|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

Day – 17 (17- டிசம்பர், 2023)

சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி

1 கொரிந்தியர் 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

Tamil Easy Reading Version
எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.

நமக்கு அது தவறு என்பது தெரியும். ஆனால் அதை நோக்கி இழுக்கப்படுவோம். நாம் கஷ்டப்படலாம், அல்லது இன்னொருவரை கஷ்டப்படுத்தலாம், அல்லது இருவருமே கஷ்டப்படலாம். ஆனால் நம்மால், No சொல்ல முடியவில்லை. அதுதான் சோதனை. தவறு என்பது தெரிந்தாலும், நாம் செய்வது தான் சோதனையில் தோற்றுப்போவது.

இந்த வசனத்தில், சோதனையில் இருந்து விடுபடும் வழியை தேவன் காட்டுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே நமக்கு சோதனை வருகிறது என்றால், அதில் தப்பும் வழி அதற்கு முன்பாகவே நமக்கு அருகில் இருக்கும். அதை உணர்வதற்கு பரிசுத்த ஆவியானவர் தேவை.

கெட்ட குணம் என்பதை விட சோதனை என்பது அதிகமாக நம்மை ஆட்கொள்ளும். ஒரு மனிதனை எதிரில் பார்க்கிறோம், அவனை பார்த்து வெளியே சிரித்தாலும், மனதினுள் கோபம், வெறுப்பு, கசப்பு, பழி வாங்கும் வெறி, பொறாமை எல்லாம் இருக்கிறது அல்லவா! இதுதான் நமக்கு வந்த சோதனை. இந்த சோதனையில் நாம் வெற்றி பெற்றோமா? ஒரு குறிப்பிட்ட காலம் கடந்ததும் எல்லாம் மறந்து போய்விடும் என்று சொல்கிறார்கள். அது உண்மை அல்ல, நம் இருதயத்தில் வேத வசனம் உள்ளே போக போக, நாம் கசப்பை மறந்து வெளியே வந்துவிட்டோம். நமக்குள் ஆவியானவர் கிரியை செய்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம்.

சிலர் எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். நம் குணம் அப்படி அல்லவே. நாம் பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம் அல்லவா! இது தான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.

ஒரு ஆண் அல்லது பெண், தவறான நோக்கத்தில் நம்மிடம் பழகினால், நம் இருதயத்தில் மணி அடிக்கிறது அல்லவா! நாம் சீக்கிரமாக, அவரை விட்டு வெளியே வருகிறோம் அல்லவா! ஏனெனில் அந்த நேரத்தில் சோதனைக்கு தப்பும் வழி செயல்பட்டிருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

நாம் எல்லாருமே சமூக வளைதளங்கள் உபயோகிப்பவர்கள். திடீரென, இச்சையை தூண்டும்விதமான படம் வந்தால், உடனே பதறி வெளியே வந்து விடுகிறோம் அல்லவா! உள்ளே சென்று பார்க்கவில்லையே. அதுதான் சோதனைக்கு தப்பும் வழி. அதற்காக நன்றி சொல்வோம்.

ஒருவேளை ஏதோ ஒரு அடிமைத்தனத்தில் இருந்தால் கூட, கர்த்தர் அப்படியே நம்மை கைவிடவில்லையே. அடுத்த தருணம் கொடுத்து வெளியே கொண்டு வந்தார் அல்லவா! ஒரு பாவம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து, அனேகம் தரம் நாம் விழுந்தாலும், ஆண்டவர் சோர்ந்து போகாமல் நம் மேல் நம்பிக்கை வைத்து தூக்கி விடுகிறார் அல்லவா! நன்றி சொல்வோம்.

ஒரே ஒரு காரியம் தான். வேதம் வாசிப்பவராக நாம் இருந்தால், சோதனையைப் பார்த்து நாம் பயப்படவே வேண்டாம். சோதனைக்கு தப்பும் வழியே தேவனுடைய வார்த்தை தான். நாம் வேதம் வாசிக்கிறோம் அல்லவா!  அதற்காக நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 12

    Day – 12 (12- டிசம்பர், 2023) தெய்வீக பாதுகாப்பிற்காக நன்றி தேவன் நம்மை எவ்வளவோ கிருபையாக, அருமையாக பாதுகாத்து வருகிறார். அதற்காக நன்றி சொல்வது நமது கடமை. இந்த 2023 முழுவதும், கிருபையாக பாதுகாத்து வந்தார் அல்லவா! நம் பிள்ளைகளை, நம் குடும்பத்தாரை தேவன் தான் பாதுகாத்தார் என்பது நிச்சயம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஒரு மனிதன் கர்த்தரை ஏற்றுக் கொண்டான் என்றாலே அவன், மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்துவிட்டான். அப்போதே தெய்வீக பாதுகாப்பிற்குள்…

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *