|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 11

Day – 11 (11- டிசம்பர், 2023)

நல்ல சபை தந்தீர் நன்றி

நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும் தலை இயேசு. இதுதான் சபையின் விளக்கம். உலகம் முழுவதிலும் உள்ள சபை எல்லாமே இயேசுவின் அங்கம் தான். ஆனால் நாம் தான் அதைப் புரிந்து கொள்ளாமல், என் சபை பெரிது, உன் சபை பெரிது என்று சண்டை இட்டுக் கொள்கிறோம்.

இன்று நாம் நமக்கு தேவன் கொடுத்த சபைக்காக நன்றி சொல்லப் போகிறோம். எத்தனையோ சபைகள் இருந்தாலும், தேவன் நமக்கென்று ஒரு நல்ல சபையைக் கொடுத்திருக்கிறார். அது பாரம்பரிய சபையாக இருக்கலாம், ஆவிக்குரிய சபையாக இருக்கலாம். ஆனால், அந்த இடம் நாம் இயேசுவுடன் உறவாட நம்மை வழி நடத்துகிறது அல்லவா. வேத விளக்கங்கள் அறிய உதவும் இடமாக நம் சபை இருக்கிறதல்லவா! அனேக ஆவிக்குரிய நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா! அதற்காக நன்றி சொல்வது அவசியம் அல்லவா!

நாம் சபையில் ஏராளமாக ஜெபிக்கிறோம். தேசத்துக்காக ஜெபிக்கிறோம். நம் தேவைகளுக்காக ஜெபிக்கிறோம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கிறோம். அனேக பாடல்கள் பாடுகிறோம். சாட்சிகள் கேட்கிறோம். விசுவாசம் தட்டி எழுப்பப்படுகிறது. சோர்ந்து போன நேரத்தில் எல்லாம், வார்த்தைகள் பேசுகிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

இப்போது யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை சபை என்ற கட்டடம் இல்லை. ஆதிகால அப்போஸ்தலர் போல, ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நம் கையில் வேதாகமம் உள்ளது. நாமே வேதத்தை படித்து கொள்ள வேண்டும், ஏனெனில், சபை கிடையாது. நாம் எந்த அளவு வேத அறிவில் இருப்போம் என்று யோசித்து பார்ப்போம். சின்ன வயதில், சண்டே கிளாஸ் போயிருக்க மாட்டோம். வேதாகம கதைகள் நமக்கு தெரிந்திருக்காது. வேதம் வாசித்தாயா? என்று கேட்க யாரும் இல்லை. எனவே வேதம் வாசிக்க தோணாது. எப்படித்தான் கர்த்தரிடம் நெருங்க முடியும்? ஆதிகால அப்போஸ்தலர்கள், அதனால் தான் அவர்கள் போகிற இடமெல்லாம் சபையை நிறுவினார்கள். இன்று நமக்கு சபை இருக்கிறது, நம்மை கண்காணிக்க போதகர் இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 12

    Day – 12 (12- டிசம்பர், 2023) தெய்வீக பாதுகாப்பிற்காக நன்றி தேவன் நம்மை எவ்வளவோ கிருபையாக, அருமையாக பாதுகாத்து வருகிறார். அதற்காக நன்றி சொல்வது நமது கடமை. இந்த 2023 முழுவதும், கிருபையாக பாதுகாத்து வந்தார் அல்லவா! நம் பிள்ளைகளை, நம் குடும்பத்தாரை தேவன் தான் பாதுகாத்தார் என்பது நிச்சயம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஒரு மனிதன் கர்த்தரை ஏற்றுக் கொண்டான் என்றாலே அவன், மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்துவிட்டான். அப்போதே தெய்வீக பாதுகாப்பிற்குள்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

    Day – 14 (14- டிசம்பர், 2023) புதிய ஆரம்பங்களுக்காக நன்றி இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம். தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த…

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *