|

வேதாகம பெண்கள் – 2 (பெபேயாள்)

Phoebe – பெபேயாள்

வேத பகுதிஒரு இடத்தில் வெறும் இரண்டு வசனங்களில் மட்டுமே பெபேயாள் வருவார்.

                    ரோமர் 16: 1,2

கதை பின்புலம் – பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில், இரண்டு வசனங்களில் இப்பெண்ணைப் பற்றி பேசுகிறார். நிருபம் என்பது என்ன? நிருபம் என்றால் லெட்டர். பவுல், ரோம் நகரில் உள்ள, புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, தன்னுடைய விளக்கங்களை ஒரு கடிதம் மூலம் அனுப்புகிறார்.அந்தக் கடிதத்தில் இப்பெண்ணுடைய பெயர் இருக்கிறது. இந்த ரோமர் 16ம் அதிகாரத்தில், கிட்டத்தட்ட 26லிருந்து 30 பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. அதில், 10 பெயர் பெண்களுடையது. (மூன்றில் ஒருபங்கு பெண்கள் இருந்திருக்கிறார்கள்) ஆதி திருச்சபையில், பெண்களின் முக்கியத்துவத்தை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

யார் இந்த பெபேயாள்?

  1. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
  2. எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.

ரோமர் 16

மூன்று கோணத்தில் பவுல் பெபேயாளை இங்கே அறிமுகப்படுத்துகிறார்.

  1. கெங்கிரேயா சபையின் ஊழியக்காரி
  2. நம்முடைய சகோதரி
  3. ஆதரவாயிருந்தவள்

பெபேயாள் என்ற பெயரின் அர்த்தம் நிலா(moon). கிரேக்க தெய்வமாகிய Artemis என்ற தெய்வத்தை மகிமைப்படுத்த, இந்த பெயரை வைத்திருக்கலாம். கொரிந்து, கெங்கிரேயா பகுதிகளில், அதிகமாக வணங்கப்பட்ட தெய்வம் தான் Artemis.

கெங்கிரேயா:

கெங்கிரேயா என்பது, கொரிந்து பட்டணத்துக்கு சில மைல் தொலைவில் உள்ள கடற்கரைப் பட்டணம் ஆகும். வேதத்தில் கெங்கிரேயா பட்டணம் இருமுறை தான் வருகிறது.

அப்போஸ்தலர் 18:18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
ரோமர் 16:1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,

அப்போஸ்தலர் புத்தகத்தில், பவுல் கொரிந்து பட்டணத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் தங்கியிருந்து ஊழியம் செய்திருப்பார். அந்த நேரத்தில் அருகிலிருந்த பட்டணங்களுக்கும் சென்றிருப்பார். அந்த நேரத்தில், கெங்கிரேயா பகுதியில், பவுலின் பிரசங்கத்தை கேட்டு, இயேசுவை ஏற்றுக்கொண்ட பெண்தான் பெபேயாள் என இறையியலாளர்கள் கருதுகிறார்கள்.

 

  1. சபையின் ஊழியக்காரி

பெபேயாளை பவுல், கெங்கிரேயா சபையின் ஊழியக்காரி என்று கூறுகிறார். இதை வைத்து அநேகர், “பவுல் பெபேயாளை உதவி செய்பவள் என்று தான் கூறினார், அவள் சபையின் தலைவர் அல்ல” என கூறுவார்கள். அது தவறானது. இங்கு ஊழியக்காரி என்ற வார்த்தைக்கு பவுல் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, “Diakonos”. இதன் அர்த்தம், Servant, Deacon, Minister. ‘ஒருவேளை பெண்களுக்கு மட்டும் லீடராக இருப்பாரோ’ என்றால், அதுவும் தவறு தான். ஏனெனில் Complete Jewish Version (CJV) என்ற பதிப்பில், “The Shamash of the Congregation at Cenchreae” என இருக்கிறது. இந்த Shamash என்பது directs and leads public worship என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எனவே முழு சபையையும் லீட் செய்த ஒரு பெண்ணாக பெபேயாள் இருந்திருக்கிறார் என புரிய முடிகிறது.

இந்த Shamash என்பதற்குள் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது letter carrier என்பது அதன் அர்த்தம். இந்த பெபேயாள் தான், ரோமர் நிருபத்தை ரோம் நகருக்குள் கொண்டு சென்றவர். அதனால்தான் அவரை ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கூறினார் என வேதவல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  1. நம் சகோதரி

நம்முடைய சகோதரியாகிய பெபேயாள் என பவுல் கூறுகிறார். “என் சகோதரியாகிய பெபேயாள்” என பவுல் கூறினாலே, அங்கு பெபேயாளை மரியாதையாக நடத்தி இருப்பார்கள். அவரோ “நம் சகோதரி” என கூறுகிறார். ‘கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள்’ என வெறும் வாய் பேச்சாக பவுல் கூறவில்லை. அதனால்தான், எனக்கு சகோதரி என்றால் உங்களுக்கும் சகோதரி என கூறுகிறார். “சபை என்பது ஒரு குடும்பம்” என்று எல்லாரையும் அதில் இணைக்கிறார் பவுல்.

  1. ஆதரவாயிருந்தவள்

அநேகருக்கும், எனக்கும் கூட ஆதரவாயிருந்தவள் என பவுல் கூறுகிறார். இங்கே பவுல், பெபேயாளின் வாழ்க்கை தரத்தைக் கூறுகிறார். இந்த ஆதரவாயிருந்தவள் என்பதன் அர்த்தம், மூலபாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டால், ‘தங்கள் ஆஸ்திகளால் பிறரை தாங்கியவள்’ என்பதாகும். அதாவது, தன் ஆஸ்தியை விற்று, மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்புள்ள பெண். ஒருவேளை இந்த பெண், நல்ல பணக்கார பெண்ணாக இருந்திருக்கலாம் எனவும், அதே வேளையில் ஒரு விதவைப் பெண்ணாக இருந்திருக்கலாம் எனவும், அறிஞர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், இவளை பவுல் லெட்டர் கொடுத்து விட அனுப்பி இருக்கலாம் என்கின்றனர். அதாவது அவள் ஒரு independent women ஆக இருந்திருக்கலாம். எது எப்படியோ, ‘உங்களிடம் வந்தவள் சாதாரண பெண் அல்ல, அவள் பலபேருக்கு தானதர்மம் செய்யும் பெண்’ என பவுல் கூறுகிறார்.

புரிந்து கொண்டவள்

பவுல் ஒரு பெண்ணிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் என்றால், அந்த கடிதத்தின் உள்ளே உள்ள ஒவ்வொரு வசனங்களையும் கேட்டு ஏற்றுக்கொண்டவளாகத்தான் அவள் இருக்க வேண்டும். எனவே பெபேயாள் என்பவள், நிச்சயமாக மூல உபதேசங்களை பவுலின் அருகே அமர்ந்து, கேட்டு ஏற்றுக்கொண்டவளாகத்தான் இருந்திருப்பாள். வேதபுரிதல் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கும். கெங்கிரேயா சபையைப் பற்றி, தனது எந்த நிருபத்திலும் பவுல் கூறவில்லை. எப்படியும் அருகே இருக்கும் கொரிந்து பட்டணத்துக்கு இரு கடிதங்கள் வந்தபோது,(1,2 கொரிந்தியர்) அது நிச்சயமாக கெங்கிரேயா சபைக்கும் வந்திருக்கும். ஆனால், அந்த கடிதத்தில், கெங்கிரேயா பற்றி எதுவும் கூறாமல் இருப்பதால், “பெபேயாள் சபையை மிகவும் நல்ல முறையில் நடத்தி இருப்பார். அங்கே குற்றம் கண்டு பிடிக்க எதுவும் இல்லை. நல்ல தலைமையின் கீழ் இருந்ததால், பவுல் கெங்கிரேயா சபைக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என கூறுகின்றனர். “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி அவளை ஏற்றுக்கொள்ளுங்கள்” என பவுல் கூறியிருக்கும் காரணம், பெண் என அவளை உதாசீனப்படுத்தி விடாதேயுங்கள். அவளை பரிசுத்தவானை ஏற்றுக்கொள்வதைப்போல ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

பெபேயாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்வது?

பெபேயாளின் தலைமை என்பது, நல்ல தலைமையாக இருந்தது. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணாக இருந்தாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்த பெபேயாள், தடைகளை உடைத்து, முன்னேறுபவளாகத்தான் இருந்திருப்பார். என்னதான், பிற தெய்வத்தின் பெயரை சுமந்தவளாக இருந்தாலும், தேவனால் எடுத்து பயன்படுத்தப்பட்ட சில பெண்களில் ஒருவராக இருப்பவள் பெபேயாள். தன்னிடமிருப்பதை கொடுத்து உதவினாள்.

இன்று பெண்களை ஒடுக்கும் கூட்டம் ஆணாக இருக்க அவசியமில்லை. ஒரு பெண்ணே பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் காலம் இது. எது என்ன நடந்தாலும், பெபேயாளைப் போல முடிந்தவரையில் ஏழைகளுக்கு உதவி செய்வோம். வேதத்தை படித்து, நன்றாக புரிந்து கொண்டு அதன்படி நடப்போம். நிச்சயமாக கர்த்தர் நம்மை நாம் இருக்குமிடத்தில் தலைமையாக மாற்றுவார்.

Similar Posts

  • |

    Day 42 (11-02-2025)

    Scripture Portion: Exodus 36 – 38 யாத்திராகமம் 36 1அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள். 2பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான். 3அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை…

  • |

    Day 101 (11-04-2025)

    Scripture Portion: 1 Samuel 13-14 1 சாமுவேல் 13 1சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, 2இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். 3யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும்…

  • |

    Day 198 (17-07-2025)

    Scripture Portion: Isaiah 18-22 ஏசாயா 18 1எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும், 2கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள். 3பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். 4நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என்…

  • |

    Day 217 (05-08-2025)

    Scripture Portion: 2 kings22-23, 2 chronicles 34-35 2 இராஜாக்கள் 22 1யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள். 2அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். 3ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி: 4நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக்…

  • |

    Day 346 (12-12-2025)

    Scripture Portion: Acts 20:4-38, 21, 22, 23 அப்போஸ்தலர் 20 (4-38) 4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையனாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். 5இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். 7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள்…

  • |

    Day 282 (09-10-2025)

    Scripture Portion: Matthew 12:1-21, Mark3, Luke 6 மத்தேயு 12 (1-21) 1அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 2பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 5அன்றியும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *