பண்டிகைகள்–11 (எக்காள பண்டிகை)
எக்காள பண்டிகை (Teshuvah) தேவன் வேதத்தில் கொண்டாடச்சொல்லிய 7 பண்டிகைகள் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். லேவி 23ல் மொத்தம் 7 பண்டிகைகள் கொண்டாடச் சொல்லி இருப்பார். அதில் 3 பண்டிகைகளுக்கு, யூத ஆண்கள் எங்கிருந்தாலும் எருசலேமுக்கு வரச் சொல்லியிருப்பார். அந்த 3 பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை. பஸ்கா என்பது, நாம் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தைக் குறிக்கிறது. பெந்தெகோஸ்தே என்பது, சீயோன் அனுபவம், பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டதைக் குறிக்கிறது. கூடாரப் பண்டிகை என்பது, எழுப்புதல், கடைசி…
