவேன் என்று. என்வே தான் கிதியோன், தேவனுடைய வார்த்தையை நம்பி போனார். வெற்றியும் பெற்றார்.
கிதியோன் ஏதோ ஒரு நாளில் எக்காளம் ஊதும்போது, மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்த எக்காள பண்டிகை என்பது, எக்காளம் ஊதி, சத்தமிட்டு சந்தோசமாயிருங்கள் என்று தேவன் கூறியிருக்கிறார். இது தேவன் நியமித்த நாள். அப்படியானால் இந்த நாளில் எக்காளம் ஊதும்போது, நாம் தேவனுடைய சமூகத்தில் நினைவுகூறப்படுவோம் என்பது உண்மைதானே!
எரிகோ கோட்டை
யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,20 So the people shouted, with the shofars blowing. When the people heard the sound of the shofars, the people let out a great shout; and the wall fell down flat; so that the people went up into the city, each one straight ahead of him; and they captured the city.
எரிகோ கோட்டையை மக்கள் பிடிக்க முக்கிய காரணம், ஆசாரியர் எக்காளம் ஊதும்போது, ஜனங்கள் சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். எக்காளம் என்பது, தேவ சமூகத்தில் நினவு கூற பயன்படும் ஒரு Powerful Weapon. கிதியோனுடன் இருந்து மக்கள், எரிகோ கோட்டையின் வெளியே இருந்து மக்கள், மகா சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். நாம் எல்லா இடத்திலும் அமைதியாக காட்டிக்கொள்ள அவசியம் இல்லை. தேவனை புகழ எந்த இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே சத்தமாய் தேவனை மகிமைப்படுத்தலாம். பெரிய வெற்றியும் பெறலாம்.
இதுவரை நான்கு பண்டிகைகள் படித்தோம். ஒவ்வொன்றும் இயேசுவின் காலத்தில் துல்லியமாக நிறைவேறியது. பஸ்கா பண்டிகையில் இயேசு பஸ்கா ஆடாக பலியானார். புளிப்பில்லாத அப்ப பண்டிகையில், இயேசு பாவமில்லாதவராக அடக்கம் பண்ணப்பட்டார். முதற்கனி பண்டிகையில், இயேசு உயித்தெழுதலின் முதற்பலனானார். பெந்தெகோஸ்தே பண்டிகையில், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இப்போது ஐந்தாவது பண்டிகையான, எக்காள பண்டிகை பார்த்தோம். ஆனால், இப்பண்டிகையின் காலத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் இந்த தரிசனங்கள் நிறைவேறவில்லை. இயேசு கடைசி எக்காளம் தொனிக்கும்போது இந்த உலகுக்கு வருவதை, அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையை இப்பண்டிகை குறிக்கிறது. இயேசு சீக்கிரமாய் வரப்போகிறார். நாமும் ஆயத்தமாகலாம், பிறரையும் ஆயத்தப்படுத்துவோம். ஆறாவது பண்டிகை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Leave a Reply